இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சமுக,பொருளாதார அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் விளையாட்டுக்கழகம்.

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் தனது மைதானம் தொடர்பான பிரச்சனைகளை இன்று வரை முடிவுகாணத நிலையில் தனது காணி வழக்கை வைத்து புதியதொரு பிரச்சனையை சமுகத்தில் உண்டு பண்ணியுள்ளது.

.

அரச நிதி ஒதுக்கீட்டில் கிராமத்திற்கு ஒரு திட்டம் என்ற ரீதியில் முன்னெடுக்கப்படும் வீதி புதுப்பித்தல் திட்டம் ஒன்றில் எமது கிராமத்தைச் சேர்ந்த உபவில் வீதி அபிருத்திக்காக அரசால் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. யா/வட்டு சுப்பிரமணியா வித்தியாசாலை ஊடாக கண்ணகியம்மன் கோவில் பின்பகுதியின் தொடராக கற்பகச்சோலை கிராமத்தை சென்றடையும் வீதியே உபவீல் வீதியாகும்இப்பகுதியில்சுமார் 150 க்கும் மேற்பட்ட நமது சமுத்தினரும் சில சகோதர சமுகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.

.

நிண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத வீதிகளின் தெரிவில் இவ்வீதி முன்னிலை வகித்ததால் குறித்த திட்டத்திற்கு இவ்வீதி உள்வாங்கப்பட்டு அதன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதே நேரம் எமது கிராமத்தைச் சேர்ந்த அதிக இளைஞர்களைக் கொண்ட அமைப்பாக வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் இருப்பதால் குறித்த திட்டத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு கொடுக்குமாறு சமூக மட்ட அபிவிருத்தி முன்னெடுப்பாளர்களின் பரிந்துரையின் கீழ் அப்பொறுப்பு கழகத் தலைவர் ,செயளாளர் உள்ளடங்கிய குழுவுக்கு வழங்கப்பட்டது.

.

இன்னிலையில் குறித்த திட்டத்தை ஊக்குவித்து முன்நின்று செயற்படுத்த வேண்டிய விளையாட்டுக்கழகம் அதற்கு தன்னிச்சையான தலைமைகளின் முடிவுகளால் முட்டுக்கட்டையானது. தலைவர் மற்றும் அதன் மைதான பாதுகவலர் என்ற பதவியை தனக்குதானே வழங்கிய நபரொருவர் ஆகியோரின் பொது நல மற்ற செயற்பாடுகளால் இன்று வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் அரச மட்டத்தில் விமர்சிக்கப்படும் அமைப்பாக இன்று இருக்கிறது.

.

குறித்த வீதி தென் புல மைதானத்தின் எல்லையின் ஊடாகச் செல்வதால் அவ்வீதியை புணரமைக்க ஒத்துழைப்பு வழங்க முடியாது என தலைவர் மற்றும் குறித்த நபர் ஆகியோர் அப்பகுதி பொதுமக்களுடன் முறுகல் நிலையை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் திட்டம் செயற்படுத்தும் அரச அலுவலகர்கள் இப்பிரச்சையை பிரதேசசபையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

.

ஆனால் தென் புலமைதானம் வழக்கில் உள்ளதாகவும் அது பொது மக்களுக்கு உரித்தானது அல்ல எனவும் அவர்கள் விவாதங்களை முன்வைத்து திட்டத்தை தடை செய்துள்ளனர் குறித்த திட்டதிற்கான ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டிடுந்த  இந்நிலையில் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் இந்த தன்னிச்சையான செயற்பாடு ஒட்டுமொத்த கழகத்தையும் திட்ட அரச அதிகாரிகள் முன்னிலையில் முறணான பார்வையை உண்டு பண்ணியுள்ளது.

.

குறித்த தென் புல மைதானம் தற்போது அடைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீதிமக்களின் பாவனையில் உள்ளது யாவரும் அறிந்ததே. தென் புல மைதானம் கண்ணகியம்மன் கோவிலுக்கோ அல்லது வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்திற்கோ எந்தவொரு காலத்திலும் உரித்தாகப்போவதில்லை இது அனைவரும் புரிந்து ஏற்றுக்கொள்ளவேண்டி உண்மை. வழக்கு மைதானத்தை கழகம் பயன்படுத்தலாமா இல்லையா என்பது தானே தவிர அது கழகத்திற்கு உரியது என்பது அல்ல என்பதையும் வழக்கின் முடிவு என்றும் கழகத்திற்கு இம்மைதானம் சொந்தமானது என்று முடியப் போவதில்லை. தென் புலமைதானம் மட்டும் அல்ல வட புலமைதானத்தின் நிலமையும் இன்று இதுதான்.

.

இதில் எந்தவொரு மைதானமும் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழத்தின் சொந்த பெயரிலோ அல்லது பொதுமக்களின் சொந்த மைதானம் என்றோ நமது காலத்திலும் ஆகப் போவதில்லை. அது உறுதியான சட்டரீதியான உண்மை. இது கசப்பாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய நிலை திட்டமிட்டு உருவாக்கப்படுள்ளது என்பதே உண்மை. அதிலும் குறித்த வட புல மைதானம் காலம் கடந்து விட்டது இனி அதை யாராலும் கழகத்தின் சொத்தாக மாற்ற முடியாது. காரணம் வழக்கு என்ற பெயரில் காலம் அதிகமாக இழுத்தடிக்கப்பட்டதன் விளைவு அது தனியுரிமமாக மாறி குத்தகை என்ற வகையில் மாற்றப்பட்டுவிட்டது.

.

இது தான் இவ்விரு மைதானங்களின் உண்மை நிலை. வழக்கு என்பது விளையாடுவதற்கான பராமரிப்பு உரிமை கோரலே தவிர கழகத்தின் சொத்தாக்குவதற்ககாகவல்ல.இது தெழிவான உண்மை. ஆகவே வரும் கிராம அபிவிருத்திகளை கழகத்தின் பெயரை வைத்து தனிப்பட்ட முறையில் சிலர் முடிவெடுத்து அதிகாரம் செய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

.

சில தினங்களுக்கு முன்னராக குறித்த வீதியின் அபிவிருத்தியை வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் எதிர்ப்பதாக கழக வீரர்களுக்கோ அதன் நீர்வாகத்திற்கோ தெரியாமல் குறித்த கழக மைதான பாதுகாவலர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் கழகத்தின் கடிதத் தலைப்பில் கடித மொன்றை காவல் நிலையத்திற்கு சமர்பித்து கழகத்தின் மானத்தை முன்றாம் நபர் வரை எடுத்துச் சென்று கேவலப்படுத்தியுள்ளார். குறித்த காவல் அதிகாரி ஒட்டுமொத்தச் சமுகத்தையும் கழகத்தின் நடத்தையையும் கடுமையாக விமர்சித்ததுடன் சமுகத்தின் முன்நேற்றத்தை கெடுக்கும் இது போன்ற கழகத்தை இது வரைபார்த்தில்லை எனவும் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார்.

.

இச் செயற்பாடு கழகத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்ததுள்ளதுடன் கழகத்தின் இறையாண்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அரச அலுவலகங்கள் மட்டத்தின் கழகத்தின் இன்றை நிலை கவலைக்கிடமான ஒரு விமர்சன பொருளாகமாறியுள்ளது கவலையளிக்கிறது.

.

குறித்த நபரின் செயற்பாடுகள் கட்டுக்கடங்காதவையாகவும் அதை தலைமைப்பீடங்கள் கண்டுகொள்ளாதவையாவும் இருப்பது அருவருக்கத்கதாகும். குறித்த நபர் கழக மைதானத்தை தான் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் அதன் பராமரிப்பு தனக்கு குறித்த அரசியல்வாதி ஒருவர் வழங்கியுள்ளதாகவும் பிரதேசசபையில்பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இத்தனையையும் கண்டும் எந்நவொரு எதிர்ப்பும் காட்ட முடியாமல் இருக்கும் கழக வீரர்களின் மனநிலை மனவருத்ததிற்கு உரியதாகும்.

.

இன்னிலை தொடர்ந்து இன்று ஒரு முடிவை எட்டியுள்ளது குறித்ததிட்டத்தின் முன்னெடுப்புக்கள் .குறித்த பிரச்சனைக்கான தீர்வைப் பெற உதவுமாறு அப்பகுதி பொது மக்கள் எமது கிராமத்தின் சமுக அபிவிருத்தி ஆர்வலர்களிடம் உதவியை நாடி பொதுமக்களுக்கு கடந்த கால கசப்பான அனுபவங்களை காரணம் காட்டியும் அப்போது மக்களின் மௌனத்தின் விளைவுகளே இவை என்று கூறி அவர்கள் உதவ மறுத்து விட்டடார்கள். ஆனாலும் சில வழி முறைகளை தெரிவித்திருந்தார்கள்.

.
அதன் வழி அப் பகுதி மக்கள் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டையில்இறங்கியிருந்தார்கள். அதன் விளைவாக இன்று மாலை (16.09.2015 )பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் வருகை அமைந்தது. அவர்களின் வருகையை அறிந்த பொதுமக்கள் அப்பகுதியில் அணிதிரண்டு வந்திருந்தார்கள். வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் சார்பாக தலைவர் மற்றும் குறித்த நபர் ஆகியோரும் வந்திருந்தனர்.

.

நீண்ட நேர விவாதங்களுக்கு பின்னர் பிரதேச செயலக அதிகாரி கழகத்தின் தலைவருக்கும் குறித்த நபருக்கும் கடும் எச்சரிக்கையை விடுத்ததுடன் கழத்தின் பெயரை வைத்து தனிநபர் விடயங்ளை சுயநல எண்ணங்குளுடன் சாதித்துள்ளதாகவும் இது கண்டிக்கப்பட வேண்டிய விடயங்கள் எனவும் கழத்திற்கு செயலக மட்டத்தில் இருந்த நற்பெயரையும் மரியாதையும் தனிப்பட்ட செயற்பாடுகளால் குலைத்துள்ளதாகவும்தெரிவித்து. தொடர்ந்து வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துச் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து குறிந்த நபர் எதையும் செய்யவிடமாட்டேன் என்று கத்தியபடி சென்றதாகவும் அந்த இடத்தில் நின்றவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

.

அன்பான பொதுமக்களே..அன்பான கழக வீரர்களே…
இங்கே என்ன நடக்கிறது. ? கழகத்தின் வீரர்களாக விளையாடுவது மட்டும் தானா உங்கள் கடமை கழகத்தின் மரியாதையை யாரோ ஒரு சிலர் தன்னிச்சையாக சுயநலமாக கெடுத்து கொண்டிருப்பது உங்கள் சிந்தனைக்கு எட்ட வில்லையா. பொது பொது என்று சொல்லி வந்தவர்கள் இன்று அத்தனையும் தனியுடமையாக்குவது மட்டும் அன்றி கிராமத்தின் அபிவிருத்தியையும் கெடுக்கின்றார்களே இதற்கு என்னதான் முடிவு. கழகத்தை முன்நேற்ற வந்த அரசியல்வாதிகள் எங்கே இதற்கு அவர்கள் கொடுக்கும் பதில் தான் என்ன..? யாருமே சிந்திக்க மாட்டீர்களா. உங்கள் சமூக சிந்தனையும் அக்கறையும் எங்கே போனது? இன்னும் சில காலங்களில் மைதானம் இழுத்து மூடப்படும் நிலைவரலாம் அப்போதும் நாம் …???????

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...