இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுர நாட்டுக்கூத்தின் ஆட்ட முறைகளும் நுணுக்கங்களும்.(பகுதி 2 )

கண்ணிகள்.

.
இரண்டு கால்களையும் துள்ளல்ளுடன் குத்தி வலப்புறமாகவும், இடப்புறமாகவும் அல்லது பின்புறமாகவும், முன்புறமாகவும் நகர்ந்து ஆடப்படும் ஆட்டம் கண்ணியாகும்.

.
கண்ணியாட்டமானது இரு வகைமைப்பாடுகளைக் கொண்டது.

.
1.ஒற்றைக்கண்ணி
2.இரட்டைக்கண்ணி

.
என்பனவே அவையாகும்.

.
ஒற்றைக்கண்ணி.

.
ஒரு துள்ளலுடன் நகர்வாட்டம் ஆரம்பித்து மூன்றாவது அல்லது ஐந்தாவது துள்ளலில் நிறைவுறும் ஆட்டமாக இது காணப்படுகின்றது.இதன் தாளக்கட்டு :-தாங்கு தத்தக தாங்கு தத்தக ஆகும்.

.
இரட்டைக்கண்ணி.

.
ஒரு துள்ளலுடன் ஒற்றைக்கண்ணி நிறைவுற்று மூன்று அல்லது ஐந்து துள்ளலின் பின் , இரு துள்ளலில் ஆரம்பித்து மூன்று அல்லது ஐந்து இரு துள்ளலில் பின் நிறைவுறும் ஆட்டம் இரட்டை கண்ணியாகும்.

.

இதன் தாளக்கட்டு:- தத்துமி தத்துமி தத்துமி தாங்கு. ஆகும்.

.
செச்சை

.
செச்சை ஆட்டம் பெண் வேடங்கள் தோன்றும் சந்தர்ப்பங்களிலும் வேடன், வேடுவிச்சி தோன்றும் சந்தர்ப்பங்களிலும் ஆடப்படுகிறது.ஏதாவது ஒரு ஆட்ட முடிவில் அசைவோடு காலினை நிலத்தோடு குத்திப்போடுதலினைக் கொண்டதாக அமைந்திருக்கும்.

.
இது வேடன் ஆட்ட முடிவில் மூன்றடித்தாளம் இட்ட பின்னர் போடப்படும்.வேறு ஏனைய பாத்திரங்களிலும் காணப்படும்.

செச்சையின் தாளக்கட்டு :- தீங்குந்த தீங்குந்த என்பதாகும்.

.
பீமன், கிங்கிரன்,அநுமன் போன்ற பாத்திரங்களில் முறையிலேயே செச்சை ஆட்டம் காணப்படுகிறது.

.
இதன் விரிவான தாளக்கட்டு ததீந்தக்க ததீந்தக்க ததீந்தக்க என்பதாக அமைந்து காணப்படும்.
வேடன், வேடுவிச்சி, சடாசூரன், திரௌபதி, சுபக்கணை என்கிற பாத்திரங்களிலேயே இது அமைவுற்றுக் காணப்படுகிறது. சடாசூரன் திரௌபதியை நெருங்கி பலவந்தப்படுத்த முனையும் போது இந்தத் தாளக்கட்டு சுவையானதாக அமைந்திருக்கும்.

.
அடந்தை.

.
வலக்காலினை இடக்காலின் முன்னாக நிலத்தோடு தட்டி அறுபது பாகையளவில் பிறை விடிவில் வைத்த பின்னர் இடக்காலின் நுனிப்பகுதியை குவித்துக் குத்தியவாறு தொடர்ச்சியாக மாறி மாறி இடப்போக்கிற்கேற்ப ஆடும் ஆட்ட வகைமையே அடந்தை என அழைக்கப்படும்.

.
அடந்தையின் தாளக்கட்டு :- திரிகிட்டாங்கதக திரிகிட்டாங்கதக  …. என்பதாகும்.

 

.
நான்கடித்தாளம்.

