இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரக்கலைகள்-சூரனாட்டம்.(விழியம் இணைப்பு)

சூரனாட்டம்.

முதன்முதலில் சிந்துபுரம் வீயோடை இலுப்பையடி முத்துமாரியம்மன் கோவில்களில் பல தலைமுறைக்கு முன்பாகவே தொன்றுதொன்று ஆடப்பட்டு வந்தது.இதே போன்றே சிந்துபுரம் சின்னக்கதிர்காமம் தேவட்டானத்திலும் ஆடப்பட்டது நோக்கற்பாலது.
.
நவராத்தி இறுதி நாளான விசயதசமி அன்று சிந்துபுரம் அருள்மிகு வீயோடை இலுப்பையடி முத்துமாரி அம்பாள் தேவட்டானத்தில் மகிடாசூர சங்காரம் இடம்பெறும்.இந்நிகழ்வினை சமயச்சடங்காக நிகழ்த்திக்காட்டுவர்.6
சூரனாட்டத்தின் போது தனித்தே தவில் வாசிக்கப்படும்.அதன் தாளக்கட்டு மாறுபடாமல் இருக்கும்.ஆனால் சூரனாட்டம் பல முறையில் ஆடப்பட்டுக்கொண்டிருக்கும்.

மரத்தினால செதுக்கப்பட்டு அழகான பீடத்தின் மீது சூரன் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப்பீடத்தில் இரண்டு காவாங்குகள் கட்டப்பட்டிருக்கும்.அந்தக்காவாங்குகளை தோளில் வைத்தபடி இருபுறமும் எட்டுத்தொடக்கம் பத்துவரையான ஆட்கள் சூரனாட்டத்தை நிகழ்த்துவர்.
.
ஆட்டத்தை ஒருவர் வழிநடத்துவார்.அவரின் கட்டளைக்கமைய மற்றவர்கள் ஒரு சேர ஆட்டத்தை மேற்கொள்ளுவர்.அந்தக் கட்டளைகள் சூரானாட்டத்திற்கேயுரிய தனித்தன்மையான கட்டளையாக இருக்கும்.
தசார்,அப்,பச்சே,மிண்டே,மண்டே போன்ற கட்டளைகள் மூலம் நடத்துனரால் பிறப்பிக்கப்பட்டு ஆட்டம் நடத்தப்படும்.இதில் என்ன சுவாரசியம் என்னவெனில் இந்தக்கட்டளைகள் தமிழ்,ஆங்கிலம்,சிங்களம் போன்ற மொழிகளில் இடம் பெற்றிருக்கும்.

  • தசார் – தயார் நிலையில் இருத்தல்.
  • அப் (up) – மேலே உயர்த்துதல்.
  • பச்சே – பின்னே செல்லுதல் (சிங்கள மொழியில் பின்பாக என்று அர்த்தம்).
  • மிண்டே – ஆயுதம் மாற்ற தயாராகுதல் அதாவது ஆயுதப்பரிமாற்றம்.
  • மண்டே . (சூரன்) தலை விழுதல்.

ஆட்ட வகை முறைமையில் தாச்சி மறித்தல் ஒருவகையானது .நாயகத்தன்மையான தெய்வத்தின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக சூரனானது அம்மன் அல்லது முருகனின் அசைவிற்கு சமாந்தரமாகவும் முன் பின்னாக அசையும் நிலையே தாச்சி மறித்தல் ஆட்டம் ஆகும்.
அர்ச்சுனன் தவசு முறையாட்டம்.
இதில் இடக்காலை நிலத்தில் ஊன்றியவாறு வலக்காலினை இடக்காலின் தொடையில் வைத்தபடி சூரனை உயர்த்திப்பிடித்து ஆட்டப்படும்.அத்தோடு மற்றைய முனையில் இருப்பவர்கள் காவாங்கை சாதாரண நிலையில் வைத்திருந்து ஆட்டுவர்.இது இரு புறமும் மாறி மாறி நிகழ்த்தப்படும்.இதனால் சூரன் சரிவான நிலையில் ஆடுவது போன்ற தோற்றப்பாடு காணப்படும்.

தூக்கி இறக்கல் ஆட்டம்.
இடப்பக்க காவாங்கை ஏந்தி நிற்போர் சாதாரண நிலையில் நின்று ஆட்ட,மற்றை பக்க காவாங்கை ஏந்தியிருப்போர் அதை உயர்த்திய நிலையில் வைத்த படி ஆட்டுவர்.இது தூக்கி இறக்கல் ஆட்டமாகும்.
.
யானை ஆட்டம்.

