இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பன்முகக்கலைஞன் பஞ்சாட்சரசிவம் அவர்களுடனான செவ்வி.

நாட்டுக்கூத்து,இசை,ஓவியம்,சிற்பம் என தற்புதுமையான பன்முகக்கலைஞர் திரு.பஞ்சாட்சரசிவம்.புலம்பெயர் மண்ணில் வசித்து வரும் எம் கிராமத்து மூத்த கலைஞர்.எம் கிராமம் கலைகளின் உச்சமாய் திகழ்ந்த அந்த நாட்களை நினைவுகூர்ந்து புல்லரிக்க வைத்தார்.”எது சரியோ அதுவே அழகு” எனும் நாடக விஞ்ஞானி பேட்டோல் பிரெக்ட் அவர்களின் கருத்துக்கேற்ப தன் ஆற்றுகையை சுவைபட வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

.

பூச்சொறியும் ஓர் வசந்தகால மாலை நேரத்தில் சிந்துபுரம் இணையம் சார்பாக அவருடனான உரையாடலில்….

.

கேள்வி : கலையில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது ?

.
பாடசாலை நாட்களில்  தேவாரம் பாடுவதில் அதிக ஈடுபாடு எனக்கு இருந்தது.அத்தோடு திருவிழாக்கள் பார்ப்போம்.அந்த திருவிழாவில் சப்ரத்தில் இருக்கும் யாழி போன்றவற்றை வீட்டில் வந்து வரைந்து பார்ப்பேன்.அமரர் க.நாகப்புவும் நானும் ஒரே வகுப்பில் படித்து வந்தோம்.அவரும் நானும் சேர்ந்து கலைப்பெருட்களை செய்து பார்ப்போம்.அமேரிக்கன் மிஷன் ( வேதப்) பாடசாலையிலேயே நான் தேவாரங்களை பாடினேன்.அந்தக்காலத்தில் திருநாவுக்கரசு மற்றும் அமெரிக்கன் மிஷன் பாடசாலைகளில் மாறிமாறி படித்து வந்தோம்.ஏனெனில் ஆசிரியர்களின் சராசரி மாணவர் எண்ணிக்கைக்காக அப்படி படித்து வந்தோம்.

.
அதன் பின் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் நாடகங்கள் நடிக்கத்தொடங்கினேன். நானும் நாகப்புவும் நாடகங்களை இயற்றி மேடையேற்றினோம். அந்தக்காலத்தில் தமிழரசு கட்சிக்காக பாடல்களை இயற்றி பாடிக்கொண்டிருப்பேன். கொமினுஸ் கட்சியை கிண்டல் செய்து பாடல்களை இயற்றினேன்.

.
நல்லதம்பி நாடக சபா,கலைவாணி நாடக மன்றம்,கலைமகள் கலைக்குழு போன்ற நாடக சபாக்களில் நான் நாடகம் நடித்துள்ளேன்.அப்பிடியாக இன்று வரை என் கலைப்பயணம் தொடர்கிறது.

.

Scan_Pic0014
கேள்வி : என்னென்ன கலைகளில் உங்கள் ஆர்வம் இருந்தது ?

