இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கழக விசுவாசிகளுக்கு  பெரும் அதிர்ச்சியை  உண்டு பண்ணியுள்ளது.

சங்கானை பிரதேச செயலர் திரு .சோதிநாதன் அவர்களினால் இந்த தடை உத்தரவு  19.10.2016 திகதியிட்ட கடிதம் ஒன்றின் மூலமே  பிறப்பிக்கப் பட்டுள்ளது . இது பற்றிய விரிவான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

image-0-02-06-b6d589b55a1c0f0ac43b5731bd6b00361c211def2f51ffa5b2997a782fe1bb0a-v

முறைப்பாடு செய்தவர்கள் யார்..?

மைதானத்தில் விளையாட்டுடன் சம்பந்தமே இல்லாதவர்கள். ஊரின் குழப்பவாதிகள் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர்கள். இவர்களின் முறைப்பாட்டை பெரும் மதிப்பளித்து  ஏற்று அதனடிப்படையில் தடை உத்தரவை பிரதேச செயலகம் பிறப்பித்துள்ளது. நிர்வாகம் தமக்கு இசைவாகவும் தங்கள் தலைமையிலான அரசியல் பிரமுகர் அவர்களின் கிழ் படிந்து நடக்கவேண்டும் என்பதுமே நோக்கம். விளையாட்டை தடை செய்வதால் இவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை. இவர்களின் காரியங்கள் இலகுவாக சாதித்துக் கொள்ள வசதியானதாக இருக்கும் என்பது மட்டுமே உண்மை.

இவர்களின் பின்ணணியில் யார்..?

விளையாட்டுக் கழகத்திற்கு சம்பந்தமே இல்லாத  ஒரு சிலர் கொடுத்த முறைப்பாட்டை ஏற்று அதை பெரியதாக்கி தடை உத்தரவு பிறப்பிக்க வைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர் அந்த முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரான அரசியல் வாதி  , கழக காணியை தனது தகப்பனாரின் பெயரில் முன்னுறுதி எழுதி அன்பளிப்பாக கொடுப்பதாக கதையளந்து,இன்று விளையாட்டுக் கழகத்திற்கு தடையை விதிக்க வைத்துள்ளார்.  இனி   இயங்காத  விளையாட்டுக் கழக  மைதானம் என்று காரணம் காட்டி  காணியை தம்வசப்படுத்திக்கொள்ளும்   நோக்கோடு   இந்த தடை நாடகம்  நடத்தப்பட்டிருப்பதாகவே எமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இது தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு கழக விசுவாசிகள் குறித்த உறுப்பினர் மீது கடும் கோபங்கொண்டிருப்பதாக தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

விளையாட்டுக்கழக நிர்வாகம்  பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டது , அதனை அரசியல் பின்புலத்துடன்   அடியாட்களை  கொண்டு குழப்பி  அதனை  இயங்கவிடாமல் இடைநிறுத்தி, தமது எடுபிடிகளை கொண்டு புதிய நிர்வாகத்தை அமைக்க முற்படுவது சிறந்த ஜனநாயகமாக இருக்கமுடியாது.கடந்த இரு வருடங்களாக இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே பொம்மை நிர்வாகம் இயங்கி வந்தது. அதன் பலாபலன் தான் இன்று தடை உத்தரவில் கொண்டு போய் விட்டிருப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

”வட்டுமேற்கு வட்டுக்கோட்டை ” என்று கடிதத் தலைப்பை பாவிக்க   நிர்வாகம் முற்பட்டமையை சாக்காக  வைத்து  இந்த தடையுத்தரவை  பெற்று, தனது  கைங்கரியத்தை நிறைவேற்றுக்கொள்ள முற்பட்டிருக்கிறார் குறித்த அரசியல் வாதி. விளையாட்டுக்கழகம் என்பது ஒரு பொதுவான அமைப்பாகும்  அதற்குள்  சிவன்கோவிலடி என்பதை புகுத்தி     பிரச்சனையை உண்டு பண்ணி தன் விருப்பத்தை நிறைவேற்றுவது தான் திட்டமாகும். உண்மையில் ”சிவன்கோவிலடி” என்பது அவர் நோக்கமில்லை  பிரச்சனை வரவேண்டும் என்பதற்காகவே  ”சிவன்கோவிலடி” வலிந்து திணிக்கப்படுகிறது என்பது தான் உண்மை.வட்டு மேற்கு என்பது யாருக்கும் பாதிப்பில்லாத அதே நேரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் பெயர் என்பது வெளிப்படையான விடயம்.கிராமப் பெயர் விடயத்தில் கழக நிர்வாகம் எடுத்திருக்கும் நிலைப்பாடு கிராமத்தின் அமைதிக்கு அவசியமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தடை உத்தரவை பிறப்பித்தவர் யார்.?

“சங்கானை பிரதேச செயலாலர் அவர்களின் நடுநிலமை என்ன என்பதை நாம் எமது கிராமத்தின் முன்னைய பல பிரச்சனைகளில் நன்கு அறிவோம். வேலை வாங்கி கொடுத்த விசுவாசத்தில் அவர்களின் ஆட்டங்களுக்கு எல்லாம் இவர் தலையாட்டும் பொம்மையாக இருக்கிறார்.” என்று வட்டுக்கோட்டை மக்கள் சாதாரணமாக முணுமுணுப்பதை காணலாம்.

குறித்த பிரதேச செயலாளரை கழகத் தலைவர் பலமுறை தொடர்பு கொண்டு கதைத்திருந்தும் அவர் தனது விசுவாசத்திற்கமைய செயற்பட்டிருப்பது தான் உண்மை.

இது தொடர்பாக வெளிநாட்டு உள்நாட்டு கழக விசுவாசிகள் தெரிவித்துள்ள கருத்துகள்……

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் இன்று நேற்று வந்ததில்ல வலிகாம் மேற்கில் தோற்றுவிக்கப்பட்ட  பழம்பெரும் கழகங்களில் ஒன்று. இதுவரை  பல  அரிய சாதனைகளை நிலைநாட்டியிருக்கிறது. தனக்கென சிறப்பான வரலாறையும்  கொண்டது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்

யாரும் முட்டாள்கள் இல்லை. கல்வியறிவு அற்றவர்களும்  இல்லை. எமக்கும் ”அரசியல், இந்த ”விசுவாச கையூட்டல்”   தொடர்பான விடயங்கள்   தெரியும்.  தடை செய்வது என்பது மிகவும் கண்டனத்துக்குரிய விடயம். கழத்தில் விளையாடுபவரகளுக்கே நிர்வாகம். ஆனால் விளையாட்டு என்றால் என்னவேன்றே தெரியாத சில வீசக் கிருமிகள் கொடுத்த முறைப்பாட்டை வைத்து கழக செய்பாடுகளை முடக்குவது முட்டாள்கள் தலையில் மிளகு அரைப்பது போன்றது.

நியாயமான முறையில் முரண்பாடு இன்றி பக்கசார்பற்ற முறையில் பிரச்சனைகளை தீர்க்கப்பட வேண்டும். ஆனால் ஒரு பக்கம் சாய்ந்து விசுவாசத்தை காட்டுவது என்பது  அரச நிர்வாக பொறுப்பிற்கு  மதிப்பானது அல்ல.  இது எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொருத்திருந்து  பார்த்து நாம் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்போம் என அந்த கழக விசுவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...