இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பெயர்ப்பலகைக்கு எதிரான வழக்கின் இரண்டாம் ஆண்டு.

சிந்துபுரம் எனும் பெயர் பதித்திருந்த வட்டுக்கோட்டை பொதுச் சந்தைக்குரிய பெயர்ப்பலகையை நீக்கச்சொல்லி இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.

.
காலத்திற்கு காலம் சிந்துபுரம் எனும் பெயருக்கெதிராக பல வழிகளிலும் சீண்டல்கள் தொடர்ந்த வண்ணம் இருப்பது யாவரும் அறிந்ததுதான்.அந்த தொடர் சீண்டலின் கடைசி அத்தியாயம் தான் இந்த பெயர்ப் பலகைக் கெதிரான வழக்குத் தாக்கல்.

.
1928 ல் சிந்துபுரம் எனும் பெயருக்கான கருத்துருவாக்கம் உருப்பெற்றது. இந்த சிந்துபுரம் என்பது வெறும் பெயர் அல்ல.அது பொதுவுடமை, சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம்,ஜனநாயகம், சமவுரிமை என்பவற்றின் குறியீடு.

.
ஓர் சமூகம் இந்தக்காரணிகள் யாவற்றையும் பெற்றுக்கொண்டால் அதன் வளர்ச்சியும்,வீச்சும் அதிகரிக்கும்.அந்த வளர்ச்சியையும்,வீச்சையும் பொறுத்துக் கொள்ளாதவர்கள் சிலராலேயே சிந்துபுரம் எனும் பெயரை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

.
என்ன தான் சொன்னாலும் சிந்துபுரம் எனும் பெயரின் நியாயத்தன்மைகள் பற்றிய தெளிவு, அதை அழிக்க நினைப்பவருக்கும் தெரியும்.நீதிமன்று சென்றாலும் சிந்துபுரம் எனும் பெயருக்கெதிராக தாம் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எடுபடாது என்பதும் அவர்களுக்கும் தெரியும்.

.
எனவே தான் சிந்துபுரம் எனும் பெயருக்கெதிராக அவர்களால் இது  வரையிலும் வழக்கு தொடுக்க முடியவில்லை.மாறாக சிந்துபுரம் எனும் பெயர்ப்பலகை வட்டுக்கோட்டை பொதுச்சந்தைக்கு பொருத்தமில்லை.அதை நீக்க வேண்டும் என மட்டுமே வழக்குத் தொடுத்தனர்.

.
அத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் அந்தப் பெயர்ப்பலகை திறக்கப்பட்டதால் புலிகளையும் அந்தப் பெயரோடு இணைத்து விட்டிருந்தனர்.

.

S.S (F/R) Application
No :580/2012

என்ற வழக்கு எண்னாக உச்ச நீதிமன்றில் சிந்துபுரத்தை வதிவிடமாகக் கொண்டிருக்கும் பத்து பேர் மேற்படி வழக்கை தொடுத்திருந்தனர்.

.
வலி – மேற்கு பிரதேச சபை, முன்னாள் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான மு.சந்திரகுமார் உட்பட முப்பத்தியிரண்டு தரப்பை பிரதிவாதியாக குறிப்பிட்டிருந்தனர்.

.
இந்த முப்பத்திரண்டு தரப்பும் தான் பெயர்ப்பலகையை நீக்காமல் இருப்பதற்காக காரணவாதிகள் என்பது தான் அவர்களின் குற்றச்சாட்டு.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த முப்பத்திரெண்டு பேரிலும் ஒருவர் கூட சிந்துபுரத்தை பிறப்பிடமாகவோ,வதிவிடமாகவோ கொண்டவர்களில்லை.
மாறாக அவர்கள் அரசியல்வாதிகளாகவோ,பிரதேச சபை உருப்பினராகவோ,பிராந்திய காவல்துறை அதிகாரிகலாகவோ இருந்தனர்.

.
வழக்கின் முக்கிய வாதங்கள்

.
…. (25) வது பந்தி…..

The    peritioners  state   that   on   26.00.2005   a   group   of   people   suppoosed   to  be   supporters  of   the  Liberation   Tighrs   of   Tamil   Eelam   (LTTE)   effecter   changes   in   the   name-board   at  the   Rathalady  market   without   any   permisson   of   the   relevant  authoritirs ;  naming   the  same   as   Sinthupuram  public   market;  in   honour   of   fallen   LTTE  cardres. The  petitioners  futher  state  that  as  the LTTE was   very   powerful   in   the   area   by   then,  no   mortal   dered   to   chanllenge   the   said   action.

.
சாதிகள் ஒழிந்து வரும் காலத்தில் சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு,தம் குரூர குணத்தை வெளிப்படுத்தியிருந்தனர்

.
….(38) வது பந்தி..

.
The   petitioners   state   that   persons   belongins   to   various   castes   such   as   (அயல் கிராமத்தில் வசிக்கும் ஐந்து சாதிபெயர்கள்) ect   live   in   the   village   of   Sivankovilady   and   if part   of   the   same   were   to   be   renamed   as   ‘Sinthupuram’   it   would   represent   only   one namely   (எமது சமூகத்தின் சாதிப்பெயர்),which   corresponds  to   the   Indian   caste   of   ‘Sindu nadar’

.
மேற்படி கூற்றில் இருந்து சிந்துபுரம் எனும் கருத்துருவாக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்ததோடு, அது எம் சமூகத்திற்கான தனித்துவமான பெயர் என்பதையும் நீதிமன்றத்திற்கு விளக்கியிருந்தனர்.
ஒட்டு மொத்தத்தில் அவர்களுக்கே தெரியும் சிந்துபுரம் எனும் பெயரை எந்தக் காரணத்தைக் கூறியும் நீதிமன்றால் தடை வாங்க முடியாது என்பது.ஆனால் சிந்துபுரம் என்னும் பெயர் எழுதியிருந்த ஓர் சீமெந்துப் பலகையை நீக்கினால் கிராமத்தில் அமைதி நிலவிவிடும் என்பதாக நியாயம் கூறியிருந்தனர்.இது அவளை நினைத்து உரலை இடித்த கதை போலத்தான். தாம் சார்ந்திருக்கும் தரப்பு ஊரின் அமைதிக்கு வேட்டு வைப்பதையும்,ஊரின் பொதுச்  சொத்துக்களை தம்வசப்படுத்தி இருப்பதையும்  மறைத்து   தாம் பெரும் நியாயவாதிகள் போல்   நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருப்பது உலக மகா வேடிக்கை.

