இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

ஏழாம் ஆண்டில் காலடி வைக்கும் சிந்துபுரம்இணையம்.

சிந்துபுரம் இணையம் தனது காலடியை ஏழாம் ஆண்டில் வைக்கிறது.கால ஓட்டத்தில் தொழிற்நுட்ப யுகத்தின் ஒரு குழந்தையாக திகழும் இணையப்பரப்பில் , கடந்த ஆறு ஆண்டுகளாக வலுவாக எமது கிராமத்திற்கென ஒர் இடத்தை சிந்துபுரம் இணையம் பிடித்து நிற்கிறது.

.
தனக்கென ஒரு தனித்துவத்தை கொண்ட எம் கிராமத்தின் மாண்பையும் அதன் தொன்மையையும் பறைசாற்ற கடந்த ஆறு ஆண்டுகளாக சிந்துபுரம் இணையம் சமரசமின்றி களமாடி வருகிறது.
காய்க்கும் மரத்திற்கு தான் கல்லெறி என்ற வழக்கிற்கேற்ப பல்வேறு பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் தான் கொண்ட கொள்கையில் வழுவாது செய்திகளை வெளியிட்டு வருகிறது.எதிர்காலத்திலும் தன் பாதையை மாற்றாது பயணிக்கும்.

.
உண்மையின் முன் நடு நிலை என்பது இல்லை என்பதை தன் தாரக மந்திரமாகக்கொண்டு காய்தல் உவத்தல் அற்றமுறையில் உறவுகளை சிந்திக்கவைக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை இணையத்தால் வழங்கப்பட்டு வந்தது.

.
எம் வேராகிய கிராமத்தின் செய்திகளை விழுதுகளாகிய புலம் பெயர் மண்ணிற்கு வழங்கியது மட்டுமல்லாது புலம்பெயர் செய்திகளையும் எம் மண்ணிற்கு வழங்கி வருகிறது.
பிறந்திருக்கும் புதிய தமிழ் ஆண்டு சில நற்செய்திகளை கொண்டு வந்திருகிறது.இன்னும் சில நற்செய்திகள் காத்திருக்கின்றன.

.
முதல் முதலாக புலம்பெயர் மண்ணின் இரண்டு அமைப்புக்கள் எம் கிராமத்தின் அபிவிருத்திக்காக கைகோர்த்துள்ள நல்ல செய்திபோன்ற இனிய செய்திகள் இனியும் தொடரும் என்று நம்புவோமாக.இந்த புதிய இணைவு இன்னும் பல செயல்திட்டங்களை செய்ய இருப்பதாக தெரிவித்திருப்பதும் இனிய செய்திதான்.

.
இவ்வாறான செயற்பாட்டிற்கு என்றும் இணையம் துணைநிற்கும் என்பதனையும் இத்தருணத்தில் இணையம் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது.

.
எமது கிராமத்தின் ஒருமைப்பாட்டை சிதைக்காத வண்ணம் இணையம் தொடர்ந்தும் இனி செய்திகளை வெளியிட்டு வரும்.அதே வேளை சமூக விரோத செயற்பாடுகளை பாரபட்சம் இன்றி வெளியிடுவதையும் தொடர்ந்து செய்து வரும்.

.
சில வேளைகளில் எம் இணையத்தின் மௌனங்கள் கூட கிராமத்தின் நன்மைக்கே இருக்கும்.இந்த மௌனங்கள் பின்வாங்களுக்கோ, மசிதலுக்கோவான வெளிப்பாடுகளாக இருந்ததில்லை.மாறாக கிராம நன்மையே அதன் முதல் வெளிப்பாடாக இருக்கும் என்பதனையும் இத்தருணத்தில் இணையம் தெரிவித்துக்கொள்கிறது.

.
கடந்த சில காலமாக எம் கிராமம் சார்ந்த பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகள்,அவர்களின் ஆக்கங்கள்,பேட்டிகள் என்பன இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.அவை தொடர்ந்து இனியும் வெளிவரும்.எம் ஊர் பெரியோர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்,ஆக்கங்களை அவர்களின் வாரிசுகளிடம் இணையம் தொடர்ந்தும் பெற்றுக்கொண்டு பிரசுரிக்கும் என்பதனையும் நினைவு படுத்த விரும்புகிறது.

.
ஏழாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் சிந்துபுரம் இணையத்தின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

7-yr-anniversary

.

.

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...