இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுர நாட்டுக்கூத்தின் ஆட்ட முறைகளும், நுணுக்கங்களும்( பகுதி 1).

அறிமுகம்.

.

சிந்துபுரத்தில் காணப்படும் கிராமியக்கலை வடிவங்களுள் விலாசக்கூத்து ,நாட்டுக்கூத்து, புரவியாட்டம்,தயிர்முட்டி அடித்தலாட்டம், கும்பச்சூரன் ஆட்டம், நடேசராட்டம்,சூரனாட்டம்,காவடியாட்டம்,கரகாட்டம்,போன்ற கலைகள் இடம்பெறுகின்றன.

.
இக்கலைகளில் நாட்டுக்கூத்தே சிந்துபுரத்தின், தொன்மையையும் வரலாற்றையும் அடையாளப்படுத்தும் கலையாக திகழ்கின்றது.

.
கூத்தென்பது குதித்தும்,அசைந்தும்,துள்ளியும் பாவனை செய்து ஆடும் பழந்தமிழர் நாடகக் கலை வடிவமாகும்.இந்நாடகக் கலைவடிவமானது சிந்துபுரத்தீரர்களாகிய எம்முன்னோர்களின் கலை வடிவமாகும்.இது எம்முன்னோர்களின் சொத்து. .வணிகர்களாகிய அவர்களின் வழிவந்த நம்மவர் சிந்துவெளிச்சீர்மையினை உணர்த்தும் கலைவடிவங்களை தொடர்ச்சியாக பேணிப்பாதுகாத்து வந்தனர்.

அவைக்காற்றுகைப்பாங்கு.

.
சிந்துபுரமோடிக்கூத்தின் அவைக்காற்றுகைப்பாங்கை அவதானிக்கின்ற பொழுது முதலில் வட்டக்களரியில் நடிகர்கள் எதுவுமின்றி மத்தளத்தின் மூலம் தாளக்கட்டொன்று இசைக்கப்படுகின்றது.இதைப் பிள்ளையாரடி என அழைக்கின்றோம்.இந் நடைமுறை எந்தக்காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையாருக்கு முதன்மை கொடுக்க வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டுக்கு ஏற்பதாகும்.கூத்தின் அடிநாதமாய் விளங்குவது மத்தளம் என்பதாலும் அதை முதன்மைப்படுத்தியும் இந் நடைமுறை, கூத்து வடிவத்தில் இருந்து வருகிறது.

P1170560

 

காப்பு.

.

இதைத் தொடர்ந்து அண்ணாவியரால் காப்பு பாடப்படுகின்றது.ஏனைய பிரதேசங்களில் உள்ள கூத்துக்களுடன் ஒப்பிடும் போது அவற்றில் அண்ணாவியாரின் பிள்ளையார் காப்பு பாடல்களுடனேயே ஆரம்பிக்கப்படுகின்றன.அதாவது சிந்துபுர மோடியில் மட்டுமே மத்தளத்துடன் பிள்ளையார் அடி அடித்து ஆட்டம் சிறப்பிக்கப்படுகின்றது.

கட்டியகாரன் அறிமுகவரவு.

.
எந்தக்கூத்து தொடங்கப் போகின்றதோ அந்தக்கூத்தின் கதைப்போக்கை அறிமுகப்படுத்தும் சபை விருத்தத்துடன் கட்டியகாரன் வரவு அண்ணாவியரால் பாடப்படும்.அதனைத் தொடர்ந்து கட்டியகாரன் தனக்குரித்தான சிறப்பு மிகுந்த வரவாட்டத்தின் மூலம் சபைக்கு வருவார்.சபைக்கு வந்து கூத்தின் கதையோட்டத்தை தெரிவித்து அடுத்தாக சபைக்கு வரப்போகும் பாத்திரத்தின் சிறப்பைக்கூறி, அப்பாத்திரம் வருகின்ற சந்தர்ப்பத்தையும் சபைக்கு விளக்கிச் செல்வார். இதன் பின்னர் குறித்த முதன்மை கதாபாத்திரம் அண்ணாவியரின் அறிமுகம் மூலம் அரங்கில் தோன்றுவார்.

.