.
சிந்துபுரம் எனும் பெயர்ப்பலகை வட்டுக்கோட்டை பொதுச்சந்தைக்கு பொருத்தமில்லை என்ற பல காரணங்களைச் சொன்ன அவர்கள் கிராமத்திற்கு குறிப்பிட்ட பெயர் தான்  இருக்க வேண்டும் என எந்த ஒரு நியாயத்தை தானும் நீதி மன்றில் தெரிவிக்க முடியவில்லை. ஏனெனில்  தாங்கள் நினைக்கும் பெயர் ஊருக்கு வைப்பதற்கு எந்த வித தாற்பரியங்களோ, நியாயங்களோ கிடையாது என்பது  அவர்களுக்கே  தெரியும்  .

.
ஒரு சாதாரண சீமெந்துப் பெயர்ப்பலகையை நீக்குவதற்கு கிட்டத்தட்ட ஏழு இலட்சம் ரூபாக்கள் வரை அவர்களால் செலவு செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

.
எனினும் பிரதிவாதிகளின் தரப்பு தாம் சிந்துபுரம் எனும் பெயர் தாங்கிய பெயர்ப்  பலகையை நீக்கிக்கொள்வதாக தெரிவித்ததை அடுத்து வழக்கு தள்ளுபடியானது என்பது தான் உண்மை.

.
Consel   for   the   parties   informe   court   that   parties   have   agrees   that   the   Market   will   be named   as   Vaddukoddai   Public   Market.

என்பதே உச்ச நீதிமன்றால் வழங்கப்பட்ட ஆணை.

.
அதாவது  பொதுச் சந்தை என சந்தையின் பெயரை  வட்டுக்கோட்டை பொதுச்சந்தை என அழைப்பதற்கு இருதரப்பும் உடன் படுவதாக அறிவித்துள்ளனர்.

.
என்பதே இறுதித்தீர்ப்பு.

.
அதாவது பரஸ்பர உடன்படிக்கையால் வழக்கு விசாரணையின்றி   தள்ளுபடி செய்யப்பட்டது என்பது தான் உண்மை.

.
இங்கு சிந்துபுரம் எனும்பெயர் ஊருக்கு வைக்க முடியாது என்ற பதம் எங்கும் உச்ச நீதிமன்றால் பாவிக்கப்படவில்லை.எனவே இது சிந்துபுரம் எனும் பெயருக்கு எதிராக வழக்கு என்று சொல்லுவது முற்றிலும் சட்ட ரீதியற்ற  கருத்தாகும்.

.
ஒரு வேளை பிரதிவாதிகள் சமரசத்திற்கு வராமல்  வழக்குக்கு எதிராக பிரதேச சபை வாதிட்டிருந்தால் சிந்துபுரத்திற்கு ஆதரவாக அரசாங்கமே வாதிட்ட வரலாற்று நிகழ்வு நிகழ்ந்திருக்கும்.அத்தோடு மட்டுமல்லாது சிந்துபுரம் எனும் பெயரின் பின்ணணியும், அதை எதிர்க்க நினைப்பவர்களின் பின்ணணியும் அவர்களின் கடந்த கால சமூக விரோத செயற்பாடுகள் என்பன நீதிமன்றில் விவாதிக்கப்பட்டிருக்கும்.அவர்களால் கையகப்படுத்தப் பட்டிருக்கும் பொதுச் சொத்துக்களின் விபரங்களும் நீதிமன்றுக்கு வந்திருக்கும். பிரதேச சபை தானாக முன்வந்து பெயர்ப்பலகையை நீக்குவதாக ஒத்துக்கொண்டதால் வழக்கு தொடுத்தவர்களின் தலை தப்பியது என்றே சொல்ல முடியும்.

.
இல்லையென்றால் அவர்களுக்கு பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான நிலையை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

.
ஆக மொத்தத்தில் இந்த வழக்கு பணப்  பெருமைக்காகவும்,ஊர் மீதான தமது நிலையை இறுக்கிக்கொள்ளவும் ஓர் நப்பாசையில் போடப்பட்ட வழக்கு என்பது தெளிவாகிறது.
இந்த வழக்கின் மூலம் சந்தை சதுக்கத்தில் இருந்த பெயர்ப்  பலகையை மட்டுமே அவர்களால் நீக்கமுடிந்தது.ஆனால் கிராமத்தின் நுழை வாயில் இருக்கும் பெயர்ப் பலகையையோ, அல்லது பேரூந்து தரிப்பு நிலையத்தில் இருக்கும் சிந்துபுரம் எனும் பெயரையோ அவர்களால் நீக்க முடியவில்லை.அதற்குரிய நியாயங்களோ அவர்களிடம் இல்லை என்பது தான் உண்மை.அவை நமது ஊரின் பெயர் சிந்துபுரம் தான் என்பதை உலகிற்கு  சொல்லிக்  கொண்டே இருக்கும்.

.

 

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...