யானை போல பாசாங்கு செய்து ஒரு கையால முதுகில் காவாங்கை பிடித்தபடி மற்றைய கையால் மூக்கின் நுனியை பிடித்த படி அசைந்து ஆடும் ஆட்டம் யானை ஆட்டம் ஆகும்.

முட்டுக்கால் ஆட்டம்.

முழங்காலினை நிலத்தில் வைத்தபடி ஊர்ந்து முன்னகர்ந்து செல்லுதல் முட்டுக்கால் ஆட்டம் ஆகும்.இந்நிலையில் முதுகில் காவாங்கை ஒருகையால் பிடித்த படி ஆட்டக்காரர்கள் ஆடுவர்.

தவளைப்பாச்சல் ஆட்டம்.

கழுத்தின் பின் புறத்தில் காவங்கை பிடித்த படி தவளை போல் துள்ளியபடி ஆடும் ஆட்டமாகும்.இதன் போது சூரன் துள்ளி துள்ளி போரிடுவது போல் தோற்றமளிக்கும்.

ஏந்திப்பிடித்தல் ஆட்டம்.

காவாங்கை சம நேரத்தில் ஆகாயத்தில் நோக்கி இரு புறமும் இருக்கும் ஆட்டுனர்கள் வீசிய படி நகர்ந்து செல்வர்.இதன் போது சூரன் பறந்து பறந்து போரிடுவது போல் இருக்கும்.

புலியாட்டம்.

.
ஒரு பக்க காவங்கை மேலே தூக்கிய படியும்,மறுபக்க காவங்கை கீழே பிடித்தபடி அலை வடிவில் ஆட்டப்படும்.இது புலி பாயும் தோற்றத்தை போன்று இருப்பதனால புலியாட்டம் என்று அழைக்கப்படும்.

.
அலையாட்டம்.

.
காவங்கை மேலும் கீழுமாக அதே நேரம் முன் பின்னாக அசைத்து கடலில் கப்பல் அசைந்து அசைந்து வருவது போன்ற தோற்றத்தில் ஆட்டப்படும் ஆட்டமாகும்.இது சூரன் கோபத்தில் கொந்தளிப்பதை சித்தரிப்பதாக அமைந்திருக்கும்.

.
உருமறைப்பு ஆட்டம்.

.
சிங்கமுக (சூரன்) சேலையால் போர்த்தப்பட்டு ஆடும் ஆட்டம் உருமறைப்பு ஆட்டம் எனப்படும்.இந்த ஆட்டத்தின் பொழுது சூரனின் பீடம் நிலத்தில் வைக்கப்பட்டு ஆட்டுனர்கள் தமது கைகளை தட்டியபடி பீடத்தை மூன்று சுற்றி வருவர்.

.
சிங்கமுகன் நல்லவன் என்றபடியாலும், செஞ்சோற்றுக்கடனுக்காகவே போரிட வந்தவன் என்றபடியாலும் அவனை மதிப்பளிக்கும் படியாகவுமே இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

.
தலை விழுத்தும் முறை.

.
ஒன்று அல்லது இரண்டு ஆயுதப்பரிமாற்றத்தை பின் தலை விழுத்தப்படும்.மண்டே எனும் கட்டளை பிறப்பித்தளுடன் அம்மன்,முருகன்,பிள்ளையார் பீடத்தில் இருக்கும் நபர் சூலாயுதத்தை அல்லது வேலை சூரனின் தலை நோக்கி நீட்டிப் பிடிக்கும் போது தலை விழுத்தப்படும்.
ஆட்டத்தை மெருகேற்ற உதவும் அணிசேர் கலைஞர்கள்.

.
கட்டளை பிறப்பிப்பாளர்.

.
சூரன் முற்பக்கத்தில் இரண்டு கைகளாளும் காவாங்குகளின் முனையை பிடித்த படி இவர் நிற்பார். ஆட்டத்தை வழி நடத்த தேவையான கட்டளைகளை இவரே பிறப்பிற்பார்.

.
கட்டளை பிறப்பிபாளர் உதவுனர்.

