இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

உறுதியான நிலையில் வட்டுக்கோட்டை விழையாட்டுக் கழகத்திற்க்கு எதுவும் இல்லை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை கழக நிர்வாகத்திற்கு எதிராக கையெழுத்து துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆண்டுக்கு பின்னர் கழகத்தின் எத்தனை நிர்வாகம் மாற்றப்பட்டாலும் குறித்த  ஒரு குழு  மட்டும் எப்போதுமே குழப்பங்களை உண்டு பண்ணிவருவதை அவதானிக்க முடிகிறது.

அடிக்கடி நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு நிர்வாக உறுப்பினர்கள் மாற்றப்படுகின்றனர். பின்பு தங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் உடனே பிரச்சனைகளை உண்டு பண்ணி பிரதேச செயலம் வரை பிரச்சனைகளை ஏற்படுத்தி மீண்டும் ஒரு நிர்வாகம் அமைக்கபடுகிறது. அதுவும் பிரச்சனை என்றால் மறுபடியும் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறது.

உறுதியான நிலையில் வட்டுக்கோட்டை விழையாட்டுக் கழகத்திற்கு எதுவும் இல்லை என்பதே கவலையான விடயாமாகிறது..

இந்த முறை வெளியீடப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு கடித ஆய்வின் குறிப்புகள்….

இக்கடித்தில் வரிக்கு வரி “சிவன்கோவிலடி என்று பதிப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் நோக்கம் கழகத்தில் விளையாடுவது அல்ல மாறாக வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம், சிவன்கோவிலடி என்ற பெயரை பெறவேண்டும் என்பதாகவே வெளிப்படுகிறது..

கடந்த கால காணி உரிமை சம்மந்தமான சில சந்தேகங்களை “சிகப்பு” நிறக் கோடிடப்பட்ட பகுதி வெளிப்படுத்துகிறது. இதில் சில கேள்விகள் குறித்த கடித வெளியீட்டாளர்கள் முன்வைக்கபடுகிறது..

01. யார் அந்த திர்மானம் எடுத்த வெளிநாட்டு முன்னாள் உறுப்பினர்கள்.?.. அவர்களின் பெயர் விபரங்கள் வெளியீட முடியுமா?

02. தன் பேருக்கு முன் உறுதி முடித்த திரு.வேலும்மயிலும் என்பவர் யார்.? தன் பெயரில் ஆட்சி உறுதி முடித்து அதை பின் கழகத்திற்க்கு அன்பளிப்பாக கொடுத்தார் என்பதற்கான ஆதாரம் என்ன.?

03. கழகத்திற்க்கு சொந்தமானவர்கள் பொதுமக்கள், இந்த முடிவுகள் தீர்மானங்கள் எப்போது..? எங்கே எடுக்கப்பட்டன..? எடுத்தவர்கள் யார்..? அவர்களுக்கும் கழகத்திற்க்கும் என்ன சம்மந்தம்..? பொதுக் கூட்டத்தில் அல்லது நிர்வாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதா..? உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டதா.? இவையனைத்துக்கும் ஆதாரமாக அறிக்கை எழுதப்பட்டுள்ளதா..?

04. ஒரு கழகத்தின் நீர்வாகத்தை தெரிவு செய்யும் உரிமை அதன் கழக உறுப்பினருக்கே உண்டு அப்படியிருக்கும் போது கழகத்தின் சொத்துடமைகளை உறுப்பினர்கள் அல்லாதவர்கள் மாற்றுவதும் மறைப்பதும் எந்த வகையில் சரியாகும்..?

05. இச்செயற்பாட்டுக்கான ஆவணங்களை ஆதாரமாக காட்ட முடியுமா..? மாற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளடங்கலாக அனைத்து சந்தேக ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டுவர உங்களால் இயலுமா..?

06. கழகத்தின் பெயரிலேயே நேராக மாற்றி எழுதி இருக்கலாமே.? ஏன் இன்னொருவர் பெயரில் எழுதி அதை அவர் நன்கொடையாக வழங்குவதாக இருக்கவேண்டும்..? குறித்த நபர் பெயர் வாங்கவா.? புகழ்தேடவா..? அல்லது கழகத்தை உருவாக்கியவர் அவர்தான் என்று தம்பட்டம் அடிக்கவா..?

எழுதப்பட்டுள்ள கடிதம் ஒரு அடிமட்ட அடிப்படை கல்வியறிவு கூட இல்லாத ஒருவரால் எழுதப்பட்டுள்ளது , ஏன் இத்தனை சொற்பிழை பொருட்பிழை..? சிறு குழந்தை கூட நன்றாக எழுதும் இன்றைய காலத்தில் சிறுபிள்ளைதனமாக “ரீச்சர் நுள்ளுரார்” ரீச்சர் அடிக்கிறார்” என்ற வகையில் ஒரு கடித்திற்கான எந்த அமைப்பும் இன்றி பேச்சு வழக்கு மொழியில் யார் மீதோ உள்ள கோபத்தில் யாரோ ஒருவரை குற்றம் சுமத்தி கோமாளி தனமாக எழுதப்பட்டு உள்ளது.

இது ஒரு அலுவலக ரீதியான கடிதமோ அல்லது ஒரு முறைப்பாட்டுக் கடிதத்திற்கானதோ எந்த ஒரு வடிவத்திலும் இல்லை. இதில் கூட சிலர் கையொப்பமிட்டுள்ளது. ஆச்சரியம். ஆனாலும் ஒரே எழுத்தில் பல கையொப்பங்கள் எல்லோரையும் முட்டாளாக்கும் குழந்தைப் பிள்ளை விளையாட்டாக இருக்கிறது வட்டுக்கோட்டை விளையாட்டுக்க கழகம்.

குறித்த கடிதம் எழுதியவர்கள் முதலில் நல்ல தமிழ் ஆசிரியரிடம் தமிழ் கற்றுப் பின்னர் இதுபோன்ற காரியங்களை முன்னெடுப்பது  சாலச்சிறந்தது…..

இதையும் ஒரு கடிதம் என ஏற்றுக்கொண்டு அதில் பிரதேச செயலக முத்திரையை வேறு பதித்திருப்பது பிரதேச செயலகத்தின் யாருக்கோவான அதித விசுவாசத்தை காட்டி நிற்கிறது. இவர்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் பிரதேச செயலகமும் இழுபடுவதை இது வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

(குறிப்பு – மேற்குறித்த  கேள்விக்களுக்கு பதில் சொல்ல விரும்பினாலோ நிங்கள் சொல்வதெல்லாம் உண்மை என நிருப்பிக்க விரும்பினாலோ, முறையான நியாயமான எதிர்கருத்துக்களை அனுப்பி வைக்கவும்.. )

இப்படிக்கு
என்றும் உண்மையுள்ள
சிவநாதன்
கழக உறுப்பினர்.

கடித பிரதிகள் கிழே…..

1

2

3

4

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...