இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை

முன்னொரு காலங்களில் எல்லாம் உயிரினங்கள் தானாக தோன்றுகின்றன என்கிற சிந்தனை பெரும்பாலும் நம்பப்பட்டு வந்தது. அதாவது தண்ணீரோ, உணவோ கெட்டுப் போனால் அதிலிருந்து தானாக உயிரினங்கள் தோன்றுகிறது என நம்பினார்கள்.  ஆனால் இந்த உயிரினங்கள் தானாக தோன்றுவதில்லை என்பதை முதன் முதலில் உலகுக்கு எடுத்து காட்டியவர் ச்பல்லன்ஜானி எனும் அறியியல் அறிஞர்தான். a

உணவு பொருட்கள் அடங்கிய இரண்டு குடுவைகள் எடுத்துக் கொண்டார். அதில் ஒன்றை காற்றுவெளியில் திறந்து வைத்தார். மற்றொன்றை நன்றாக கொதிக்க வைத்து மூடியால் நன்கு இருக்க மூடி வைத்தார். ஒரு சில நாட்கள் பின்னர் இந்த இரண்டு குடுவைகளை பார்த்தபோது திறந்து வைக்கப்பட்டு இருந்த குடுவையில் நுண்ணுயிர்கள் தோன்றி இருந்தது, ஆனால் கொதிக்க வைக்கப்பட்டு மூடப்பட்ட குடுவையில் எந்த நுண்ணுயிர்களும் தோன்றவில்லை. இந்த செய்முறையை பலமுறை செய்து பார்த்துவிட்டு ‘உயிரினங்கள் தானாக தோன்றுவது என்பது கிடையாது என அறிவித்தார். ஆனால் அவர் சொன்னதை அத்தனை எளிதாக எவரும் நம்பவில்லை.
காற்றில் உள்ள முக்கியமான பொருளை இப்படி கொதிக்க வைத்ததால் செயல் இழக்க செய்துவிட்டதால் உயிரினங்கள் தோன்றவில்லை என வாதிட்டார்கள். இந்த அறிவியல் அறிஞரும் இப்படிப்பட்டவர்களை என்ன சொல்லி திருத்துவது என பேசாமல் விட்டுவிட்டார்.
அதற்கு அடுத்த வந்த அறிவியல் அறிஞர்கள் ஸ்வான் மற்றும் ச்சுல்சே காற்றை கந்தக அமிலத்தில் செலுத்தினார்கள். அவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தியபோது காற்றில் இருக்கும் சுவாச வாயு மாறாமலும், ஆனால் காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்திருக்கும் என்றும் நம்பினார்கள். அதை செயல்முறை படுத்த இவ்வாறு கந்தக அமிலத்தில் செலுத்தப்பட்ட காற்றை உணவு பொருட்களில் செலுத்தினார்கள். சில நாட்கள் ஆகியும் அந்த உணவு பொருட்களில் எந்த நுண்ணுயிரும் தோன்றவில்லை. அதைப்போலவே சாதாரண காற்றை உணவு பொருட்கள் செலுத்திய சில நாட்கள் பின்னர் நுண்ணுயிர் தோன்றியது. அப்பொழுது கூட காற்றில் உள்ள மிக முக்கியமான பொருளை சிதைத்துவிட்டார்கள் என்றே எதிர் தரப்பினர் வாதிட்டனர்.
பின்னர் நடந்த வெவ்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயிர்கள் தானாக தோன்றுவதில்லை, அவை காற்றில் மூலம் தான் வர வாய்ப்பு இருக்கிறது என நிரூபிக்கப்பட்டது.
அதெல்லாம் சரி, இன்னும் எப்படி மனிதர்கள், கடவுளால் அப்படியே படைக்கபட்டார்கள் எனவும், அறிவார்ந்த கட்டமைப்பு எனவும் நம்பி கொண்டிருக்கிறார்கள் என்பது மிகவும் புரியாத புதிராகவே இருக்கிறது.
ஒரு செல் பல செல்கள் அமைப்பு என்பது நாமே கண்கூடாக பார்க்கும்போது அப்படி அப்படியே எப்படி களிமண்ணில் பொம்மை செய்து வைப்பதுபோல கடவுள் மனிதர்களை செய்து வைத்திருப்பார் என நினைக்கும்போது வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது.
கடவுளை பொம்மை செய்து வைத்து அழகு பார்க்கும் வித்தையை நாம் கற்று கொண்டது போல கடவுளும் நம்மை பொம்மை போல செய்து வைத்திருப்பார் என எண்ணுவது விந்தைதான்.
ஒன்றுமே இல்லாமலா இவ்வுயிரினங்கள் தோன்றின எனும் சிந்தனையின் முன்னுரையாய் இதை எழுதியது, ஜீரோ எழுத்துக்காக.

 

பிந்திய 5 செய்திகள்

விண்வெளி அறியியல் உண்மைகள்.  விண்வெளி பற்றிய அதிசயிக்கத்தக்க உண்மைகள்: கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே. யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது. நெப்டியூன் 13...
அகத்தியமலை– பொதிகைமலை– தமிழ்மலை அதிசயங்கள்:... வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இரு...