.
எனது பள்ளிக்காலத்திலேயே எனக்கு கலை ஆர்வம் இருந்தது.எனது தாயாரின் தகப்பன் அருச்சுனனுக்கு ஆடி வந்தார்.அவரின் பெயர் முருகர்.இளையபெடியர் என்றும் அவரை கூப்பிடுவார்கள்.அவர் எனக்கு முதல் தந்த கூத்து துச்சாதன் கூத்து இது நடந்தது 1960களில் ஆரம்பத்தில்.காலையில் எழுந்து அந்த கூத்துக்கான பாடல்களை சத்தமாக மனப்பாடம் செய்து கொண்டிருந்த போது எனது தாயார் அதை கேட்டுகொண்டிருந்து விட்டு அப்புவினுடைய கூத்து ஆடுவதன்றால் ஆடு இல்லாவிட்டால் கூத்தும் வேண்டாம்,உனக்கு சாப்பாடும் கிடையாது என்று என்னை கண்டித்தார்.அவரிடமே சில பாடல்கள் நான் கேட்டு கற்றுக்கொண்டேன்.அர்ச்சுனனுக்கு நமச்சிவாயம் சுந்தரலிங்கம் தான் ஆடுவதாக இருந்தது. கோபலசண்முகம்பிள்ளை, விவேகயோகநாதசிங்கம், அபூர்,பழனிமலைச்சாமி போன்றோர் கூத்தாடி வந்தனர்.பழனிமலைச்சாமி வேடனுக்கு ஆடினார்.அருச்சுனுக்கு ஆடிய நமச்சிவாயம் சுந்தரலிங்கம் ஓழுங்காக ஒத்திகைக்கு வருவதில்லை.அதனால் அருச்சுனன் பாத்திரம் எனக்கு வந்தது.அந்தக்காலத்தில் பாத்திரங்களை மாறி மாறி ஆடிவந்தோம்.

.
எனக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் கூட இருந்தது. கண்ணாடியில் படங்களை வரைந்து புதுமனைபுகு விழாவுக்கு கொடுப்பேன்.நான் வரைந்த படங்கள் ஊரில் இன்னும் சில வீடுகளில் இருக்கிறது.அத்தோடு சிற்பங்களையும் செய்வதில் ஆர்வம் இருந்தது.அத்தோடு கால்பந்து விளையாடுவதிலும் ஆர்வம் இருந்தது.

.
கூத்தை பொருத்தமட்டில் முதல் மேடையிலேயே எனக்கு பெருத்த வரவேற்பு இருந்தது.1960 ல் பழகத்தொடங்கி 1961 ல் மேடையேறியது.முதல் கூத்து தருமபுத்திரநாடகம்.
கூத்து என்பது பாவத்துடன் வரவேண்டும்,இராகம்,தாளம்,பாடல்,நடிப்பு என்பன பாவத்துடன் வரவேண்டும் என்பதே என் கருத்து.

.
தரும புத்திர நாடகம், விராட நாடகம் குருக்கேத்திர நாடகம், , இந்திர குமார நாடகம் என நான்கு கூத்திலும் நான் பங்கு பற்றியிருக்கிறேன். இந்த நான்கிலும் அருச்சுனன் பாத்திரமே என் பாத்திரமாக இருந்தது.

.
எனது நடிப்பை பற்றி நான் மற்றையவர்களிடம் அபிப்பிராயம் கேட்பேன்.எனது கலைப்படைப்புக்களை குலசிங்கம்,முருகவேள் வாத்தியார் என்போரிடம் காட்டி அபிப்பிராயம் கேட்பேன்.

.
1963 ம் ஆண்டு வட்டு- இந்துவில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியில் எமது கிராமத்தில் இருந்து நான்,இராசரத்தினம்,கந்தசாமி வாத்தியார்,தங்கரத்தின வாத்தியார்,செந்தூர் போன்றோர் சிற்பங்களை கண்காட்சிக்கு வைத்தோம்.அதில் எனது சிற்பத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.

.
அத்தோடு கூத்தின் போது நானே எனக்கு ஒப்பனை செய்து கொள்வேன்.அத்தோடு மற்றவர்களுக்கு ஒப்பனை செய்துவிடுவேன்.உடைகளையும் உடுத்தி விடுவேன்.இதை என்னுடன் (வேடனுக்கு) ஆடும் சின்னத்துரை எனும் கலைஞர் என்னை selfwish player என நக்கல் அடிப்பார்.

