காந்திஜீ சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் காந்திஜீ முன்பள்ளி கடந்த இருவருடங்களாக அரச மற்றும் தனியார் ஆதரவுடன் நடாத்தப்பட்டு வருகிறது.அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டம்இஅனுபவமிக்க ஆசியர்கள் என
மிக நேர்த்தியுடன் நடைபெற்று வருவதால் பெற்றோர்களின் ஆதரவு பெருகிவரும் இவ்வேளையில் இமேலும் சில திட்டங்கள் மூலம் இந்த பாடசாலையின் கல்வித்தரத்தை முன்னேற்ற பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரான்ஸ் சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு நிதியுதவி மற்றும் மதிய உணவு அனுசரனையையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.அடுத்த கட்டமாக முன்பள்ளி மாணவர்களுக்கான ஆங்கில பாடநெறியை சிந்துபுரம் அபிவிருத்திக்கழகம்இ பிரான்ஸ் வாழ் உறவுகளின் நிதிஉதவியுடன் ஆரம்பித்துள்ளது. அதற்கான முதற்கட்ட நிதி பிரான்ஸ் வாழ் உறவுகளிடத்தில் திரட்டப்பட்டு ஒருக்கிணைப்புகுழுவின் மேற்பார்வையில் சிந்துபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளிக்கான ஆங்கிலக்கல்வியானது துறைசார் நிபுணத்துவம் மிக்க PIONEERHOUSE எனும் கல்வி நிறுவத்தினரால் நடாத்தப்பட உள்ளது. இந்நிறுவானமானது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் சகிதம் தனது விசேட ஆங்கிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்களை நடாத்தும்.

அதனடிப்பைடையில் அந்நிறுவனத்துடன் காந்திஜீ முன்பள்ளி நிர்வாகம் பொது அமைப்புகளின் ஒன்றியம் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இரண்டு வருடங்கள் நடைமுறையில் இருக்கும். இந்த முன்பள்ளிச் சிறார்களின் ஆங்கில அறிவு முன்னேற்றத்தை பொறுத்து ஏனைய வகுப்புகளுக்கும் ஆங்கிலப்பாட நெறியை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Email This Page

Who's Online

  • 0 Members.
  • 4 Guests.
May 2013
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

காலநிலை

Jaffna
33°C
Chennai
32°C
London
C
Paris
C
Toronto
C
Montreal
C

வானொலிகள்

இணைய தளங்கள்