.
முதலாட்ட வெளிப்பாட்டில் முதற் தடவையில் வலக்காலை வைத்து பின்பு இடக்காலை வைத்து வலப்புறமாக நகர்ந்து பின்னர் தத்ததீனா தாளம் விழும் போது வலக்காலினை அழுத்திக் குத்தல் இடம்பெற்று பின்னர் இடப்பக்கமாக திரும்பல் இரு தடவை இடம் பெறும்.

.
மேற்குறிப்பிட்ட ஆட்டத்தில் வலப்பக்கமாக திரும்பும் போது இடப்பக்கங்களில் குத்தப்படும் தன்மை ஆட்ட நுணுக்கமாயும் நுண்ணிய ஆடலையும் கொண்டு அமைந்திருக்கும்.நான்கடித்தாளத்தின் தாளக்கட்டு தீந்தாங்கத் தீந்தாங்கக தத்ததீனா இதன் ஆட்டமானது வேடன் வேடுவிச்சி ஆகியவற்றில் காணப்படும்.

.
முதலில் வலப்புறக்காலை இருமுறை நிலத்தில் குத்திய பின்னர் தீர்மானம் இடுவது போன்று வலப்புறக்காலை மீண்டுமொருமுறை நிலத்துடன் குத்தி பின்னகர்த்தி வைத்து இடக்காலை நிலத்துடன் குத்தியும் பின்பு வலக்காலுடன் குத்தி முடித்தலுமே இவ்வாட்டமாகும்.

.
நான்கடித்தாளத்தின் தாளக்கட்டு :- தாம்தரிகிட தீம்தீம் தாம் பிறகு தாம் தாம் தாம் தரிகிட தீம் தீம் தாம் என்றவாறு அமையும்.

.
பொதுவானதாக அடந்தை, தீர்மானம் என்பன நான்கடித்தாளத்தின் ஒர் வெளிப்பாடே.

.
எட்டடித்தாளம்.

.
முதலாட்ட ஆரம்பத்தில் வலக்காலில் தா எனத்தாளம் விழுந்து இடக்காலில் தத்துமி எனத்தாளம் விழுத்திப்போட்ட பின்னர் இடக்காலில் தரிகிட தெய் எனத்தாளமிட்டு பின்னர் தா தத்துமி என முன்பு ஆடியதற்கு எதிர்ப்புறமாக தா தத்துமி தா தரிகிட தெய் எனத்தாளம் விழுத்தி ஆட்டத்தை நிறைவு செய்வதாக எட்டடித்தாளம் அமைந்திருக்கும்.

.
எட்டடித்தாளத்தின் தாளக்கட்டு:-

தத்தத்தோம் தரிகிட தோம்

தத்தத்தோம் தரிகிட தோம் …..ஆகும்.

.

இவ்வாறு விச்சாக இரண்டு அல்லது நான்கு முறை ஆடப்படும். அல்லது இரண்டு கால்களிலும் தலா ஒரு தடவை ஆடப்படலாம்.பொதுவாக இது குதிரையாட்டம், நாட்டுக்கூத்து ஆகியவற்றிற்கே பெரும்பாலும் ஆடும் வழக்கம் சிந்தூரில் நிலவி வருகின்றது.இதனோடு மட்டுமல்லாது காவடியாட்டத்திற்கும் இது பயன்படுத்தப்படலாம்.

.
காவடிக்கு குனிந்து காலை முழங்காலுடன் மடக்கு ஆடும் ஆட்டமும் இடம்பெறும்.இதனை இரண்டும் அல்லது நான்கு முறை ஆடலாம்

காவடிக்குரிய  தாளக்கட்டு :
தா தா தெய் தெய் தரிகிட தெய்
தா தா தெய் தெய் தரிகிட தெய்… ஆகும்.

பாஞ்சாலமட்டயம்.

.
பாஞ்சால மட்டயம் பார்வைக்கு இலகுவானதாகவே தோற்றம் கொடுத்தாலும், ஆடுபவர் கெம்பீர உணர்வுடன் மிடுக்காகவே ஆடுவது போல் தோன்றும்.

