இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பிடித்த ஏழரை.. கேலிக் கூத்தாய் போன இந்துமதக் கலாச்சாரம்..

ஏழரைச்சனி பிடித்தால் ஒரு காலத்தில் விலகிவிடும் என்பார்கள் .ஆனால் நமது கிராமத்திற்கு பிடித்த ஏழரையே என்று விலகும் என்று  இன்னும் தெரியவில்லை. நாகரீகமான சமூகமாக வளர வேண்டிய அனைவரும் சேர்ந்து நடத்தும் கோமாளி நாடகங்கள் சிரிப்பதா அழுவதா என்ற நிலையில் இருக்கிறது.

புலம்பெயர் உறவுகளும், உள்ளூரார்களும் சேர்ந்து நடத்தும் வெட்கித் தலைகுனிய  வேண்டிய கோமாளி நாடகங்கள் அண்மைக்காலமாக நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இவை எங்கிருந்து வந்த புதுக் கலாச்சாரங்கள்..? நமது கலாச்சாரத்துடன் யார் இதை இணைத்தார்கள் ..? யார் சிந்தனையிது..? எதுவும் புரியவில்லை… என் தேசம் எங்கே போகிறது..? என்ற கேள்விக்கு முன்னராக என் கிராமம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. பிறகு எப்படி என் தேசம் நன்றாய் இருக்கும்..

இன்று இந்த நாட்டில் மனிதன் உயரிய வளர்ச்சி நோக்கி சென்றுகொண்டு இருக்கிறான். தன்னை தரம் வகுத்து தன் அறிவை மேம்படுத்தி தன் ஆறாவது அறிவு கொண்டு சிந்தித்து செயலாற்றிக் கொண்டு இருக்கிறான். கடவுளை கடவுளாக மட்டுமே நம்பி தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறான். தன் நாட்டை வளப்படுத்தும் கடமையில் முதற்கட்டமாக தன் சமுகத்தையும் தன் இனத்தையும் தன் கிராமத்தையும் வளப்படுத்திக் கொண்டு இருக்கிறான்.

ஆனால் நாம் இன்னும் இட்லி, வடை சுட்டு ,பாட்டுப்பாடி, குழல் கட்டி ஊரையே கத்திக் குளறி மானத்தை வித்துக்கொண்டு இருக்கிறோம். இது எல்லாவற்றையும் மீறிய முட்டாள் தனம்.. இதையெல்லாம் வெளியில் இருந்து பார்ப்பவன் பார்வை பற்றி நமக்கு கவலையில்லை. எதை எதையோ எல்லாம் நமது கலாச்சாரம் என்று கொண்டுவந்து கோமாளிக் கூத்தாடிக் கொண்டுதான் இருப்போம். அடுத்தவன் பார்த்து சிரிப்பதைப் பற்றி நாங்க ஏன் கவலைப்பட வேண்டும்?

“நாங்க புலம்பெயர் தமிழர்கள்.. நாங்க எங்க சொந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கிறோம்.. போராடுகிறோம் கொடி பிடிக்கிறோம்.. போராடி மடிஞ்சு போன எம் சொந்தங்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம்…….” கொஞ்சம் நிறுத்துங்கள்…நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.

தேசியம் தேசியம் என்கிறோம் முதலில் அதற்காக என்ன செய்தோம் என்று சிந்தித்துப் பாருங்கள். முதலில் இதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கடவுள் ஏழைகளிடமே இருக்கிறார் என்று சொல்லும் இந்து மதத்தில் இருந்து கொண்டே நாம் கடவுளின் குழந்தைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

கடவுளுக்கு செய்வது தவறில்லை.. அதைவிட சிறந்தது கடவுளின் பெயரால் நிர்க்கதியற்ற உங்கள் உறவுகளுக்கு உதவலாமே .. ஒரு நேர உணவழித்து மகிழலாமே.. உண்ட ஏப்பம் வருவதற்குள் அனைத்தையும் மறந்துவிடும் இந்த சமுகத்தில் உரிமைக்கான பேராட்டத்தில் நிர்க்கதியானவர்களுக்கு நீங்கள்  செய்யும் உதவிக்கான நன்றி எப்போழுதும் மறவாததாய் இருக்கும் என்பதை நீங்கள் அறிவில்லையா..?

