இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

முதுதமிழ்ப் புலவர்.மு.நல்லதம்பி.

முதுதமிழ்ப்புலவர் அவர்கள் 13.09.1896 ல் யாழ்ப்பாணம் சிந்துபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார்  பெயர் முருகுப்பிள்ளை தாயார் பெயர் தங்கம்மை .இவர் தனது ஆரம்பக் கல்வியை கற்பகச்சோலை (முன்பு பிளவத்தை) அமெரிக்கன் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்றார்.பின் தனது உயர் கல்வியை தெல்லிப்பளை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் பயின்றார்.தனது உயர் கல்வியை ஒர் பயிற்றப்பட்ட 1914 ல் ஆசிரியராக முடித்தார்.

.
ஆரம்பத்தில் பண்டத்தரிப்பு, மண்டைதீவு,ஆனைக்கோட்டை,ஆகிய இடங்களில் தமிழாசிரியராக கடமையாற்றினார்.அதன் பின் 1918 ல் கொழும்பு சாஹிரா கல்லூரியில் தமிழாசிரியராக சேர்ந்தார்.

.
கொழும்பில் ஆசிரியர் பணியின் போது தென்கோவை பண்டிதர் ச.கந்தையாப்பிள்ளையிடன் தமிழ் பயின்றார். அவரின் வழிகாட்டலில் தொல்காப்பியம்,சங்க இலக்கிய நூல்கள் என்பவற்றை மாசறப் பயின்றார்.இதன் மூலம் இவரின் தமிழ்ப்புலமை மேலும் பட்டை தீட்டப்பட்டது.

.
கொழும்பில் ஆசிரியர் வேலை செய்யும் போதே அங்கு நடைபெற்று வந்த பல மேடை நாடகங்களிலும்,பிரசங்களிலும் பங்குபற்றி பிரமலமடைந்தார். அதே காலப்பகுதியில் எம் சிந்துபுர கிராமத்தின் தனித்துவக் கலையான வடமோடி நாட்டுக்கூத்தில் இவரால் இயற்றப்பட்ட பல பாடல்களும் வசனங்களும் சேர்க்கப்பட்டன.

.
இவரின் தமிழ் பாண்டியத்தை மதிக்கும் முகமாக கொழும்பு சாஹிரா கல்லூரியின் தமிழ்த்துறைப் பொறுப்பாசிரியாக அதன் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டர்.ஏறக்குறைய இருபத்து எட்டு ஆண்டுகள் சாஹிராக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.

.
இவரின் தனித்துவமிக்க மேடைப் பேச்சாற்றால் கொழும்பில் வாழ்ந்த  தமிழர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அக்காலத்தில் ஆங்கில மோகத்தில் இருந்த கொழுப்புத் தமிழர்கள் இவரின் மொழியாற்றலால் உந்தப்பட்டு தமிழில் வீடுகளில் பேச ஆரம்பித்தனர்.அத்தோடு கொழும்புக் கல்விச் சமூகத்தினரின் மத்தியிலும் தமிழிற்க்கு முக்கியத்துவம் கொடுக்க இவரது தமிழ்ப்பேச்சுக்களும் ,எழுத்துக்களும் காரணமாயின.

.
1940 களில் தமிழ் நாட்டின் மதுரை,திருநெல்வேலி நகரங்களில் இவர் பல சொற்பொழிவுகளை காலத்திற்கு காலம் ஆற்றிவந்தார்.அவரின் சொற்பொழிவை வியந்து அங்கே அவருக்கு ”முதுதமிழ்ப்புலவர்” எனும் பட்டம் அந்த தமிழ்ச்சங்கங்களால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். இதுவே பிற்காலங்களில் அவரின் அடைமொழிப்பட்டமாக மாறியது.

.
இலங்கையின் சுதந்திரத்தை தொடர்ந்து 1948 ல் தேசிய மட்டத்திலான மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.அந்த மரதனோட்டத்தை சிறப்பிற்கும் படியாக அகில இலங்கை மட்டத்தில் கவிதைப்போட்டி நடத்தப்பட்டது.அந்தப்போட்டியில் முதுதமிழ்புலவரின் கவிதை முதலாம் இடம் பெற்றது.

88

 

.முதுதமிழ்ப்புலவர். மு.நல்லதம்பி

இலங்கையின் தேசிய கீதம் 1940 களின் ஆரம்பத்தில் சிங்களத்தில் எழுதப்பட்டது.அந்த தேசிய கீதம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசால் 1950ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அதன்படி தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்க்கும் படி முதுதமிழ்ப்புலவர் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

.
காலத்திற்கு காலம் இவர் தமிழ் பத்திரிக்கைக்கு வழங்கிய கட்டுரைகள் பல.பல ஆண்டுகள் கல்விப்பணியின் அனுபவத்தைக் கொண்டு இவர் எழுதியமைத்த ”ஈழவாசகம்” எனும் பாடநூல் வரிசையினை சென்னை மக்மிலான் நிறுவத்தினர் தமது பதிப்பாக வெளியிட்டு இவரை மதிப்பளித்தனர்.

.
1945 இவர் தனது கல்விப்பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.ஓய்வின் பின் கொழும்பு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்டார்.அங்கே சில ஆண்டுகள் கடமையாற்றினார்.

.
இவ்வுலகில் ஐம்பத்தைந்து ஆண்டு காலமே வாழ்ந்த முதுதமிழ்புலவர் நல்லதம்பி அவர்கள் தமிழிற்கும்,எம் கிராமமான சிந்துபுரத்திற்கும் அழிக்கமுடியாத சேவையை செய்துள்ளார்.08.05.1951 அன்று இவர் இயற்கையெய்தினார்.

.
முதுதமிழ்புலவரின் படைப்புக்கள்.

  • மணித்திருநாடும் மரதன் ஓட்டமும்.
  • தாகூர் காணும் தோட்டி
  • ஆய்அரண்டுனும் ஓடைகிழாரும்
  • பாவலன் பாரதி,
  • சீதனச்சிந்து,
  • பொன்பெற்ற துறவி
  • ஈழ வாசிப்பு புத்தகங்கள்
  • மொழிப் பயிற்சிப்புத்தங்கள்.
  • இளைஞர் விருந்து. (வட்டுக்கோட்டை இளைஞர் மன்ற வெளியீடு).

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...