இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரக்கூத்தரங்க வெளிப்பாடும் வரலாற்று பிண்ணனியும். (பகுதி 1)

சிந்துபுரத்திற்கு கூத்தின் அறிமுகம்.

சங்கரத்தை பத்தரகாளி கோவில் குடும்பத்தை சேர்ந்த கணபதி ஐயர் (1709 -1794) என்பவரால் 1700 களின் நடுப்பகுதியில் சிந்துபுரத்தில் நாட்டுக்கூத்து அறிமுகப்படுத்தப்பட்டதாக செவிவழிச்செய்தியாக அறியக்கிடக்கிறது. இக்காலத்தில் வாளபிமன் எனும் கூத்தை எழுதி அதனை சிந்துபுரக்கலைஞர்களைக் கொண்டு அவர் ஆடுவித்தார் என அறிய முடிகிறது.

.
சிந்துபுர மக்களின் மரபுசார் கூத்தானது கிட்டத்தட்ட 1765 களில் பலரும் அறியக்கூடியதாக வெளிப்பட்டது.நாட்டுக்கூத்துக் கலைவடிவங்களுக்கும், நாடகங்களுக்கும் கோயில்களே அரங்கின் அமைவிடமாக அமைந்தன.சிந்துபுரத்தில் அமைந்துள்ள கோவில்களில் மட்டுமல்லாது அயலூர் ஆலய வீதியரங்குகளிலும் சிந்துபுரக் கலைஞர்கள் கூத்தினை வெளிப்படுத்தி வந்தனர்.அந்த வகையில் 1762 ற்கு பின்பு ஒல்லாந்த சேனாதிபதியின் அங்கீகாரம் பெற்ற அம்மன் வழிபாட்டிடங்களான சங்கரத்தை பத்திரகாளி கோவில், வழக்கம்பரை அம்மன் கோவில் ,சுரட்டிப்பனை அம்மன் கோவில்,கண்ணகை அம்மன் கோவில், ஆகிய கோவில் வீதிகளே சிந்துபுரக்கலைஞர்களின் ஆடரங்குகளாக அக்காலத்தில் விளங்கின.

.
1765 ம் ஆண்டளவில் காவடி, கரகம், சிலம்பாட்டம் ,புலியாட்டம், தீப்பந்தாட்டம் போன்றவை பல கோவில்களில் சிந்துபுரக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டது.

.
சிந்துபுர மோடிக்கூத்துக்களானது சுமார் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்டது இவை பற்றிய கருத்துக்கள் பரம்பரை பரம்பரையாக செவிவழிவாயிலாகவும், சில எழுத்து வடிவிலும் வந்தனவாகும்.

.சிந்துபுரத்தில் வீச்சுறும் கூத்தின் காலம்.
கூத்தானது கணபதி ஐயரால் சிந்துபுரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக இருந்தாலும்.அண்ணாவியார் வேலு என்பவரின் முழுமுயற்சியால் எம் மக்களின் முழுமுதல் பங்களிப்போடும்,ஆளுமையோடும் எம் கிராமத்தின் சொத்தாக கூத்து 1800 களில் முழுவீச்சடைந்தது.

.
கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்ட மக்கள் தென்னிந்தியாவுடன் வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்தமையால் அங்கு சென்று வருவதும் தங்கியிருப்பதும் பூர்வீக குடியினராகிய சிந்துமக்களின் கலைகளைக் கேட்டறிவது வழக்கம். இன்று கேரளா என்று கூறப்படுகின்ற சேர நாட்டில் அண்ணாவியார் வேலுப்பிள்ளை (வேலு) எனபவர் தனக்கிருந்த இசையறிவுடன் தாளக்கட்டு முறைகளையும் ஆட்ட முறைகளையும் அங்கிருந்து தெரிந்துகொண்டார்.இவரே வட்டுக்கோட்டைச் சிந்துபுரக்கூத்தின் முதல் அண்ணாவியார் என்று பெரியோர் கூறுவர்.அப்போது முதல் இக்கலை ஐந்துக்கும் மேற்பட்ட தலைமுறையாகப் பேணப்பட்டு வருகிறது.
அண்ணவியார் தனது மகன் பேரன் என்ற வம்ச விருத்தியினருக்கு பழக்கி அதனை நடத்தும் முழுப்பொறுப்புடன் இருந்தார்.

