இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் இணையம் .

தற்போதைய இந்த தடை பற்றியும் கழகத்தின் ஏனைய செயற்பாடுகள் பற்றியும் இணையம் கேட்டபோது அவர் அளித்த விளக்கத்தின் சாராம்சம் வருமாறு..

கடந்த இரண்டு வருடமாக அரசியல் பிரமுகர் ஒருவரின் கைப்பாவையாக இருந்த கழக  நிர்வாகம் ஊரில் பெரும் அதிர்ப்தியையே சம்பதாதித்திருந்தது. அந்தக் காலப்பகுதியில் வெளிப்படைத்தன்மையான நிர்வாக நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இந்த ஆண்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின் பழைய நிர்வாகம் முறைப்படி ஆவணங்களையோ ,கணக்கு வழக்குகளையோ புதிய நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கவில்லை.

அத்தோடு கடந்த காலத்தில் கழகத்தின் விளையாட்டு உபகரணங்களை பேணிப் பாதுகாக்க முறையான இடவசதி செய்யப்பட்டாதால் பெருவளவான உபரகரணங்கள் பழுதான நிலையில் இருப்பாகவும் கூறினார்.

மேலும் இடைக்கால தடை பற்றி கருத்து தெரிவிக்கும் போது ;

கழகத்திற்கு நிர்வாக ரீதியாக சம்பந்தப்படாதவர்கள் முறைகேடாக பொருத்தமற்ற முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை பிரதேச சபையில் ஒப்படைத்ததை வைத்து இந்த தடை விதிக்கப்படிருப்பதாகவும. பிரதேச செயலாளாருடனான சந்திப்பில் தடைக்கான காரணங்களை பகிரங்கப்படுத்தவில்லை.

கொடுக்கப்பட்ட முறைப்பாடு சம்பந்தமாக எம்மிடம் விளக்கம் கேட்காமலேயே பிரதேச  செயகம் தடையை அறிவித்தது என்றும் தெரிவித்தார். ஏற்கனவே பிரதேச செயலகத்தில் ”வட்டு மேற்கு” என விலாசமிட்ட ஏகமனதாக முடிவெடுத்திருந்தாகவும் ,ஆனால் வேண்டுமென்றே கழகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கோடு பெயர்ப் பிரச்சனையை கழகத்திற்கு சம்பந்தபடாதவர்கள் உண்டு பண்ணுவதாகவும் கூறினார்.

அத்தோடு கடந்த பல வருடங்களாக கழக மைதானம் சம்பந்தமான வழக்கு விடயங்களை குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞர் கவனித்து வந்ததாகவும் அந்த வழக்கறிஞரையும் குறிப்பிட்ட அரசியல் வாதி மாற்றி தனக்கிசைவாக ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கழக நிர்வாகத்தில் இல்லாத நபர்களை கொண்ட வழக்கு நடத்துனர் குழுவை தமது நிர்வாகம் கலைத்ததில் இருந்தே அவர்கள் கழகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கழகம் முறைப்படி இயங்க வில்லை என்ற சூழலை உருவாக்கி  நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய நில ஆவணம் மற்றும் ஏனைய ஆவணங்களை அவர்கள் மறைத்து வருவதாகவும் அவர் எம்முடனான உரையாடலில் கருத்து தெரிவித்தார்.

ஒரு ஊடகம் என்ற வகையில் எமது இணையம் ஆரம்பத்தில் இருந்தே நியாயமான முறையில் நடந்து வருகிறது. குறிப்பிட்ட தரப்பால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான பதிலை தெரிவிக்க வேண்டியது மற்றைய தரப்பின் கடமையாகும். அந்த இருதரப்பிற்கும் எமது இணையம் ஒரு ஊடகமாக மட்டுமே செயற்படுகிறது என்பதை  புரிந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து எமது இணையத்தில் பதிவிடப்படும் செய்தியை நீக்கும் படி கூறுவது சந்தேகங்களை மேலும் வலுக்கவே செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கழக மைதான நில விடயத்தில் இதுவரை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. வழக்கறிஞரை மாற்றியதற்கான முறையான காரணங்களும் நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படவில்லை. இதிலிருந்தே சந்தேகங்கள் மக்களிடத்தில் வரத்தொடங்கியது. காலத்திற்கு காலம் எமது இணையமும் இது சம்பந்தமான எச்சரிக்கையை விடுத்தே வந்துள்ளது.

அத்தோடு எமது இணையம் வலிந்து யாருடைய பெயரையும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தவில்லை. பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்ட கடிதத்தை மட்டுமே வெளியிட்டிருந்தது. அந்த கடிதத்தில் சேர்க்கப்பட்ட பெயர்கள் அதை வழங்கியவர்களாலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களிடத்தேயே அதற்கான விளக்கத்தை கேட்பது  சரியானதாக இருக்கும்.

குற்றஞ்சாட்டப்படுபவர்கள் எமது கருத்துச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் காரியங்களை விடுத்து தாம் நியாயமானவர்கள் என்பதை வெளிப்படுத்த சகல ஆவணங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும். அப்படி சகல ஆவணங்களும் வெளிப்படுத்தப்படுமாயின் அவற்றை எமது இணையம் பிரசுரிக்க தயாராகவுள்ளது.

பொது வாழ்வில் இருப்பவர்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருத்தல் என்பது அவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பதை உறுதி செய்ய உதவும் என்பது தான் எமது கருத்து.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற...