இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

அமரர் காலாபூசணம் நாகப்பு அவர்களின் கலையுலக வாழ்க்கை.

சிறந்ததொரு எழுத்தாளனாக நாட்டுக்கூத்தின் நடிபாகமான வீமன் பாத்திரத்திற்கென்றே உரித்தானவராக திகழ்ந்தார்.

.
1960களின் நாட்டுக்கூத்தில் ஈடுபாடுகொண்டு வித்தியாசமான தாளவமைதிகளை கனகச்சிதமாக போடும் ஓர் கலைஞன்.ஆட்ட நுணுக்கங்களில் பல அசைவுகளையும்,கூத்தாட்டத்தின் உச்சகரமான சுருதியமைவுகளையும்,குழைவுடனும்,நெளிவுடனும் தான் பயின்ற வித்தையை தனது சீடர்களுக்கு இலாவகமாக சொல்லிக்கொடுப்பதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

Scan_Pic0033

..1961 நம்மூர் கூத்துக்கலைஞர்களுடன் அமரர் நாகப்பு

அமரர் நாகப்பு அவர்களின் ஆற்றுகையில் 1960களின் தொடக்கத்திலிருந்து கூத்தின் மேடையேற்றங்களை திகதி வாரியாக பார்போமாயின்:
*புதிய நாடக அரங்கேற்றத்தை 1961.04.14, அன்றும்
*சிந்துபுரம் விசாலாட்சி சமேத காசி விசுவேசர் ஆலயத்தின் இரண்டாம் நாள் மகோற்சவநாளான 1961.06.12, அன்று,
*1961.06.16 ஆறாம் நாள் மகோற்சவ நாளன்றும்,
*1967.07.11 ஒன்பதாம் நாள் மகோற்சவ அன்றும் கோவிலின் வீதியில் ஆடப்பட்டது.

.
அமரர் வித்தியாதரிசகர்,மூதறிஞர்,வரலாற்று ஆய்வாளர்,கௌரவ மு.சீவரத்தினம் அவர்கள் எழுதிய வணிகர் வரலாறு நூலின் வெளியீட்டு விழாவிற்காக ஆடப்பட்டது.இது 1966.09.02 அன்றேயாகும்.

Scan_Pic0035

.பீமனாக அமரர் நாகப்பு

1968.04.10, 1969.04.11 ,1970.04.10 ஆகிய குளிர்த்தி தினங்களின் சிந்துபுரம் அருள்மிகு வீயோடை இலுப்பையடி முத்துமாரி அம்பாள் தேவட்டான வளாகத்தில் ஆடப்பட்டது.

.
23.07.1970 சிந்தூருக்கு வருகை தந்த அன்றைய கலாசார உதவியமைச்சர் சோமவீரசந்திரஸ்ரீ அவர்களை வரவேற்று நாகப்பு அவர்களின் கூத்தாற்றுகை இடம் பெற்றது.

.
அமரர் ககாபூசணம் க.நாகப்பு அவர்கள் மேடை பல கண்டு மேவு புகழ் கொண்ட இடங்களும் காலங்களும்.

.

காலம் நிகழ்வு/ஆற்றுகை களம்
29,06,1961 ஒன்பதாம் திருவிழா மயிலியற்புலம் கந்தசுவாமி கோவில்
21.08.1961 சங்காபிடேகம் சிந்துபுரம் விசுவேசர் ஆலயம்.
24.12.1961 கௌரவித்தல் நிகழ்வு சு.வித்தியானந்தன்,சொர்ணலிங்கம் சி்ந்துபுரம்
04.03.1962 சங்காபிடேகம் சிந்துபுரம் விசுவேசர் ஆலயம்.
17.01.1963 கலைவிழா கட்டுவன்
14.06.1963 திருவிழா சண்டிலிப்பாய் ஆம்மன் கோவில்
20.08.1963 கீசகன் வதை வட்டு இந்துக்கல்லூரி
29.08.1963 சங்காபிடேகம் சிந்துபுரம் விசுவேசர் ஆலயம்.
21.12.1964 கிருட்டிணர் தூது சிநதுபுரம்
14.05.1965  பா.உ வரவேற்று விழா சி்ந்துபுரம்
24.08.1965 திருவிழா கரம்பொன் முருகமூர்த்தி கோவில்
16.04.1966 தந்தை செல்வா முன்னிலையில் இளவாலை மெய்கண்டான் பாடசாலை.
விசுவேசர் ஆலயம்.
10.04.1968 குளிர்த்தி சிநதுபுரம்  முத்துமாரியம்மன் கோவில்
11.04.1969 குளிர்த்தி  சிந்துபுரம்  முத்துமாரியம்மன் கோவில்.
16.04.1970 குளிர்த்தி சிந்துபுரம்  முத்துமாரியம்மன் கோவில்.
23.07.1970 கலாச்சார உதவி அமைச்சர் சோமஸ்ரீ வரவேற்பு கரைநகர் இந்துக்கல்லூரி
22.07.1973 போட்டி குரும்பசிட்டி
02.04.1974 திருவிழா பண்ணாகம் விசுவத்தனை முருகன் கோவில்
22.05.1974 வெள்ளி விழா யாழ்-மாநகர சபை மாநகர சபை மண்டபம்
யாழ்-சம்பத்தரிசியார் பாடசாலை
28.10.1976 திருவிழா காரைநகர்/திக்கரை முருகமூர்த்தி கோவில்
05.02.1978 ஜனாதிபதி பதவியேற்பு வைபவம் கண்டி-தல
26.12.1979 கலைவிழா பாசையூர் சனசமூக நிலையம்.
30.01.1979 காந்திவிழா சிந்துபுரம் காந்திஜீ சனசமூக நிலையம்.