.
அண்ணாவியார் கூத்தை அரங்கேற்ற இவரது உறவினர்கள், நண்பர்கள்,ஊரவர்கள் போன்றோர்கள் உதவிகள் புரிந்து, ஆடுபவர்களாகவும் பங்கு கொண்டனர்.இதன் இயல்பும் செழுமையும் இக்காலத்தில் வாழ்ந்த மக்களை கவர இக்கலை மிகவும் சிறப்புப்பெற்று விளங்கத்தொடங்கியது.

.
இவ்வாறு அண்ணாவியார் வேலுப்பிள்ளை அவர்களைத் தொடர்ந்து அண்ணாவியார் சின்னக்குட்டி, அண்ணாவியார் சரவணமுத்து,அண்ணாவியார் முத்தர் செல்லப்பு, அண்ணாவியார் சீ.வடிவேலு ,அண்ணாவியார் முருகுப்பிள்ளை,கலாபூசணம் அ.முருகவேள் என அம்மரபு தொடர்கிறது.
அவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அவர்கள் திறன்கள் பற்றியும் பல்வேறு தகவல்களைக் கூறக்கூடியதாக இருந்த போதிலும் அனைவரும் மரபு மாறாது இதனை பேணிவந்துள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.

 

.கூத்தின் ஏனைய கலைஞர்களின் வரலாற்றுப்பங்கு.
கூத்தில் மத்தளம், தாளம் என்ற வாத்தியக்கருவிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இம்மத்தளம் என்கின்ற வாத்தியத்தினை அண்ணாவியர்களான ஆறுமுகம் தொடங்கி வேலுப்பிள்ளை,கணபதியார்,எல்லைப்பொல்லை,சுப்பர்,செல்லப்பா,நடராசா, சுரேஸ்குமார்,ஜெயக்குமார்,சுகுமார் என்கிற வகையில் பரம்பரையான மரபு தொடர்ந்து வருகின்றது.

.
இம்மத்தளத்தை சுப்பர் அவர்களிடம் வல்லிபுரம் பழகினார்.வல்லிபுரம் அவர்களிடம் விக்கினேஸ்ரநாதன் பயின்றார்.விக்கினேஸ்வரநாதனிடம் குகவண்ணன்,கோவையானந்தன்,ஹரிச்சந்திரன்,கேத்திரபாலன் ஆகியோர் மத்தசளச்சீடர்களாயினர்.

.கூத்தில் வாய்ப்பாடின் பங்கு
கூத்துக்கலையை அண்ணாவியாருடன் இணைந்து ஆட்டம் பாட்டு என்பவற்றை பழக்கியவர் வரிசையில் அமரர் வேலுப்பிள்ளை, அமரர் அருச்சுனன் செல்லையா,அமரர் கனகரத்தினம் ஆசிரியர், அமரர் நா.முருகுப்பிள்ளை.அமரர் கந்தசாமி அமரர் கைலாசபிள்ளை, பன்முகக்கலைஞர் கலாபூசணம் திரு. பொன். பஞ்சாட்சரசிவம் அமரர் கலாபூசணம் க.நாகப்பு , முருகைம்மை நாட்டுகூத்து நூலின் ஆசியர் கலைஞர் நா. புவனசுந்தரம், திரு வே.தவநிரூபசிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.இவர்கள் அனைவரும் பல்வேறுபட்ட பாத்திரங்களில் வேடமேற்று வந்தனர்.

.
வட்டுக்கோட்டைச் சிந்துபுரத்தில் வடமோடிக்கூத்தை தவிர ஆரம்ப காலத்தில் பதிவிரதை விலாசம்,அழகேந்திர விலாசம் ஆகிய விலாச நாடகங்களும் இந்திர குமாரன்,குசலவன் போன்ற தென்மோடி நாடகமும் ஆடப்பட்டுள்ளன.