.
நேர்கோட்டில் முன்னோக்கிச் சென்று அதே வேகத்தில் பின்னோக்கியும் வந்து போவார். இராசவரவாட்டமும் ஏனைய நடிகர்களின் வரவுகளும் முறையே வட்டமாகவும் வட்டத்தில் துரிதமின்றியும் அசைவுகளைப் பெறுவர்.தாளக்கட்டை எல்லாப் பாத்திரங்களுக்கும் பொதுவாக நகர்த்துவர்.பாத்திரங்களை ஏற்பவரும் அதனை அனுசரித்து நடப்பர்.பாஞ்சால மட்டயம் அண்ணளவாக நாற்பத்தைந்து பாகையளவில் திருப்பங்களைப் பெற்று வட்டக்களரியில் அமைந்த மேடையை அனுசரித்து வரும் ஆட்டம் என்பதால் வலப்புறமாக சுற்றி வந்து ஆட்டத்தை நிறைவு செய்வர்.

.
இவ்வாட்டங்கள் பெரும்பாலும் கீசகன் வரவிலும், சடாசூரன் வரவிலும் அமைந்திருக்கும்.சடாசூரன் வரவு ஆட்டத்தினை நிரப்பும் பாஞ்சாலமட்டய ஆட்டம் இருந்ததனாலேயே வட்டுகோட்டை சிந்துபுர கூத்தின் பங்களிப்பில் சடாசூரன் வதை பிரச்சித்தி பெற்றது.

.
பாஞ்சாலமட்டயத்தின் நிலை வடிவமைப்பை மேலும் விளங்கக்கூறின் துள்ளியபடி ஆரம்ப இடத்தில் இருந்து முன்னோக்கி சென்று பின்னர் பின்னோக்கி வந்து ஆரம்ப இடத்தை அடைந்து பின் முதற்புறமாக முன்னோக்கிச் சென்று மாறா வேகத்துடன் பின்னோக்கி வந்து பின்னர் இரண்டாவது புறமாக பின்னோக்கி வருதலினை மேற்கொண்டு பாஞ்சால மட்டயத்தை முடித்து வைப்பர்.

.
பாஞ்சாலமட்டயத்தின் தாளக்கட்டு: – தீந்தகு தீந்தகு தீந்தகு தக்க தீந்தகு தீந்தகு தீந்தகு தக்க என்றவாறு அமையும்.

.
தீந்தாங்கம் பொறித்தட்டம் ஆட்டம்.

.
போர்க்காட்சியிலே பெருமளவாக ஆடிக்காண்பிக்கப்படும் ஆட்டம் இதுவாகும்.இவ்வாட்டத்தின் விசேட அம்சம் எதுவெனில் சுவைஞர்களை ஈர்க்கக்கூடியதாக இருத்தல் ஆகும்.அந்த வகையில் குறிப்பிட்ட போர்க்காட்சியின் முடிவில் குறிப்பிட்ட ஆட்டத்தினை தொடர்ந்து வலக்காலினை ஒரு பக்க பார்வையாக இட்டு பின்னர் இரண்டு நுனிக்கால்களையும் நிலத்தோடு குத்தி பின்பு நுனி குதி இரண்டையும் சேர்த்துக் குத்துதல் முதலில் அமைவுறும். அத்தோடு ஒரு காலினை பூர்த்தி செய்தலையும் மாறாக இடக்காலினை ஒரு பக்கப்பார்வையாக நுனிக்காலினை நிலத்தோடு குத்திப் பின்னர் இரண்டு கால்களையும் நுனிக்கால்களையும் குத்தி முடித்து பின் தனியே பொறித்தட்டம் என்று சொல்லப்படுகின்ற உட்புறமாக குத்துதலோடு நிறைவடையும்.

.
இதன் தாளக்கட்டு :- தீந்தாங்கு தகத்தீங்கு.

