இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுர கூத்தரங்கின் வெளிப்பாடும் வரலாறும் (பகுதி 2).

சிந்துபுரத்தில் நிலவிய விலாசக்கூத்து.

வட்டுக்கோட்டைச் சிந்துபுரக்கூத்து மரபில் முன்பு வழக்கில் இருந்த விலாசக்கூத்து சிறப்பானதாக வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறது.

.
இவ்விலாசக்கூத்துக்களில் முக்கியமாக ஆடப்பட்ட கூத்துக்களாக மார்க்கண்டேய சரித்திரம்,வலைவீசி புராணம்,பவளக்கொடி,அல்லி அர்ஜினா,ஸ்ரீ வள்ளி,அதியரசன் ஆகியவை அமைந்துள்ளன.இக்கூத்திலே பபூன் எனப்படும் கோமாளிப் பாத்திரமானது இடையிடையே கலகலப்பினை ஊட்டுவதான மேடைக்கதை அமைப்பு இருக்கும். திரைமறைவில் இருந்து ஒரு நடிகன் வரும் போது பாட்டின் சிறுபகுதியை பாடி அரங்கில் தோன்றுவர். உதாரணமாக குகசரவணபவசிவபாலா என்னும் பாடலினை சிவபாலா என அனுபல்லவியை பாடியபின்பு பல்லவியான குகசரவணபவ எனப்பாடும் முறைமை இங்கு காணப்பட்டது.

.
அந்நாளில் விலாசக்கூத்தாடிய அண்ணாவியார் முருகர் சந்திரகாந்தா அரசன் பாத்திரத்தில் தோன்றி மக்களின் பாராட்டைப் பெற்றவராக திகழ்ந்தார்.அவர் உண்மையிலேயே பேரழகுடனும் முகபாவனையுடனும் வசீகரமாக இருந்ததால் மக்களின் உள்ளங்களை கவர்ந்தவர் என்றும் இக்கூத்தினை அந்நாளில் பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.

.
விலாசக்கூத்திலே மடையன் பாத்திரத்தில் முத்துமுருகு என்பவரும் மல்லன் பாத்திரத்தில் பொன்னம்பலம் என்பவரும் வேடுவிச்சி பாத்திரத்தில் நேசன் முருகர் என்பவரும் கன்னன் பாத்திரத்தில் ஆண்டார் வேலுப்பிள்ளை அவர்களும் (கன்னப்பா) திருதராட்டினன், கட்டியக்காரன் பாத்திரங்களில் சிற்பவல்லுனர் பேரன் கிருட்டியப்பா என்று சொல்லப்படும் கிருட்டிணரும், அநுமான் பாத்திரத்தில் பொன்னாலையப்பா என்பவரும் தோன்றியதாக அறிய முடிகிறது.
கூத்துக்களின் வடிவங்களாக தெருக்கூத்து, நாட்டுக்கூத்து, விலாசம் என்பவை விளங்குகின்றது.இதிலே விலாச வடிவமும் தென்மோடிக்கூத்து வடிவமும் ஒத்த சாயலைக்கொண்டதாக அமைந்துள்ளது. ஆதி விலாசக்கூத்தில் ஆடப்பட்ட தன்மையினையும் அடிப்படையினையும் கொண்டு தென்மோடி அடிப்படையினையும் கொண்டு விலாசக்கூத்தில் மறைவிடத்தில் இருந்து பாடிக்கொண்டு வரும் மரபு காணப்பட்டதெனவும், இதன் பக்க வாத்தியமாக ஆர்மோனியமும் ,தோல் வாத்தியமும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலே கூறிய கருத்துக்கள் விலாசக்கூத்தை ஆடிவந்த முன்னோரின் வழித்தோன்றலான மூத்தகலைஞர் அமரர் வைத்தியர் முருகேசபிள்ளையாவார்.

