இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான பக்கத்தினை ஆராய்ந்து அதை ஆதாரித்து நிற்பதில்லை. மாறாக நடுநிலை என்ற பெயரில் மதில் மேல் பூனையாகவே இருந்து  தப்பித்துக்கொள்ளத்தான் தனியாட்கள் பார்க்கிறார்கள்.

அடிப்படையிலேயே எதிர்பை காட்டி நின்றால் சூழ்சிகளை மழுங்கடித்துவிட முடியும் என்ற விடயத்தில் எமது சமூகத்திற்கு உடன்பாடில்லை. இதுதான் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக விடயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது.

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் பிரச்சனையை பற்றி ஆராய முன்னராக சில கடந்தகால விடயங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.

01. பொதுச்சந்தையில் உள்ள பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்று பிரச்சனையை உருவாக்கி அதன் விளைவாக பொதுச்சந்தையையே பிரதேசசபைக்கு தாரைவார்த்து இழந்த கதை.

02. கேணியில் உள்ள பெயர்பலகையை நீக்க பிரச்சனையை உருவாக்கி  அதன் விளைவாக் கேணியையே பிரதேச சபைக்கு தாரைவார்த்து இழந்த கதை.

03. கிராம அபிவிருத்திச் சங்கம் பெயர்மாற்ற பிரச்சனை உண்டு பண்ணி கடைசியில் கிராம அபிவிருத்தி சங்கமே இல்லாத கிராமமான கதை.

04. கல்வி நிலையாமான கலைவாணி கல்வி நிலையத்தை அரசியல் மற்றும் பிரச்சார விழா நிலையமாக்கி பலரது எதிர்ப்புகளை சம்பாதித்து இறுதியில், அதை அடியோடு அழித்து போன கதை.

05. எமது கிராமத்தின் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் தர்மகர்த்தாகளுக்கிடையில் உருவான பணக்கையாடலை மறைக்க சிந்துபுரம், சிவன்கோவிலடி பிரச்சனை உருவாக்கப்பட்டது. இன்று வரை அதன் கணக்கு வழக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை. இறுதியில் கொள்ளை போனது பொதுமக்கள் பணம்.பெயர்ப்பிரச்சனையில் அமிழ்ந்து போனது பெருங்கொள்ளை…

இப்படி அழிந்து போன கதைகள் ஏராளம்,  ஆனால் காரணம் ஒன்றே ஒன்றுதான்

“தங்கள் தேவைக்கும் தங்களுக்கு இசைவாகவும் அவை எதுவும் நடக்கவில்லை என்பதுதான்”

இங்கு சிந்துபுரம் என்ற பெயரை மாற்றி சிவன்கோவிலடி என்ற பெயராக்க வேண்டும் என்பது இவர்களது நோக்கமே அல்ல என்பது தான் உண்மை.

தங்கள் தேவைக்காக சிவன்கோவிலடி எல்லாவகையிலும் வளைந்து கொடுக்கிறது. சிந்துபுரம் என்ற பெயர் சிவன்கோவிலுக்கு எதிரானது என்ற ஒரு பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களே தவிர சிவன்கோவிலடி என்பது இவர்கள் எண்ணமே அல்ல.

மாறாக சிந்துபுரம் என்பது இவர்கள் தேவைக்கு வளைந்து கொடுக்கும் என்றால் சிந்துபுரத்தை வைத்து சிவன்கோவிலுக்கு எதிராக பிரச்சனையை உருவாக்கி கோவிலிலேயே பங்கு கேட்டு முன் உறுதி முடித்திருப்பார்கள்.

சிலசமயம் வருங்காலத்தில் அதுவும் நடக்கலாம். ஆச்சரியம் இல்லை. சிவன்கோவிலடியோ சிந்துபுரமோ எப்படி இருக்கவேண்டும் என்பதை யார் தமக்கு வால் பிடிக்கிறார்கள் என்பதை வைத்தே இவர்கள் தங்கள் எல்லா நகர்வையும் செய்கிறார்கள்.

இவர்களின் சொத்து சொகுசு அதிகாரப் பசிக்கு இரையாகிப்போன நிறுவனங்கள் சங்கங்கள் வரிசையில் இன்று வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகமும் குறிவைக்கப்படுகிறது என்பது தான் நிதர்சனம்.

ஆனால் நாம் இன்னமும் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்குள் சிந்துபுரம் வந்ததா சிவன்கோவிலடி வந்ததா பிரச்சனை என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோமே தவிர ஏன் கழகத்தை இழந்தோம் எப்படி இழந்தோம் என்பதை பற்றி விவாதிக்க மறந்திருக்கிறோம்.

வெளிநாட்டு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகங்கள் தங்கள் தாய் கழகத்தின் நிலைமைகளை பற்றிய சிந்தனையோ அதை முன்னேற்ற அக்கறையோ கொள்ளவில்லை என்பது உண்மை. தற்போது ஏற்பட்டிருக்கும் கழக தடை தொடர்பான பிரச்சனையைக் கூட வெளிநாட்டுக் கழகங்களும் அதன் அங்கத்துவத்தர்களும் சிந்துபுரம் சிவன்கோவிலடி என்ற பிரச்சனையாகவே  பார்க்கிறார்கள், தமக்குள் விவாதிக்கிறார்கள். அதுதான் நமது சமுகம் விடும் தவறாகவும் கொள்ளை அரசியல் வாதிகளுக்கும் ஆதிக்க வெறியர்களுக்கும், அவர்கள் கையாட்களுக்கும் சாதகமாக அமைகிறது.

அதையும் தாண்டி இருக்கும் சூழ்ச்சிகளை யாரும் ஆராய்ந்து எதிர்க்க தயாராக இல்லை. இந்த நிலையில் நமது சமுகம் நிடிக்குமாயின் வெகு விரைவில்  எஞ்சியிருக்கும் சில  பொதுச் சொத்துக்களையும் பொது  நிறுவனங்களையும் இழக்க நேரிடும் என்பது திண்ணம்.  கோவில்களாவும் இருக்கலாம்… எதுவாகவும் இருக்கலாம்….

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற...