இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பன்முகக்கலைஞர் பஞ்சாட்சரம் அவர்களுடனான செவ்வி(தொடர்ச்சி…)

சிந்துபுரத்தின் முன்னைய தலைமுறையின் கூத்துக்கலைஞர்களில் தற்போது வாழும் கலைஞர்கள் சிலரில் இவரும் ஒருவர்.சிந்துபுரம் எனும் கொள்கையில் கடும் பற்றுக்கொண்டவர். கலைகளும்,பொதுச்சொத்துக்களும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.அதனாலேயே தான் சிந்துபுரக்கொள்கையை ஆதரிப்பதாக வெளிப்படையாகவே சொல்லும் கலைஞர். தனது கூத்துக்கலையை எப்படியாவது அடுத்த தலைமுறைக்கு கற்பித்து விட  வேண்டும் எனும் அவாவில் தனக்கான உண்மையான சீடர்களை தேடிக்கொண்டிருக்கும் ஓர் கலைஞர்.இலங்கை அரசின் கலாபூசண விருது பெற்ற பன்முகக்கலைஞர்.ஏற்கனவே சில நாட்களுக்கு முன் அவரது செவ்வியின் முதற்பாகம் சிந்துபுரம் இணையத்தில் வெளிவந்திருந்தது.
நிசங்களின் தரிசனமாய் ,உண்மையின் குரல்களாய்,எம் சிந்துபுரச்  சமூக நீதியின் நிலைநாட்டலாய் இங்கே தொடர்ச்சியாக அவருடனான செவ்வியின் இரண்டாம் பாகம் உங்கள் காண்பியத்திற்கு…..

நாட்டுக்கூத்தை காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா. ?

அதை நான் வெறுக்கிறேன்.ஏனெனில் அதன் தன்மை கெட்டுவிடும்.விடிய விடிய ஆடும் கூத்தை சுருக்கும் போது அதன் கரு கெட்டுவிடும்.சம்பவங்களின் தொடர்ச்சி இல்லாமல் கதை விளங்காமல் போய்விடும்.

உங்கள் சக கலைஞர் அமரர் நாகப்பு அவர்கள் ”வீரமைந்தன்” என்ற பெயரில் நாட்டுக்கூத்தை தற்காலத்திற்கு ஏற்ற வாறு மாற்றி இருக்கிறாரே…?

நானும் அவ்வாறு பல கூத்துக்களை இயற்றி இருக்கிறேன்.ஆனால் அவை எல்லாம் கூத்தின் அடியொற்றிய நவீன நாடகங்கள்.ஆனால் எம் பாரம்பரிய கூத்தை மாற்றுவது எளிதல்ல,அத்தோடு அது சாத்தியமுமல்ல.

புரவி நடன கலை பற்றியும் அதன் தற்போதைய நிலை பற்றியும் ?

எனக்கு தெரிந்தவரை அருளம்பலம் தான் புரவிநடனத்தில் சிறந்த கலைஞர்.நானும் குதிரைகள் செய்து இருக்கிறேன்.புரவி நடனத்துக்கு பாடல்களைக்கூட நான் இயற்றியுள்ளேன்.

சிந்துபுரம் விளங்க வந்த சிரஞ்சீவி குதிரையிது.
சிந்தையில் செந்திருவை சேவித்திடும் குதிரையிது
பொங்கி வரும் எதிரிகளை பொடி செய்யும்…….
என்று அந்தப்பாடல் தொடரும்.

குதிரை ஆடும் போது கூட பாவம் இருத்தல் வேண்டும்.உண்மையான குதிரை ஆடும் அழகு தனி அதை ஆட்டத்தில் கொண்டு வர வேண்டும்.

குதிரையை பிடித்தபடி ஆடுவது எல்லாம் புரவி நடனம் இல்லை.

 

Scan_Pic0007

 

கேள்வி : புலம் பெயர் மண்ணில் எமது  கலையின் நிலை பற்றி கூறுங்கள்.இங்கு எமது  கலை வளர்ச்சி தங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா. ?

எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் சொல்ல வில்லை.எனக்கு தெரிந்த கலையை நான் சொல்லிக் கொடுக்கலாம்.அதையாவது வந்து என்னிடம் பயில யாருக்கும் இஷ்டம் இல்லை.இங்கு தருவை விருத்தம் என்கிறார்கள்,விருத்தத்தை பாட்டாக பாடுகிறார்கள்.தரு,ஆடற்தரு, என்பவற்றிற்கு போதிய விளக்கம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.இரண்டடித்தாளம்,நாலடித்தாளம்,எட்டடித்தாளம்,அடந்தை பற்றி கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள்.. ஏன் வட மோடிக்கும் ,தென் மோடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாய் சிலர் இன்னும்  பேட்டி கொடுக்கிறார்கள்.இது எனக்கு பெரும் வேதனை தருகிறது.

எனக்கு தெரிந்த கலையை அடுத்த சந்ததிக்கு கொடுத்துவிட்டு செல்ல ஆசைப்படுகிறேன்.ஆனால் யாருக்கும் என்னை பயன்படுத்திக்கொள்ள விருப்பம் இல்லை.நான் கற்ற கலை என்னுடனே அழிந்துவிடப்போவது எனக்கு பெரும் மனவருத்தம்.

எனக்கு கலை தெரியும் என்று நீங்கள் மதிப்பீர்களானால் என்னிடம் கலை கற்றுக்கொள்ள என்ன தயக்கம் ?

இன்றைக்கும் கூட எட்டடித்தாளம் பரமேசியருக்கு மட்டுமே தெரியும்.அவர் என்னுடன் கூத்தாட எத்தனையோ தடவை ஆசைப் பட்டிருக்கிறார்.உண்மையான கலைஞர்கள் தமக்குள் பெரிது,சிறிது பார்ப்பதில்லை.ஆனால் இங்கு அப்படியல்ல. கிழமையில் ஒரு மணித்தியாலயம் கூட இந்தக்கலைக்கு ஒதுக்க முடியாதபடி இங்கு நிலை இருக்கிறது.

என்னிடம் ஒருகாலத்தில் கூத்துப்பழகியவர்கள் இப்போது ஆடும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது.சுருதி இல்லாத பாடலும் பாவம் இல்லாத நடிப்பும் தான் இன்று இருக்கிறது.

இறைவனிடம் இறைஞ்சிக் கேட்கும்  பாடல்களை எல்லாம் அதிகாரத்துடன் பாடுகிறார்கள். (பாடிக்காட்டுக்கிறார்)
நாங்கள் கூத்து பழகும் போதும் சரி ,பழக்கும் போதும் சரி அடி வாங்கி இருக்கிறோம், எம்மிடம் பழகியவர்களுக்கு அடித்தும் இருக்கிறோம்.கூத்து என்பது உணர்வுபூர்வமான கலை.ஆனால் இப்போது ஆடுபவர்கள் அதை கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலை மாற என்ன செய்ய வேண்டும்?

பொறாமையை விட வேண்டும்.கலை பொதுவானது என்ற எண்ணம் வரவேண்டும்.கலையின் உண்மையான அடியை ஒற்றிய ஆற்றல் இருத்தல் வேண்டும். தாங்கள் தான் ஆடுவது கூத்து என்ற மனோபாவம் மாறவேண்டும்.எம் கூத்திற்கு என்று ஓர் பாரம்பரியம் இருக்கிறது.அதை அப்படியே பின்பற்ற வேண்டும். பிழையான கூத்து தான் இனி எங்கள் கூத்து என்றாகப்போகிறது என்ற வேதனை தான் எனக்கு இப்போது வாட்டுகிறது.
.

பிந்திய 5 செய்திகள்

அமரர் காலாபூசணம் நாகப்பு அவர்களின் கலையுலக வாழ்க்கை.... சிறந்ததொரு எழுத்தாளனாக நாட்டுக்கூத்தின் நடிபாகமான வீமன் பாத்திரத்திற்கென்றே உரித்தானவராக திகழ்ந்தார். . 1960களின் நாட்டுக்கூத்தில் ஈடுபாடுகொண்டு வ...
முதுதமிழ்ப் புலவர்.மு.நல்லதம்பி. முதுதமிழ்ப்புலவர் அவர்கள் 13.09.1896 ல் யாழ்ப்பாணம் சிந்துபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார்  பெயர் முருகுப்பிள்ளை தாயார் பெயர் தங்கம்மை .இவர் தனது...
பன்முகக்கலைஞன் பஞ்சாட்சரசிவம் அவர்களுடனான செவ்வி.... நாட்டுக்கூத்து,இசை,ஓவியம்,சிற்பம் என தற்புதுமையான பன்முகக்கலைஞர் திரு.பஞ்சாட்சரசிவம்.புலம்பெயர் மண்ணில் வசித்து வரும் எம் கிராமத்து மூத்த கலைஞர்.எம் க...
அண்ணாவியார் அமரர் வே.நாகலிங்கம். அண்ணாவியார் அமரர் வே.நாகலிங்கம் அவர்கள் நாட்டுக்கூத்துக்கு ஆற்றிய கலைச்சேவையை பண்டிதர் ம.கடம்பேசுவரன் அவர்கள் வழிவழி வந்த வைரங்கள் எனும் தலைப்பில் கல்...
மத்தள பூபதி நடராசா அவர்களது கலைச்சுவட்டிலிருந்து….....   1960 பின் நாட்டுக்கூத்தில் அரங்குப்பிரவேசம் செய்தார்.1975,1976 களில் முறையே குருக்கேத்திர நாடகம்,இந்திரகுமார நாடகம் ஆகிய நாட்டுக்கூத்துக்களை...