சிந்தபுரம் பொது அமைப்புகளின் தயவான வேண்தலுக்கு இணங்க சிவகுரு பாலகிருஸ்ணன் ( EPDP) அவர்களின் பணப்புரையின் பெயரில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. அந்த நடவடிக்கையின் அமைவாக கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் சந்தைபகுதியிலும் கல்வில்வீதியிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதனைத்தொடர்ந்து மின்விளக்குகள் பற்றாக்குறையால் எனையபகுதிகளுக்கு பொருத்ப்படவில்லை. தற்போது சிவன்கோவிலிலிருந்து வட்டுசிவன் தொலைத்தொடர்பு நிலையம் வரையான வீதிக்கு பெரிய வலு மின்விளக்குகள் இலங்கை மின்சாரசபை பொருத்தியுள்ளது. இம் மின்விளக்குகளை வட்டுசிவன் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரும் சிவன்கோவில் தர்மகத்தாவும்மான க.சுமந்திரன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இது எமது கிராமத்தின் பாதிபகுதிக்கு ஒளியுட்டப்பட்டுள்ள செயற்பாடாக அமைந்துள்ளது. இதற்க்காக பொதுஅமைப்புகள் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் க.சுமந்திரன் அவர்களுக்கும் இலங்கை மின்சாரசபையினருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.