இன்று நீங்கள் ஒரு நாட்  கூத்துக்காய் செய்யும் காரியங்கள் விடிந்தவுடன் மறந்து போகும்.. ஆனால் நீங்கள் உங்கள் கடவுளின் பெயர் துலங்க அநாதரவற்ற அந்த அன்பர்களுக்கு உணவளித்து உதவிப்பாருங்கள்.. சாகும் வரை உங்களை கடவுளாய் அவர்கள் காண்பார்கள்.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் இனிவருங்காலங்களையாவது மாற்றுங்கள்.. ஒன்று பட்டு உதவுங்கள். அவை தான் நாம் கடவுளுக்கு செய்யும் மிகப்பெரிய திருக்காரியங்கள். அதை விட அவருக்கு ஏதும் பெரிதாகாது.. நாம் எல்லோரும் உண்ண வழியற்றோ உறங்க இடமற்றோ இல்லையே. நமக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்தையும் அளவாய் கொடுத்து இருக்கிறார். பிறகு என்ன.. இல்லாதவனுக்கு கடவுள் உங்கள் மூலமாக கொடுக்க நினைக்கிறார் என்பதை உணர்ந்து, நிங்களும் கடவுளின் உண்மையான பக்தன் ஆகுங்கள்…

அதை விடுத்து கண்டவனும் வாய்விட்டுச் சிரிக்கும் புதிய புதிய கலாச்சாரத்தை நம் வழிபாட்டு முறைகளில் புகுத்தி இந்து கலாச்சாரத்தையே கேவலப்படுத்தாதீர்கள்.பக்தியை சோறுபோட்டு பக்தி பரப்பப்படுகிறது என்று அடுத்தவன் பல்லுக்காட்டும் நிலையை உருவாக்கி பக்தர்களை கேவலப்படுத்தாதீர்கள்.

இக்கட்டுரை இப்போதைய சூழ்நிலைக்கு பாதகமானதாகவே இருக்கும் என்பது நன்கு அறிவோம். இதை பலர் தம் தலைகளில் போட்டுக் கொண்டு விமர்சிக்கவும் பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் ஆரம்பிப்பீர்கள் என்பதையும் நாம் அறிவோம். இது யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அல்ல. எமது சமூகம் எங்கே போகிறது. மற்றைய சமுகம் என்ன செய்கிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையே எமது தேவை…

காரணம் பிற சமூகத்தால் நடப்பவைகள் பெரும் நகைப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டு வருவது மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்விளைவே இது. இது விமர்சனம் அல்ல நாம் தவறாக செல்கிறோம் என்பதையும் நமது கலாச்சாரங்கள் சம்பிரதாயங்கள் தடம் மாறுகிறது என்பதையும் சுட்டிக் காட்ட இதை விட சாலப்பொருத்தமான நேரம் இல்லை என்பதே ஆகும்.

தவறான விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டாம்., ஆரோக்கியமான சிந்தனை மாற்றங்களை உருவாக்குங்கள்….

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.”

” அனாதைகள் கடவுளின் குழந்தைகள்”

” நமக்காக தியாகம் செய்தவனுக்கு நாம் செய்யும் நன்றிக் கடன் அவன் மக்கள் பசி தீர்ப்பதே”

“கடவுள் என்பவர் அமைதியின் உருவம்”

“இருக்கும் நீ இல்லாதவனுக்கு ஈந்தால் நீதான் அவனுக்கு கடவுள்”

 

யாரோ ஒரு பரதேசி…

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...