மோடிகளின் பகுப்பாய்வு

.
பெரும்பாலும் பண்பாட்டை தமிழ் இலக்கியங்கியங்கள் அகம், புறம் என வகுக்கப்படுவடு போன்று கூத்தையும் அகம்,புறமாக இனம் காணலாம்.

.
வடமோடிக் கூத்துக்களில் புறம் (போரியல்) சார்ந்த உணர்வுகளும் தென்மோடிக்கூத்தில் அகம் (காதல்) சார்ந்த உணர்வுகளும் பெரும்பான்மையான உள்ளன.

.

மோடி என்பது கூத்தின் பாணியேயாகும்.அதாவது கூத்தும்,அதற்குரிய பாடல்களின் அசைவுகளைக் கொண்டே இந்த மோடி வகுக்கப்படுகிறது.

.
எமது சிந்துபுரக் கிராமத்தில்  ஆட்ட நுணுக்கமும்,பாடல் அசைவுகளும் அதீத மோடிப்படுத்தப்பட்டதாக ( STYLISH ) கூத்துக்கள் விளங்குகின்றன. எனவே தான் சிந்துபுரக்கூத்துக்கள் வடமோடி சார்ந்தன என வரையறைப்  படுத்தப்படுகின்றது.வடமோடி ,தென்மோடி என வரைவிலக்கணம் செய்தவர்கள் வடமோடியில் வரவுப்பாட்டை பாத்திரம் பாடுவதாக குறிப்பிடவில்லை.

.
வடமோடிப்பாங்கான கூத்தில் வரவுப்பாட்டை வரவு ஆட்டத்தின் பின் நடிகரே பாடுவதாக அமைந்திருக்கும்.ஆனால்   நாம் ஆடும் வடமோடிக் கூத்தில் சபைவிருத்தத்தையும் வரவுப்பாட்டையும், கூத்தை வழிநடத்திச்செல்லும் அண்ணாவியாரே பாடுவார்.

.

ஆடல்தரு

.

தத்தமது பாத்திரத்திற்குரிய அவ்வப் பாத்திரங்களுக்கு வரையறுக்கப்பட்ட வீரமிகு நுட்பமான ஆட்டங்களை ஆடல்தரு என்று சொல்வர்.அண்ணாவியாரால் இசைக்கப்படும் ஆடல்தருவானது பாடல்களுக்கு ஏற்றவகையால் அவரால் பாடப்படும்.இந்த ஆட்டங்கள் ஏனைய பிரதேச கூத்துக்களில் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

களரி அமைப்பு முறை.

.

கூத்து தொடங்குவதற்கு முன்பு களரி என்று சொல்லப்படும் கூத்தின் களத்தின் தென்மேற்கு மூலையில் கம்பத்தின் உச்சியில் வேப்பம்பத்தினி கட்டி கன்னிக்கால் நடுவர்.ஏனைய எட்டுக்கம்பங்கள் வட்ட அமைப்பில் அமைந்து மாவிலை, தோரணம் ,பூமாலை போன்றவற்றை வட்டக்களரியில் சுற்றி அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.  மேற்பகுதி வண்ணக் கடதாசியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கன்னிக்காலுக்கு அருகாமையில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நிறைகுடம் வைக்கப்படும்.

.
கூத்தாடி முடிவதற்குரிய செலவை மக்களே தந்துதவுவார்கள்.

3linecloth

.

பிற்பாட்டு செய்யுள் அமைப்புமுறை.

.
பாக்களை அவ்வவ் ஓசையில் ஏற்ற ஒழுங்கிலே பாடுவது இலக்கிய தரம் குன்றாமல் இருக்க வழிசெய்யும்.கூத்தின் பதிவுகள் பல தலைமுறைகளை கடந்தும் இன்றும் நிலைத்திருத்திருப்பதற்கு பாக்களின் நயமே முதன்மை அமிசமாகும்.

.
இளமை தொட்டு இக்கூத்துக்களை மக்கள் பார்த்திருந்ததன் காரணத்தாலும்,காட்சிகள் மனதில் பதிந்திருந்தன் காரணத்தாலும் அவர்கள் கூத்தின் பாடல்களில் பரீட்சயம் மிக்கவராக இருந்தனர்.மேலும் விடுபட்ட இடங்களைக் கூறி குறிப்பிட்ட பாடலை ஏன் நீங்கள் சேர்க்கவில்லை என்ற சந்தர்ப்பங்களும் உண்டு.இது மக்கள் கூத்தின் மீது வைத்திருக்கின்ற பரீட்சயத்தை காட்டுவதாகும்.இதற்கு முழுமுதல் காரணம் பாக்கள் மீதான ஈடுபாட்டுத்தன்மையேயாம்.

