இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

வித்தியாவும் ,சிந்துபுரம் படிக்க வேண்டிய பாடமும்…!!!!

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் சடுதியாக அதிகரித்துவரும் சீர்கேடுகளின் பின்ணணிகளின் அடிப்படையில், எமது கிராமமான சிந்துபுரத்தின் சமூக நிலை பற்றியும் கரிசனை செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கிராமத்தின் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
.
திட்டமிட்ட ரீதியிலோ, அல்லது தன்னிச்சையாகவோ யாழ் குடா நாடு அண்மைக்காலமாக சமூக விரோத செயற்பாடுகளால் நிறைந்து காணப்படுவதாக செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

.
அதீத மதுப்பாவனை,குழுமோதல்கள்,ஆயுத கலாசாரம்,பாலியல் அத்துமீறல்கள் என்பன என்றும் இல்லாதவாறு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.இவை மட்டுமல்லாது போதைப்பொருள் பாவனையும் அதிர்ச்சி தரும் வகையில் இடம்பெருவதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
.
போர் ஓய்ந்து ஆறு ஆண்டுகளின் பின் குடா நாடு அமைதியாக காணப்பட்டாலும் சமூக நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் காண வேண்டி உள்ளதை அண்மையில் யாழ் கல்விச்சமூகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தது.யாழ் மாவட்டத்தின் சமூக அலகான கிராமங்களின் அமைதியும்,ஒழுங்குமே ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் அமைதியின் அச்சாக அமையும் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
.
எமது சிந்துபுரம் கிராமம் பல தரப்பட்ட பிரச்சனையில் மூழ்கியிருந்தாலும் வன்முறைக்கலாச்சாரமோ,பாலியல் அத்துமீறல்களிலோ இதுவரை சிக்கியது இல்லை.
.
எனினும் எம் ஊரின் காணப்படும் பெயர்ப்பிரச்சனையை சாக்காக கொண்டு சில அசிங்கமான பிரச்சனைகளை ஒரு தரப்பு மற்றைய தரப்பை குற்றம் சாட்டுவதற்காக செயற்கையாக உருவாக்கியிருந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.எந்தத்தரப்பாயினும் சரி பெண் பிள்ளைகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது தவிர்க்கப்படவேண்டும்.வஞ்சம் தீர்க்கும் நோக்கோடு பெண்பிள்ளைகளை பணயம் வைக்கும் கீழ்த்தமான காரியங்களை மேற்கொள்வதை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
.
புங்குடுதீவு வன்புணர்வு சம்பவத்திற்கு பின் யாழ் குடாநாடு ஓர் போர்க்களமாக மாறியுள்ளது.கலாசார மேன்மை மிகு தமிழர் பண்பாட்டில் ஓர் விழுந்த இடியாகவே அந்தச்சம்பவம் பார்க்கப்பட்டுகிறது.இந்தச்சம்பவத்திற்கு மதுப்பாவனை ஒர் காரணமாக சொல்லப்படுகிறது. அத்தோடு வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களின் பணமும் விளையாடியுள்ளதை செய்திகள் மூலம் தெரிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது. இந்தகாரணங்கள் இறுதியில் வாழவேண்டிய ஓர் பெண் பிள்ளையில் உயிரை  கேரமாக பரித்துவிட்டது.
.
எமது சிந்துபுரம் கிராமும் இந்த விடயங்களில் விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்.
.
அண்மைக்காலமாக மதுப்பாவனை எம் இளையோர் மத்தியில் அதிகரித்து வருவதாக கிராமத்தின் சமூக ஆவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.சுற்றுலா என்ற பெயரில் கோவில் உரிமையாளர்களே இளையோருக்கு மது வாங்கிகொடுத்த சம்பவங்களும் எம் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு விடுமுறையில் செல்லும் சிலரும் எம் இளையோர் மத்தியில் மதுப்பாவனை உயர்வுக்கு ஓர் காரணமானவர்கள் என்பதை மறுக்க முடியாது.
.
ஒரு காலத்தில் கள்ளு எம் கிராமங்களில் மதுவாக இருந்து வந்தது.ஆனால் தற்போது வெளிநாட்டு மது பானங்கள் மிகத்தாராளமாக யாழ் குடா நாடெங்கிலும் பரவிக்கிடங்கிறது.
.
இலங்கையின் மாவட்டங்களில் மதுபான வியாபாரம் அதிகம் நடைபெறும் மாவட்ட வரிசையில் யாழ் மாவட்டம் முதலிடத்தில் இருக்கும் சாதனையை சாதித்திருப்பது பெருமைப்படகூடிய விடயமல்ல.இதனால் எம் எதிர்கால சந்ததி தள்ளாடப்போவது நிச்சயம்.முறையான கல்வி இல்லாது,சமூக சீர் கேட்டுடன்,பொருளாதார வளமும் இல்லாமல்.எம் இனத்திற்கே எதிர்காலம் இல்லாமற்போகும் நிலையை இந்த மதுப்பாவனை உருவாக்கும் என்பது யாரும் மறுக்க முடியாது.
.
இந்த நிலை உருவாகமல் இருப்பதற்கு சமூக மட்டத்திலான செயற்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து போகும் அதீத பணம் இளையோரை சோம்பேரிகளாயும், ஊதாரிகளாயும்,சமூக, கலாசார பற்றற்றவர்களாக ஆக்கிவருவதை மறுக்க முடியாது.
தம் சுய சம்பாத்தியத்தில்,தமது சொந்தக்காலில் வாழ ஒருவன் பழகினாலே அவனுக்கு பணத்தின் அருமையும்,வாழ்க்கையில் அர்த்தமும் , எம் கலாசார பண்பின் மாண்பும் புரியும்.
.
அதற்கு வெளிநாட்டு உறவுகள் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணத்தை புங்குடுதீவு சம்பவம் ஏற்படுத்துயுள்ளது.
எம் முன்னோர்கள் எதிர்கால சந்ததிக்காக சொல்லிசென்ற நன்னெறிகளை தற்போதைய சந்ததி முற்றாக மறந்த நிலையாலேயெ இவ்வாறான சமூக சீர் கேடுகள் மலிந்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு உயிரை பலி கொடுத்து தான் எம் இளைய சமூதாயம் தவறான வழியில் செல்வதை தெரிந்துகொள்ள வேண்டியளவிற்கு சிந்தனையற்றவர்களாக நாம் இருப்பது பிணமாக வாழவதற்கு சமன்.

வித்தியாவின் கொலைகாரர்கள் தண்டிக்கப்படவேண்டிவர்கள்…
.

வித்தியாவின் ஆன்ம சாந்திக்கு இயற்கை துணை நிற்கட்டும்…
.
.
.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...