.
விலாசக் கூத்துக்களானது முதலில் ஆட்ட முறைகளை கொண்டிருந்தும்,பின்பு ஆட்ட முறைகள் அற்றதாகவும் காணப்பட்டது.வடமோடிக்கூத்தினை போலல்லாது இங்கு சில இடங்களில் வசனங்கள் நீண்டதாக இருக்கும்.சிந்துபுரத்தில் உள்ள சந்தைச்சதுக்கத்தில் ஏறக்குறைய 85 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு செழித்துயர்ந்த புளியமரம் இருந்ததாகவும் அதிலே மூன்று வடங்களை தொங்க விட்டு நான்குபேர் இருக்க ஒரு முனையில் ஒருவரும் ஊஞ்சலுக்கு எதிர்முனையில் மற்றையவரும் உதைந்து விளையாடுவதாகவும் ஊஞ்சல் ஆட்டம் இருக்கும்.அதில் இருப்பவர்களை நோக்கி உதைப்பவர்கள் பாடல்களை பாடுமாறு வேண்டுகோள் விடுப்பதாக கூறுவார்கள்.வேண்டுகோளுக்கேற்ப அவர்களின் தெரிவிற்கேற்ப பாடுவார்கள்.இந்த ஊஞ்சலாட்டக் கலையும், கூத்துக்கலையில் இருந்து பிறந்த கிளைக்கலை வடிவமாகும்.இது சிறப்பாக சித்திரை புதுவருட நாட்களில் நிகழ்த்தப்பட்டிருந்தது.

.
யாழ்ப்பாண இசை நாடக வரலாற்றில் ”புத்துவாட்டியார்”மருவம் என்ற நாடகக் கொட்டகை (இன்றைய மனோகர திரையரங்கு) எவ்வாறு கலை வெளிப்பாட்டிடமாக விளங்கியதோ, அது போல சிந்துபுர வரலாற்றை மீட்டிப் பார்க்கின்ற பொழுது நிரந்தரக் கொட்டகை இடப்பட்டு பல கூத்துக்கள் ஆடப்பட்டு வந்திருக்கிறது. அல்லி அருச்சுனா போன்ற விலாசக்கூத்துக்கள் இங்கே ஆடப்பட்டது. ஸ்ரீவள்ளி நாடகமும் வட்டக் கொட்டகையிலேயே ஆடப்பட்டது.இந்தக்கொட்டகை அன்றைய நில உரித்துடைமை காரரான சரவணை எனும் சவட்டியப்பன் என்பவரின் வளாகத்திலேயே ஆடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

.
விலாசக்கூத்தினை படச்சட்ட முறையில் மேடை நாடகமாக்கிய பெருமை சர்வகாளிமாருதிதாசன் அவர்களையே சாரும்.
மார்க்கண்டேயர் நாடகமானது விலாசமாக செகிட்டு அண்ணாவியாரின் நெறியாள்கையிலேயே கண்ணகை அம்மன் கோவில்  உற்சவங்களிலே மேடை ஏற்றினர்.
கரம்பொன்,ஊர்காவற்றுறை போன்ற பகுதிகளில் விலாசக்கூத்தானது எம்மூரவர்களால் ஆட்டப்பட்டது.

.
முன்வள்ளியாக மருதப்பு நட்சத்திரமும், பின்வள்ளிக்கு முறிவுநெறிவு விசகடி வைத்தியர் அமரர் முருகேசபிள்ளை அவர்களும், முருகனாக குருசாமியும் நடித்தனர்.ஸ்ரீவள்ளி நாடகமானது சிந்துபுரம்-திருநாவுக்கரசு மகாவித்தியாலத்தின் அபிவிருத்திக்காக மேடையேற்றப்பட்டது. காரைதீவு தீவு பெட்டி வேலுப்பிள்ளை இதனை நெறியாள்கை செய்து மேடையேற்றியவராவார். இந்நாடகத்தில்ஆறுமுகம் (கரம்பொன்),சிவசம்பு ஆகியோர் ஆடிவந்தனர்.