இந்தோடு மட்டுமல்லாது ஆளுனர் விருதும் கலைவாரிதி என்ற சிறப்பு பட்டமும் பெற்றவர்.ஓவியம்,சிற்பம்,நாடகம் போன்ற கவின்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராவார்.

.

தூக்குமேடை எனும் நாடகக்த்தை நெறியாள்கை செய்து மேடையேற்றியும்,அம்மையப்பன்,நண்பன் போன்ற நாடகங்களில் நடிபாகமேற்றும் தன் கலை வெளிப்பாட்டை வெளிப்படுத்தினார்.

பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களின் நெஞ்சில் அலைகள் எனும் புதினத்தை (நாவலை) நாடக வடிவில் யாத்து மேடையேற்றினார்.

வட்டுகோட்டைக்கூத்தும் கிராமியக்கலைகளும் என்ற நூலினை யாத்தவருமாவார்.இந்நூலினை வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிந்துபுரத்தில் பயில் நிலையில் உள்ள கிராமியக்கலைகளும்  அமரர்  நாகப்புவும்

1945 ல் இருந்த கிராமியக்கலைகளின் ஒன்றான புரவி நடனங்கள் இடைக்காலத்தில் பின்னடைவு வந்திருந்த நிலையில் நாகப்புவின் சீரிய ஆர்வத்தால் புதுப்பொலிவு பெற்றது.இதனோடு மட்டுமல்லாமல் கரகாட்டம்,காவடியாட்டம், பொம்மலாட்டம், அநுமனாட்டம், கூத்துப்பிரானாட்டம் ஆகியவை முழுவீச்சல் மீள்பிறப்பாகிற்று.

புரவி வடிவமைப்பில் இரா.கருணாநிதி அவர்களிடம் கற்றுக்கொண்ட சிற்பவித்தைகளை இன்றைய காலகட்டத்தில் இவரது புத்திரர்கள் இன்றும் ஆக்கி ஆற்றுகையை நிகழ்த்தி வருகிறார்கள்.இவ்வாறான வழிவந்த கலையாழுமைகளை எம் கிராமத்தின் ஏனையோர் சிலரும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

கிராமியக்கலைகளில் காவடியாட்டத்தை தனது புத்திரர்களையும் இணைத்து எமது பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாத்து சமய சமூக,  அரசியல், கலாசார நிகழ்வுகளில் தங்கள் பங்கினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கரகாட்டத்தில் இவரது சீடர்கள் மாவட்ட வாரியாகச்சென்று ஏகோபதித்த பாராட்டுதல்களையும்,நெஞ்சார்ந்த நிறைவினையும் ஈட்டி வருகின்றார்கள்.

இதில் நாகப்பு குமரன்,யோகநாதன் கேதீஸ்வரன் ஆகியோர் ஆடிவருவது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது நூலில் தனது பேரன் காலத்தில் அவர் திறமையாக கரகமாடி வந்தாரென்றும் உரல் மேல் நின்று கரகமாடுவதில் அவர் வல்லவர் என்றும் கூறியுள்ளார்.

பொம்மலாட்டக்கலையில் பூத உருவத்தை இரா.கருணாநிதி அவர்கள் செய்வதை கண்ணுற்று அவராக்கும் உருவங்களை போன்று நேர்த்தியாக செய்து ஆற்றுகைக்கு களம் காண வைத்தார்.

ஓவியம்,சிற்பம் சார்ந்த கலைஞர்கள் பொதுவாக தம் கலை சார்ந்தே சிறப்புத் தேர்ச்சியுற்றிருப்பர்.ஆனால் அமரர் நாகப்பு அதையும் தாண்டி பல்கலை வித்தகராக விளங்கினார்.எடுத்துகாட்டாக பொம்மலாட்ட உருவங்கள் அமைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.சிற்ப வேலை செய்பவன் பொம்மலாட்ட உருவங்களை அமைப்பது கடினமானதாகும்.ஆனால் இந்த வரம்பினை தாண்டி அவர் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

Scan_Pic0036

மல்லன் மடையன் போர் அமரர் சிவலிங்கத்துடன் நாகப்பு

ஒரு பல்துறை சார்ந்த கலைஞனாக இதுவே சான்றாகிறது.

வரலாற்று ஆவணமாக பதியவைக்க வேண்டிய பொறுப்பினை உணர்ந்து கையெழுத்து வடிவில் பேணப்பட்டு வந்த கலைப்படைப்பை எதிர்கால சந்ததியினருக்காக நூலாவணமாகப் படைத்தவராவர்.

இதனோடு மனதுக்கு இதமளித்து மகிழ்வூட்டி நெறிப்படுத்தும் கிராமியக்கலைகளுக்கு புத்துயிரூட்டியும் நல்ல கலைஞனுக்குரிய பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டவராவார்.கைதேர்ந்த கூத்தராக, நல்லாசிரியராக, நாடக நெறியாளனாக,சிற்பியாக,அண்ணாவியாராக பன்முகம் கொண்ட இவர் நம்மவர் முகங்களையும்,முகவரிகளையும் தொலையவிடாது நல்ல பதிவினை மேற்கொண்டார்.

Scan_Pic0037

தலைமுறைதாண்டி பயணிக்கும் நாகப்புவின் கலைகள்

இப்படி எம் சமூகத்தின் கலை இருப்புக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உன்னதக்கலைஞனை எம் சமூகம் சமகாலத்தில் கொண்டாட தவறிவிட்டது இறுதிவரை ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த பெரும் கலைஞனை எம் சமூக பார்க்காமல் அவனை அதே நிலையில்  இறுதிமூச்சு வரை பாராமுகத்துடன் இருந்தது எம் சமூகத்தின் சாபக்கேடாகும்.

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...