.
கூத்து ஆடும் போது யார் திறமைசாலி என தீர்மானிப்பது பொதுசனம்.கூத்தில் ஆடுபவர்கள் அந்தப்பாத்திரமாகவே மாறவேண்டும்.உடலின் ஒவ்வொரு பாகமும் அந்த பாத்திரத்திற்குட்பட வேண்டும்.நான் தபசு செய்யும் போது என்னை அறியாமலே மேடையில் அழுதும் இருக்கிறேன்.அதைப்பார்த்து பார்வையாளர்கள் அழுது இருக்கிறார்கள்.அப்படி என் நடிப்பில் நான் ஒன்றியிருந்தேன்.

.
அருச்சுனனுக்கு ஆடிய செல்லையா,சாடாயப்பு,வேலுப்பிள்ளை,விசுவுலிங்கர், வே.நாகலிங்கம் போன்றோரிடம் இருந்தே எங்களுக்கு கூத்தின் பாடல்கள் தெரியவேண்டி வந்தது.
கேள்வி :வட மோடி ,தென் மோடி நாட்டுக்கூத்துக்கும் இருக்கும் வேறுபாடு பற்றி சொல்லுங்கள்.
தென்மோடியில் தாளங்கள் குறைவு ,ஏன் இல்லை என்றே சொல்லலாம்.சிந்து நடைக்கூத்து போன்றது அந்த வகையானது.காத்தவராயன் சிந்து நடைக்கூத்து போன்றது தான் தென்மோடிக்கூத்து.

.
இங்கு இருக்கும் சிலர் இந்த இரண்டு கூத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள்.எங்கள் பாரம்பரிய கூத்து வட மோடி தான். வட மோடிக்கூத்துக்கு ஆட்டம்,பாடல், என்பன தூக்கலாக இருக்கும்.தென்மோடி பிற்காலத்திலேயே எம் கிராமத்திற்கு வந்தது.தென்மோடி கூத்தை இந்தியாவில் இருந்து வந்த முருகதாஸ் போன்றவர்களே கொண்டு வந்தார்கள்.

.
எனது தாயார் காலத்தில் எம் கிராமத்தில் கூத்துக்காக நிரந்தரக் கொட்டகைகள் கூட இருந்திருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் கூத்து நடக்கும். மழை வந்தால் கூட கூத்து தொடர்ந்து நடக்கும்.அந்தக்கொட்டகை அடைப்பன வளவில் இருந்ததாக தாயார் சொல்லி இருக்கிறார்.எனது காலப்பகுதியில் அம்மன் கோவிலுக்கும்,சிவன் கோவிலுக்கும் நடுவில் இருக்கும் வீதியில் நடக்கும்.

.

கேள்வி ; பாடல் எழுதி இருக்கிறீர்கள்,இசைக்கோர்வை கூட செய்திருகிறீர்கள் அதன் அனுபவம் பற்றி ?

.
எனது அண்ணன் அம்மன் கோவிலுக்கு பாமாலை இயற்றி இருந்தார்.அந்த பாடல்களுக்கு எல்லாம் நானே இசை அமைத்தேன்.நான் இயற்றி பாடல்கள் ஏராளம்.இடம்பெயர்ந்து இருக்கும் போது ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறேன்.

.

இனிவரும் கேள்விகள்…

.

நாட்டுக்கூத்தை காலத்திற்கு ஏற்றவாறு மாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களா. ?

.

புலம் பெயர் மண்ணில் எம் கலையின் நிலை பற்றி கூறுங்கள்.இங்கு கூத்துக்கலையின்  வளர்ச்சி தங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா. ?

.

புரவி நடன கலை பற்றி அதன் தற்போதைய நிலை பற்றி.

.

 

கலாபூசணம் திரு.  பஞ்சாட்சரசிவம் அவர்கள் வழங்கிய வெளிப்படையான பதில்களை அடுத்த பகுதியில் காணலாம்…..

.

தொடரும்……

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
மரண அறிவித்தல் – திரு . செல்லத்துரை லிங்ககுரு.... திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                                மறைவு : 27/10/ 2016 யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...