இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

ஆறாம் அகவையில் காலடி வைக்கும் சிந்துபுரம் இணையம்.

சிந்துபுரம் இணையம் 2010 சித்திரை திருநாளன்று தனது உத்தியோகபூர்வமான சேவை ஆரம்பித்து இன்றோடு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

.
கிராமத்து செய்திகள் மட்டுமல்லாது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாடுகளை இணையம் செய்திகளாகவும்,ஆய்வுக்கட்டுரையாகவும் வெளியிட்டு எம் உறவுகளுக்கு இடையிலான உறவுப்பாலம் போல கடந்த ஐந்து ஆண்டுளாக திகழ்ந்து வருகிறது.

 

6th-anniversary

 

வரலாற்றுக்காலம் தொட்டே தொடர்பாடல் என்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இருப்பிற்கும் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தன் வளர்ச்சியையும்,கலைகளையும்,வரலாற்றையும் ஆவணப்படுத்தி வந்த சமூகம் நாகரீகமடைந்த சமூகமாகவும்,தன் எதிர்கால இருப்பினை உறுதி செய்துகொண்ட சமூகமாகவும் நிலைத்து நின்று வருகிறது.

.
.அந்த வகையில் எம் சமூகம் தனது வரலாற்றை ஓரளவு ஆவணப்படுத்தி வந்துள்ளது. .அவற்றை நிலைத்து நிற்கக்கூடிய தொழில்நுட்ப இயலுமைக்கு பேண இணையத்தொடர்பாடல் பெரிதும் உதவி வருகிறது. சிந்துபுரம் இணையமானது எம் சமூகம் சார் பெரியோரினதும், கலைஞர்களினதும் ஆக்கங்களை அண்மைக்காலமாக ஆவணப்படுத்திப்பேணும் பணியில் ஈடுபட்டு வருகிறது.இதன் மூலம் எம் சமூகத்தின் மாண்பு பற்றிய தெளிவை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல முடியும் என இணையம் நம்புகிறது.

.
அதற்கு பலதரப்பட்ட மட்டங்களில் இருந்தும் ஆதரவும்,உதவியும் கிடைத்து வருகிறது.அந்த ஆவண வெளிப்படுத்தலுக்கு உதவிக்கரம் நீட்டிய அனைவர்க்கும் சிரம் தாழ்ந்த நன்றியையும் இணையம் தெரிவித்துக்கொள்கிறது.

.
சமூகத்தின் சுதந்திரமான இருப்பிற்கு பொதுவுடமையும்,ஜனநாயக பண்பும் இன்றியமையாதது. அத்தோடு ஒரு கிராமத்தின் பொதுவுடமை என்பது அது ஜனநாயகத்தன்மையுடன் இயங்குவதிலேயே தங்கியுள்ளது.எம் கிராமத்தை பொறுத்த மட்டில் கடந்த பல தசாப்தங்களாக தனியார் பிடியில் இருக்கும் பொதுச்சொத்துக்களை மீட்க போராடி வருவது யாவரும் அறிந்ததே.அதற்கு இணையம் வழமைபோல் தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

.
ஒரு தனியாரின் சொத்தின் பெயர் பொதுவான ஊருக்கு எப்படி இருத்தல் முடியும் என்ற கேள்விகள் அண்மைக்காலமாக உரக்ககேட்கப்படும் கேள்வியாக எழுச்சியுற்றுள்ளது.இந்த எழுச்சிக்கு சிந்துபுரம் இணையமானது கடந்தகாலங்களில் குரல் கொடுத்து வந்ததும் யாவரும் அறிந்ததே.இனியும் உறுதியுடனும், முன்னதை விட வேகத்துடனும் குரல் கொடுக்கும்.

.
எமது கலைகள் என்றும் இணையத்தால் போற்றப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே .எம் முன்னோர்கள் கட்டிக்காத்து வளர்த்து வந்த இந்த கலைகளானது ஒரு தனிநபரிடமோ,அல்லது குழுக்களிடமோ முடங்கிப்போகும் நிலை உருவாகுவதை இணையம் என்றும் ஊக்குவித்தது கிடையாது.நிலத்திலும் சரி, புலத்திலும் சரி கலைகள் பொதுவுடமைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இணையம் உறுதியாக உள்ளது.எனவே கலைகளை ஊக்குவிக்கப்படுவதையும்  தலைமுறை தாண்டிஅவை பொதுவுடமைப்படுத்தப்படுவதையும் மையப்படுத்தி இணையம் கடந்த காலம் செய்திகளை வெளியிட்டு வந்தது. எதிர்காலத்திலும் அவைசார்ந்த செய்திகளை தொடர்ந்து வெளியிடும். இதனால் தனிநபர்களோ, குழுக்களோ சங்கடப்படுவதை இணையம் கண்டுகொள்ளாது  உறுதியுடன் பயணிக்கும்.
.
கடந்த ஆண்டுகளில் சிந்துபுரம் இணையத்தின் செய்திகள் அரசியல்,சமூக,நீதித்துறை மட்டங்களில் விவாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.இலங்கையின் உச்ச நீதிமன்றில் சிந்துபுரம்  இணையத்தின் செய்திகளை சுட்டிக்காட்டி வாதாடப்பட்ட சம்பங்களும் நிகழ்ந்துள்ளன.எமது செய்திகளின் பொருட்டு பிரதேச சபை சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்த நிகழ்வுகளும் உண்டு.பிரதேச  அபிவிருத்து ஒருங்கிணைப்பு கூட்டங்களிலும் சிந்துபுரம் இணையத்தின் செய்திகளை மேற்கோள் காட்டி விவாதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.இவை அனைத்தும் இணையத்தின் நம்பகத்தன்மையையும், அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டும் நிகழ்வுகள்.இனியும் இந்த நம்பகத்தன்மைக்கு பாத்திரமாக இணையம் உறுதியுடன் நடைபோடும்.

.
கடந்த ஐந்து வருடங்களாய் இணைய வளர்ச்சியிலும் அதன் நம்பகத்தன்மைக்கும் கரம் கொடுத்து வந்த உறவுகளின் கரங்களை இறுகப்பற்றி நன்றியறிதலை இணையம் செலுத்துகிறது.இனியும் உறவுகளின் பங்களிப்பை உரிமையோடு எதிர்பார்த்திருக்கும்.

.
எம் சமூகத்தின் நிலையான சுபீட்சமான இருப்பிற்காய் இணையம் சமரசமின்றி ஆறாம் ஆண்டு தாண்டியும் இயங்கும் என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கிறது.

உறவுகள் அனைவருக்கும் இணையத்தின் சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள்…

vazhthukal

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...