.
சித்தாந்த சாகரம் மூதறிஞர் முத்தமிழ் ஆசான் அமரர் கிருட்டினர் துரைசுவாமி அதிபர் அவர்கள் அந்நாடகத்தை முன்னின்று நடாத்திய பெருமைக்குரியவர்.இந்தச் செய்தியை அமரர் பொன் முருகேசபிள்ளை அவர்களின் கூற்றில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
அல்லி அருச்சுனாவில் அல்லியாக மருதப்பு வேலாயுதமும்,அருச்சுனனாக முருகர் பண்டாரப்பிள்ளையும் ஆடினர்.வித்தியாசம்பந்தன் நாடகத்திலே வித்தியாசம்பந்தனாக மாணிக்கையா அவர்களும் ஆடினர் என குறிப்பிடப்படுகின்றது.

.
விலாசக்கூத்தில் ஒரு பாத்திரமானது வாயில் மண்ணெண்ணை வைத்துக் கொண்டு ,நெருப்புச் சுடரினை கையில் ஏந்தியபடி வாயில் இருக்கும் மண்ணெண்ணையை நெருப்புச்சுடரினை நோக்கி கொப்பளித்து தீப்பிழம்பினை ஏற்படுத்தும் இவ்வாறான மயிர்க்கூச்செறியும் செயற்பாட்டினை அண்ணாவி முருகர் ,வடிவேலர்,கருவேற்பிள்ளை ஆகியோர் ஆற்றுகை வடிவில் மேடையில் நிகழ்த்தியதாக அறியமுடிகின்றது.

.
இதனை அடியொற்றி இன்றைய நவீன நாடகங்களில் நுணுக்கமாகவும் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.முன்னைய விலாசக்கூத்திலே சுற்றிவர வாழைக்குற்றிகள், பாச்சிமரம், குத்துக்கால்,என்பன நாட்டப்பட்டு,ஆடப்பட்டதாக முன்னோர்களிடத்தில் இருந்து அறியமுடிகிறது.இவை வட்டக்களரிக்கு ஒளியூட்டம் பெற பயன்படுத்தப்பட்டன.
செகிட்டண்ணாவியாரின்  சீடர்களாக கீசகன் கந்தையா, அண்ணாவியார் முருகர் ஆகியோர் இருந்து விலாசக்கூத்திற்கு உதவியவர்கள் ஆவர்.

.
ஸ்ரீவள்ளி நாடகத்திலே இன்றைய இசை நாடகத்தினை போன்று தினைப்புனம் காத்து நிற்கின்ற தன்மை உள்ளது. அந்த நாடகத்தில் மைனாக்கள் ,கிளிகள் என்பனவற்றை யதார்த்தமாகவே மேடையில் கொணர்வித்து ஆற்றுகை நிகழ்த்தியதாக அறியமுடிகிறது.

 ஆலோலம் ஆலோலமே

அண்டைக்குருவிகளே அண்டாதே
கண்டிக்கவனெடுத்து கல்லெறிவேனே
பட்டப்பகலில் பார்த்திருக்க கவர்ந்திடுவீரே
நானிங்கு காவல் இருக்கிறேனே
கவன் வீசிக்கல்லெறிவேனே..

என்ற வசனப்பாங்கான பாடல் நாடோடித்தன்மையாக அமைகின்றது.

.
மார்க்கண்டேயர் நாடகத்தில் அமரர் காசிப்பிள்ளை வாத்தியார் சிவபெருமான் பாத்திரத்திலும்,சர்வகாளிமாருதிதாசன் அவர்கள் இயமன் பாத்திரத்திலும் நடித்திருந்தனர். அத்தோடு தம்பிராசா அவர்களும் சிவன் பாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு பாத்திரத்திற்காக இருவர் வேடமேற்கும் மரபு சிந்துபுர விலாசக்கூத்தில் மட்டுமே புகுந்திருந்தது. ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளி என்ற பாத்திரத்தில் முன்வள்ளி,பின்வள்ளி என ஆடியதனையும் இங்கு சான்றாக கூறலாம்.

தொடரும்…….

.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...