.
அதேவேளை தருமபுத்திர நாடகம் ,விராட நாடகம். குருக்கேத்திர நாடகம் போன்ற வடமோடி நாடகங்களும் ஆடப்பட்டுள்ளன.ஆனால் தருமபுத்திர நாடகத்தின் வரவுடன் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்து புத்தூக்கமடைந்தது எனக்கூறுவர்.கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த யுத்தத்தை தத்ரூபமாக விளக்கி ஆட்டமுறைகளோடு கதையினை விறுவிறுப்பாக நகர்த்தி ஆடிவந்தனர்.

.
தருமபுத்திர நாடகம்,இராம நாடகம் என்பன மானிப்பாயைச் சேர்ந்த அருணாசல முதலியார் மகனான சுவாமிநாத பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டு, சிந்துபுர மக்களால் ஆடப்பட்டது.இவரது காலப்பகுதி 1765 தொடக்கம் 1824 வரையாகும்.

.
வட்டுகோட்டை பெரும்பகுதி மணியகாரராகிய (DRO) இவர், தான் இயற்றிய தருமபுத்திர நாடகத்தினை எல்லா ஊர்களிலும் வழங்கி ஆடும்படி கேட்டுக்கொண்டார்.ஆனால் அவர்களால் ஆடப்பட்ட முறையும், பாட்டு அமைப்புக்களும் திருப்தி அளித்திருக்கவில்லை
சிந்துபுரத்திற்கு தனது அலுவல்கள் நிமித்தம் அவர் வந்த வேளை,கணபதியார் அவர்களால் ஓரிடத்தில் மத்தள இசை இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது.அதனை செவியுற்ற சுவாமிநாதர் ஐயர் அவர்கள் குறித்த வீட்டிற்கு சென்றார்.தன்னுடைய தர்ம புத்திரன் நாடகத்தினை பற்றியும் அதன் தாளக்கட்டுப்பாட்டு முறைகளையும் அவருக்கு எடுத்துக்கூறினார். தனது பிரதியை வரும் பொழுது தருவதாகவும் அதனை ஆடிக்காட்டுமாறு வேண்டியும் கொண்டார்.அதனை ஏற்று அந்நாடகத்தினை ஆடிப்பழகி மேடை ஏற்றிய பொழுது சுவாமி நாத பண்டிதர் அவர்கள் அளவு கடந்த பெருமிதத்துடன் ஆடியவர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுதல்களையும்,பரிசில்களையும் வழங்கினார்.தனது பிரதியுடன் வேறுபல கூத்துப்பிரதிகளையும் அவர்களிடமே வழங்கினார்.இந்தச்செய்தியும் செவிவழியாக கூறப்பட்டு வந்ததாக செய்திகள் உண்டு.

.
.தர்மபுத்திர நாடகம், விராட நாடகம்,குருக்கேத்திர நாடகம் என்பவற்றில் வட்டுக்கோட்டைச் சிந்துபுரத்தின் புலவர்களான சேதுபேரன் என்ற முருகுப்பிள்ளை(1882-1956) அவர்களினதும்,ஈழத்திலும் தென்னிந்தியாவிலும் புகழ் பெற்றவரும், முதுதமிழ் புலவர் மு.நல்லதம்பி (1896 -1957)அவர்களினது பாடல்களும் சேர்க்கப்பட்டு செம்மைப்டுத்தப்பட்ட கூத்துப்பிரதியாக உள்ளது.

.
நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழுவே இக்கூத்துக்களை பேணிவந்தது.இக்கூத்துக்குழு அமைப்பு ரீதியாக 1961 ஆண்டு உருவாக்கப்பட்டது.

.தொடரும்………

அடுத்த பகுதியில் சிந்துபுரத்தில் நிலவிய விலாசக்கூத்து.

 

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...