.
வீமன் வரவிலே துள்ளி ஆடிய பின்னர் வெளிப்புறமாக பொறித்தட்டம் போடுவது போல இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டத்தினை மேற்கொள்ளுவது இக்கூத்திலே காணப்படுகின்றது.நுனிக்காலினை குத்தி பழைய படி வைத்தல் ஆகிய செயல் வடிவை மேற்கொள்வதாக அமைந்திருக்கும். தீங்கு தீங்கு என்ற தாளக்கட்டு அமைந்த முறையிலே இவ்வாட்டமானது ஆடப்படும்.வீமன் வரவிலே ஆண்மையை நிரூபிக்கும் வகையில் மீசையை முறுக்கியும் காலினை பாடலின் போக்கிற்கேற்ப அமைந்து தூக்கி எத்தி வைத்தல் இங்கு இடம்பெறுவது குறிப்பிடத்தங்கதாகும். இராசவரவை தவிர மற்றைய எப்பாத்திரமாயினும் அதில் ஏனைய சாதரண வரவோடு இணைவுற்றே எவ்வாட்டமும் அமைவுற்றிருக்கும். உதாரணமாக கீசகன் வரவிலே முதல் சாதாரண வரவினதாக அமைந்து பின்னரே பாஞ்சாலமட்டய ஆட்ட முறை காணப்படுகின்றது.

.
பாஞ்சாலமட்டய ஆட்டத்தின் சிறப்பு.

.
சடாசூரன் வரவிலே கதாயுதத்தை நிலைக்குத்தாகவும் தலைகீழாகவும் ஊன்றி மத்தள அடிக்கேற்ப முதலில் வலப்புறமாகவும் பின் இடப்புறமாகவும் அரைவட்ட வடிவமைப்பில் காணப்பட்ட நிலையிலேயே காலை நகர்த்தி வைக்கின்ற தன்மை சிந்துபுர நாட்டுக்கூத்திலேயே காணப்படுகிறது. கதாயுதத்தை நிலத்தில் ஊன்றிய பின்னர் இரண்டு கைகளாலும் கதாயுதத்தை தலைகீழாக பிடித்தபடி ஆடுதல் இதில் உள்ளது.நகர்ந்து சென்று பின்னர் முன்புறமாக அதீத வேகத்துடன் தலைகீழாக பிடித்த கதாயுதத்தை தோளுக்கு மேலாக பிடித்தாடுகின்ற பொழுது பார்ப்பவர் கண்களை கவரும் வகையாக அமைந்திருக்கும்.

.
பாஞ்சாலமட்டயத்தின் தாளக்கட்டாக தத்துமி தத்துமி தத்துமி தாங்க என்ற நான்கடித்தாளமாக அமைந்திருக்கும்.இவ்வாறான தன்மை முன்பு குறிப்பிட்டதை போன்று கீசகன்,சடாசூரன் ஆகிய பாத்திரங்களை அலங்கரிப்பதாக அமைந்திருக்கும்.

.
குத்திப்புரட்டல் ஆட்டம்.

.
வீமன் வரவிலே முன்பு குறிப்பிட்டதைப் போன்று வெளிப்புறமாக காலினை குத்திப்புரட்டல் இக்கூத்திலே காணப்படுகின்றது.இதன் தாளக்கட்டாக தாங்கு தத்தக அமைந்துள்ளது.சித்தப்பா சந்தம் (மெட்டு) எனப்படும் மூன்றடித்தளமானது சிவபெருமான்,அருச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகிய பாத்திரங்களின் ஆட்டத்தினில் இடம்பெறும்.இவ்வாட்டத்தினை ஆடியபடி மேடையை வட்டமாக சுற்றிவரும் நிலையினை காணலாம்.

.
துரிதம்.

.
ஆரம்ப கூத்தாட்டத்தின் பின் நிகழும் ஆட்டமே துரிதம் எனும் ஆட்டமாகும். இவ்வாட்டத்தின் தன்மையானது முழங்காலினை அணிவகுப்பு முறையில் துள்ளுவதாகும்.
எவ்வாட்டத்திலும் துரிதம் இணைந்தே காணப்படும்.உதாரணமாக இத்துரிதம் எனும் ஆட்டமானது இராச வரவிலும்,ஒவ்வோரு பாத்திரங்களின் ஆட்ட முடிவிலும் அமைந்து காணப்படும்.இத்துரித ஆட்டத்தினை தத்தங்குது தத்தங்குது என்ற தாளக்கட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கடித்தாளத்தினை கொண்ட ஆட்டம் ஆகும்.

 

தொடரும்……

அடுத்த பகுதியில்  : நடிபாகங்களில் ஆட்ட தன்மைகள்…..

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...