.
ஆட்ட முறைகள்.

ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ப ஆட்ட முறைகள் உண்டு.மேடையில் தோன்றி ஆடிடும் ஆட்ட வகைகள் கூத்தின் செழுமையை நிறைக்கும்.அவ்வகையில் ஆட்டமுறைகளில் வரவுகள் சாதாரண வரவுகள், இராசவரவு,கண்ணிகள்,ஒற்றைக்கண்ணி,இரட்டைக்கண்ணி,பாஞ்சால மட்டயம்.தீந்தாங்கம்,பொறித்தட்டம்,செச்சை,அடந்தை,நான்கடித்தாளம்,எட்டடித்தாளம் என்பன பிரதானமானவைகளாகும்.

.

வரவுகள்.

.

இது இருவகைப்படும்.
1. சாதரண வரவு.
2. இராசவரவு.

வரனிவிலே முக்கியமாக அடந்தையுடன் வருதல்,துள்ளி வருதல் என்பன உண்டு.

.
.
சாதரண வரவு.

.

இச்சாதரண வரவுகளானது சபைவிருத்தம் பாடியவுடன் முழங்காலினை நிலத்திலே மத்தள இசைவுக்கேற்ப தன்னன்ன தன்……. என்ற இசைவுடன் தீந்தீங்கு தீந்தீங்கு என்ற மத்தள அடியுடன் விழுத்திபோட்டு பின்னர் காலினை எத்திப் போட்டபடியே பின் சென்று தரிகிடத் தரிகிட  தரிகிடத்தரிகிட என்றபடி பின்னர் துள்ளி முன்வந்து பழையபடி அதே நிலையில் தாள வித்தியாசத்துடன் துரிதம் என்று சொல்லப்படுகின்ற இரண்டு காலினையும் அணிவகுப்பு முறையில் துள்ளியாடல் , ஆட்டத்தை ஆடி ஒரு சுற்று சுற்றியபின் முதலாவது திசையிலே துரிதமிட்டு ஆடியும் பின் பழைய இடத்திற்கு திந்தீங்கு தீந்தீங்கு ஆடுவார்கள் இதுவே சாதரண வரவாகும்.

.

இராசவரவு.

.

இராசவரவானது அடந்தையுடன் சென்று தீர்மானமிட்டு பின்னர் துரிதமிட்டு,தீர்மானம் போட்ட பின்னர் முதற்திசைக்கு அடந்தையுடன் சென்று திசையை அடைந்தவுடன் துரிதம் போட்டு தீர்மானம் போட்ட பின்னர் இரண்டாவது திசையினை நோக்கி அடந்தையுடன் சென்று பின்னர் துரிதமிட்டு அதன் பின் தீர்மானம் போட்டு முன்னையதை போல் அடந்தையுடன் பழைய இடத்தை அடைந்தவுடன் தீர்மானம் இட்ட  பின்னரே ஆடற்றருவிற்கான பாடலிற்கு ஆட்டத்தினை மேற்கொள்வார்.

.
மேற்குறிப்பிட்ட அடந்தையுடன் தன்னைத்தானே சுற்றி மேடையினையும் சுற்றிவருதல் என்ற முறைமையில் ஆட்டமுறை இங்குண்டு.

.
மத்தள இசைவுகளுக்கு ஏற்ற வகையில் அதன் தாளத்தினை விழுத்திப்போடுதல் இன்னோர் வகையானது.வட்டக்களரியில் இது உதயமாகியதால் வட்டமான துரிதங்கள்,துள்ளல்களோடு சுற்றிப்பின் அவ்வாறு இருதடவை வட்டத்தின் தன்மைக்கேற்றவாறு தீர்மானத்தோடு முடிவடையும்.
தீர்மானம் என்பது ஒரு ஆட்டத்தின் இறுதி அசைவாகும்.
———————————————————————————————————————–

தொடரும்….

அடுத்த பகுதியில் கண்ணிகள்,செச்சை,அடந்தை பற்றிய விளக்கங்கள்.

.

.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...