இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

‘’இயலாமை என்று ஒன்றுமேயில்லை; தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு’’!

தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் முன்னேற்றம் கண்ட சிந்துபுரத்தின் தனிப்பெரும் கலைஞன் நாகப்பு அவர்களின் இளைய மகன் மீனேஸ் அவர்கள் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

கலைத்தாயின் பிள்ளையின் மூத்த மகனுக்கு இளைய மகனாக பிறந்த இவர் பிறப்பினால் சிறிய இயலாமையைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கலைத்தாயின் மடியில் தவழ்ந்ததால் இயலாமை என்பது வெறும் வார்த்தையாகிப்போனது. இன்று கலையாலும் தன்னம்பிக்கை மிக்க உழைப்பாலும் சொந்தமான ஒரு உயர்வைப் பெற்றுள்ளார்.

12053242_1662384384003054_127855390_n

12042161_1662384544003038_368479003_n

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

மீனேசின் பல்பொருள் அங்காடி

நம்மில் பலர் தன்னம்பிக்கையால் கடினமாக உழைத்து முன்வந்தருக்கலாம் ஆனால் இவர் போன்று ஒருவரின்முன்னேற்றம் பாரட்டப்பட வேண்டியது, கலையுடன் இணைந்த இவரது படிப்படியான உழைப்பு இவரை நாடு பூராகவும் கௌரவத்துக்குரிய கலைஞன் ஆக்கியுள்ளது. கிராமியக்கலைக்காவலன் என்ற பட்டத்தையும் இவருக்காக்கியது.

சிந்துபுரத்தில் உள்ள வட்டுக்கோட்டை பொது சந்தையில் ஒரு மூலையில் முன்னர் தந்தையார் வியாபாரம் செய்து வந்த சிறிய இடத்தில் சாதரண பெட்டிக்கடையில் ஆரம்பமானது இவரது பயணம்.

சிந்துபுத்தின் தீவிரமான கலைஞரான இவருக்கு சிந்தபுரம் கலைஞர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவும் அதிகமாகவே இருந்தது .அதனை பக்கபலமாகக் கொண்டு தனது கலைப்பணியில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்தார்.

நளி்ன நடையில் இருந்தவரை மிதிவண்டிக்கு மாற்றினார்கள் இவரது நண்பர்கள். இதுவே இவரது இயலாமையை மறந்து ‘’முடியும்’’ என்ற தன்ம்பிக்கைக்கான முதற்படி.

12042162_1662384490669710_1589503194_n

பொதுச்சந்தையில் சிறிய கடையாக 

ஒரு பக்கம் கலைவடிவங்களை நாடெங்கும் எடுத்துச் செல்லும் பணியும் மறுபுறம் பெட்டிக்கடை வியாபாரம் என்று அடுத்தவர் கைகளை நம்பாது தனியாக தனது குடும்பத்தையும் கவனிக்க ஆரம்பித்தார்.

நல்ல நண்பர்களின் பக்கபலமும், சிந்துபுரம் கலைஞர்களின் ஒத்துழைப்பும் அவரைப் படிப்படியாக உயர்த்தி இன்று சொந்தமாக ஒரு பலசரக்கு கடையை அவரது வீட்டுடனே திறந்திருப்பது அவரது தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் இடர்களும் குறைகளும் இருக்கவே செய்கிறது. ஆனால் அவற்றை குறையாக நினைக்காது சமுகத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேறலாம் என்பதை இந்த இளைஞன் செய்து காட்டியிருப்பது பாராட்டத்தக்கது.

நல்ல நண்பர்கள், நல்ல சமூகம் யாரையும் குறையுடையவராக பார்க்காது. குறைகளை இயற்கை கொடுத்தாலும் அவரகள் முன்னேறுவதற்கான வழிகளையும் அதுவே காட்டுகிறது. அவற்றின் வழியில் சாதித்து வாழ்கையில் மறறவர்களுக்கு கிடைக்கும் அதே மதிப்பையும் மரியாதைகளையும் நாமும் பெறவேண்டும்.

தானம் வழங்கியோ அல்லது உதவி என்ற பெயரில் உசிதங்களை வழங்குவது அவர்களை ஏதோ குறையானவர்கள் அல்லது சமூகத்தில் வேறுபட்டவர்கள் என்பதை பிரித்துக் காட்டுவதாகவே அமையும் இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம்.

12032554_1662384444003048_831490776_n

12032289_1662384474003045_2068069110_n

 

 

 

 

 

 

 

.

மீனேஸ் பெற்ற மதிப்பளிப்புக்கள்

திரு நாகப்பு மீனேஸ் போன்று அடுத்தவர் நன்கொடைகளையோ அல்லது அடுத்தவர் கைகளையோ நம்பாமல் எல்லோரும் போல நம்மாலும் சொந்த உழைப்பில் வாழ முடியும் என்று சாதித்துக்காட்டலாம்

12032513_1662384414003051_37624751_n

மீனேசின் கலைக்குழு

இன்று சிந்துபும் கலைகளை தெரியாதவர்கள் இல்லை என்ற அளவில் நாடு பூராகவும் சிந்துபுரக் கலைஞர்களின் உதவியுடன் எடுத்துச் சென்ற சமுகப்பணிக்காகவும், படிப்படியாக முயற்சியால் தனது சொந்த உழைப்பில் இயலாமை என்பது வெறும் சொல்மட்டுமே என்ற தன்னம்பிக்கைகும் இவர் சிறந்த உதாரணம்.

வெளிநாட்டு மோகத்துடன் படிப்பையும் மறந்து.உழைப்பையும் விடுத்து சுற்றித்திரியும் இக்கால இளைஞர்களுக்கு இந்த மீனேஸ் ஒரு நல்ல பாடம்.உள்ளூரிலேயே சொந்தக்காலில் ஒரு சிறு முதலாளியாக உண்மையான உழைப்பால் உயர முடியும் என்பதை சாதித்துக் காட்டியவன்.வெளிநாடுகளில் கோப்பை கழுவாமலும்,குப்பை அள்ளாமலும் சொந்த ஊரில் சுயமாக ,சுகமாக, வாழலாம் என்பதற்கு இவர் பெரும் எடுத்துக்காட்டு.

சிந்துபுரம் கலைஞர்கள் சார்பாகவும், அன்பு நண்பர்கள் சார்பாகவும், எமது சிந்துபுரம் இணையம் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் மேன்மேலும் தங்கள் கலைப்பணி மற்றும் உழைப்பு மேன்மையடைய வாழ்த்துகின்றோம்.

குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம் தனிமனித புகழ்பாடல் அல்ல.இயலாமையிலும் திறமையை வைத்து உழைத்து சொந்த நாட்டிலேயே முன்னுக்கு வரமுடியும் என்பதன் சின்ன உதாரணத்திற்காகவே..

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...