இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

முன்பள்ளிகளுக்கு முன்னுதாரணமான சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளி (புகைப்படங்கள்).

சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளியில் முதன்முறையாக  வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 14.10.2015 பி.ப 1.30 மணிக்கு சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றிருந்து.

இவ்விழாவிற்கு காந்திஜி சனசமுக நிலையம் சார்பில் திரு ப .சோழன் தலைமை தாங்கியிருந்தார். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக  வலி- மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நா.ஐங்கரன் அவர்களும்  கௌரவ  விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் சார்பாக அவருடைய பிரதிநிதி ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்பு விருந்தினராக பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை  அதிபர்  திரு தி.மோகனபாலன் மற்றும் வலி- மேற்கு முன்பள்ளி இணைப்பாளர் செல்வி நா.நிரஞ்சனா அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பெற்றோர்கள், சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை விருந்தினர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய திரு.ப.சோழன் அவர்கள் ” எமது முன்பள்ளிக்கு சமுகநல உள்நாட்டு வெளிநாட்டு இளைஞர்களின் பங்களிப்புகளும், தன்னார்வ சமூக நலன்விரும்பிகளின் பங்களிப்பும் அதிகமாக இருக்கிறது. அதேபோல் சமுகம் சார்ந்த அபிவிருத்தியில் பிரதேச சபையின் பங்களிப்பும் இருப்பதுடன் இனிவரும் காலங்களிலும் எமது கிராமம் முழுமையான அபிவிருத்திக்கு உள்ளடக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை   சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமதி நா.ஐங்கரன் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதன் பின் சிறப்புரை ஆற்றிய வலி- மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி நா.ஐங்கரன்  “சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளியின் முதன் முறையான பரிசளிப்பு விழா  மட்டும் அல்ல, இது முன்பள்ளிகளுக்குள் முதன் முறையான பரிசளிப்பு விழா” இந்தப் பெருமை சிந்துபுரம் காந்திஜி முன்பள்ளியினை சாரும் எனக் கூறினார். அத்துடன் பரிசளிப்பு விழா சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்டதை பாராட்டியதுடன், இனிவரும் காலங்களில்  சமூகமட்ட அபிவிருத்தியில் எமது கிராமத்தையும் உள்ளடக்க காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் சார்பில் வருகை தந்த பிரதிநிதி மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை பரிசளித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களின் உரையும் நடைபெற்றிருந்தது.

இவ்விழாவில் முக்கியமான சில விடயங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது . மாணவர்களின் கலை நிகழ்வுகள், சிறார்கள் அழகாவும் நேர்த்தியாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தி கலை நிகழ்வுகளை வழங்கியிருந்தார்கள்.

காண்பவர் கண்களுங்கு நல் விருந்தாக அமைந்த இக்கலை நிகழ்வுகளை முற்றுமுழுதாக  சிறுவர்களை வைத்து, நன்றாக பயிற்றுவித்து அவர்களின் திறமையான கலை  நயத்தை வெளிக்கொணர்ந்த ஆசிரியர்களும் இவ்விடத்தில் பாராட்டப்படப்வேண்டியவர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வியில் சில பின்னடைவுகளை சந்தித்த எம் சமூகம் இன்று சற்றே தன்னை சுதாகரித்துக் கொண்டு  செயற்ப்பட ஆரம்பித்திருப்பதை உணர முடிகிறது. யாருடைய தலையீடும் இன்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் இவ் ஒருமைப்பாடான ஒழுங்கமைப்புகள் எமது சமூகம் சிந்திக்க ஆரம்பித்துள்ளதற்கான முன்னுதாரணம் ஆகும்.

(புகைப்படங்களுக்கு நன்றி – சிந்துபுரம் புகைப்பட கலைஞர்)

IMG_9797

IMG_9802

IMG_9815

IMG_9813

IMG_9943

IMG_9940

 

IMG_9866

IMG_9831

IMG_9871

IMG_9870

IMG_9953

IMG_9962

 

 

 

IMG_9963

IMG_9890

IMG_9994

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...