.
இவர் சூரனின் பிற்பக்கத்தில் இரண்டு கைகளாளும் காவாங்குகளின் முனையை பிடித்தபடி இவர் நிற்பார்.பிரதம கட்டளையாளரின் கட்டளைக்கு ஏற்ப பின் பகுதியில் நிற்கும் ஆட்டுனர்களை வழிநடத்தும் பணியை இவர் மேற்கொள்ளுவார்.

.
சூரன் ஆட்டுனர்கள்.

.
காவாங்கின் இருபக்கமும் சம அளவில் ஆட்டுனர்கள் இருப்பர்.இவர்களின் எண்ணிக்கை சூரனின் பருமனுக்கேற்ப பதினான்கில் இருந்து பதினாறு வரை மாறுபடும்.அனேகமான இவர்கள் கட்டு மஸ்தான உடலமைப்பை கொண்டவர்களாகவும், சம உயரம் உடையவர்களாகவும் இருப்பர். சூரன் தொய்வில்லாமலும்,நேர்த்தியான முறையிலும் ஆட்டுவிக்க இந்த காரணிகள் முக்கியமானதாகும்.

.
சூரனின் சக்கரத்தை சுற்று நபர்.

.
சூரனின் பீடத்தின் ஏறி நின்றபடி சூரன் காலடியில் அமைந்திருக்கும் சக்கரத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி சுற்றுவது இவரின் பிரதான வேலை.சூரனின் ஆயுதப் பரிமாற்றத்தை இவரே மேற்கொள்ளுவர்.அதே நேரம் சூரனின் தலையை ஆட்டியபடியும் இவர் நிற்பார்.சுரன் தலை விழுத்தும் செயலையும் இவரே செய்வார்.அத்தோடு சுரனின் பீடம் திசை மாறி ஆடும் பொழுது இவர் சூரனை அம்மனை அல்லது முருகனை,பிள்ளையாரை நோக்கிய வைத்திருப்பதும் இவர் பணிகளாகும்.

.
சூரனாட்டத்திலன் போது நிலைமையை சாமாளிக்கும் சமயோசிய புத்தியும் இவரிடத்தில் காணப்படவேண்டும்.

.
பொதுவாக மெல்லிய உடல்வாகு கொண்டவராக இருப்பதோடு உறுதியானவராகவும் இருப்பார்.சற்றே நிறை குறைவானதாகும் இவரை தெரிவு செய்யப்படுவார்.

.

தீவட்டி பிடிப்போர்.

.
தீவட்டியின் கொம்பில் மேலே இடக்கையை பிடித்தபடியும்,வலக்கையை கொம்பின் கீழே பிடித்தபடியும் சூரனின் ஆட்டப்போக்கிற்கேற்ப இவரகள் தீவட்டியை ஆட்டுவர்.இவர்கள் சூரனின் முன்,பின் புறங்களில் நிற்பர்.

.
ஆயுத விநியோகஸ்தர்.

.
சூரன் ஆட்டும் போது சூரனின் பீடத்தில் இருக்கும் நபருக்கு சமயத்திற்கு ஏற்ற வகையில் ஆயுதங்களை விநியோகிப்பவராக இவர் காணப்படுவர்.வாள், தண்டு,கதை,வில்,கோடாலி போன்ற ஆயுதங்கள் இங்கே பாரிமாற்றப்படும்.அதே நேரம் சூரனின் இடது கையில் ஓர் கவசம் நிலையாக காணப்படும்.

.
இவ்வாறாக மொத்தமாக இருபது தொடக்கம் இருபத்தியிரண்டு நபர்கள் சூரனாட்டத்தில் பங்கு கொள்வர். இது ஒரு குழு செயற்பாட்டுடன் அமைந்த கலைவடிவமாகும்.ஆணவத்தை அழித்தல் என்பதன் குறியீடே இந்த சூரனாட்டம் ஆகும்.

சூரனாட்டம் என்பது தமிழரின் ஆதிகால கலைவடிவங்களுள் ஒன்றாகும்.யாழ்மாவட்டத்தில் சிந்துபுரம் பகுதியில் ஆட்டப்படும் சூரன் மிகவும் தனிச்சிறப்பு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

————————————————————————————————————————

இந்த ஆண்டு சிந்துபுரம் வன்னியன் தேட்ட சின்னக்கதிர்காமம் தேவட்டானத்தில்  கந்தசட்டி சூரன் ஆட்டத்தின் சில முக்கிய பகுதிகள் கொண்ட விழியம்.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...