வணக்கம்

சிந்துபுரம் ஒரு அழகிய கிராமம். நாம் அனைவரும் அன்புடன் வாழ்கின்ற வளமிகு பிரதேசம். கால சுழற்சிக்கு ஏற்ப மாற்றமடையும் வாழ்க்கை சக்கரத்தில் நாம் எல்லோரும் சுழல்கின்ற போதும் எமது ஊரின் மண் வாசனை மறக்க முடியாத ஒன்றே. நாம் எல்லோரும் ஊரினை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்ற போதும் நாம் சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய கோயில் வீதிகளும் விளையாட்டுமைதானங்களும் வயல் வெளிகளும் எமது மனத்திரையில் இடை இடையே வந்து நினைவாக நின்றுமறையாமல் பூரிப்பை ஏற்படுத்துகின்றன.
கிராம வளர்ச்சி எனும் போது நடந்த பலவற்றையும் தற்போது நடந்து வருகின்ற பல செயல்களை பற்றியும் அதற்காக உழைப்பவர்களையும் உழைக்கின்றவர்களையும் குறிப்பிடலாம். இவ் இணையதள உருவகத்தின் நோக்கம் எம்முடன் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற சேவை நோக்கர்களின் பெருமையை பறை சாற்றுவதும் கிராம பாரம்பரிய கலைகள் பற்றி எடுத்தியம்புவதும் எமது மக்களின் உணர்வுகளுடன் உறவாடும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் அறிந்து உவகை அடைவதற்கும் ஆகும். இதன் மூலம் நாம் அனைவரும் ஓர் இறுக்கமான அன்புக் கட்டுக்குள் வரமுடியும். இந்த வகையில் எமது மக்கள் தற்போது நாட்டிற்கு நாடும் இடத்திற்கு இடமும் பரந்துபட்டு வாழ்ந்து வருவதனால் நாம் எல்லோரும் ஒவ்வொருவரினதும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வது கடினமாக உள்ளது. எனவே இதனை எமது இணைய நிர்வாகம் கருத்திற் கொண்டு விளம்பரங்கள் பகுதியூடாக ஒவ்வொரு மக்களினுடைய சுக துக்க நிகழ்வுகளை காட்சிபடுத்த எல்லோரும் அதனை அறிந்து கொண்டு ஒருங்கிணைந்த வாழ்வினை வாழ ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைய நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளை எமது ஒவ்வொரு நாட்டில் உள்ள முகவர்களிடமும் கையளிக்கலாம்.
முகவர்கள்பற்றிய விபரம் இத்தளத்திலேயே காணப்படுகின்றது. அவர்களை உங்கள் நாட்டிலேயே தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த இணைய தளம் மேலும் பல தகவல்களுடன் உலா வர உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஊர் பற்றிய விபரங்கள் உறுதிப்படுத்திய ஆவணங்களுடன் உங்களிமிருந்து பெறப்பட்டு இத்தளத்தில் அரங்கேற்ற உத்தேசித்துள்ளோம். எமக்கு இவற்றினை தெரிவிக்க விரும்பின் எமது மின்னஞ்சல் மூலம் எமது முகவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

இணைய நிர்வாக உறுப்பினர்கள்

Email This Page

Who's Online

  • 2 Members.
  • 2 Guests.
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

காலநிலை

Jaffna
33°C
Chennai
32°C
London
C
Paris
C
Toronto
C
Montreal
C

வானொலிகள்

இணைய தளங்கள்