இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

சிந்துபுரத்தில் பெண்ணியத்தின் வாகிபாகம்..!

 

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு 
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே….
(பாரதிதாசன் கவிதைகள்)

ஆண்டு தோறும் மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.பெண்களின் உரிமைக்காகவும் அவர்களின் சுதந்திரத்திற்காகவும் அவர்கள் தம் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் அனைத்துலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இலங்கையை பொறுத்தவரை பெண்களின் சமூகப்பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணலாம்.தற்போது பெண் விடுதலை மேம்பட்டு காணப்படும் ஐரோப்பிய நாடுகளில் கூட இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்பே தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் இலங்கையில் அதற்கு முன்பாகவே 1931 ல் டொனமூர் அரசியல் அமைப்பின் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டுவிட்டது.அந்த வகையில் இலங்கை நீண்ட காலத்திற்கு முன்பே பெண் உரிமை விடயத்தில் முற்போக்கான நிலையை எடுத்திருந்தது என்பது மறுக்க முடியாது.

c0114613

ஆனால் எமது சிந்துபுரம் கிராமத்தில் பெண்களின் அரசியல்,சமூக, பொருளாதார நிலை என்று பார்த்தால் வரலாற்றுக்காலம் தொட்டே பொதுவாக பாரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.

1950களின் பின் மாதர் சங்கங்கள் என்ற பெண்களை மட்டுமே உறுப்பினராக கொண்ட சமுக நல கட்டமைப்புக்கள் இயங்கி வந்தன.அவை குறிப்பிட்ட அளவில் எம் கிராமத்து பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.எனினும் இவ்வமைப்புக்கள் சமூக மாற்றத்திற்கு பாரிய அளவிலான எழுச்சியை இன்றுவரை ஏற்படுத்தவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எம் கிராமத்துப்பெண்கள் சமூக நிலையில் ஓரளவு திருப்பிதிகரமான அறிவை கொண்டிருந்தாலும்,தேசிய,சர்வதேசிய அறிவியலில் கீழ்மட்ட அறிவையே கொண்டிருந்தனர்.அந்த நிலை இன்றும் தொடர்கிறது.

எம் கிராமத்தில் ஆகக்குறைந்தது இரண்டு நூலகங்கள் இருந்தும் அவற்றை பயன்படுத்தும் குடும்பப்பெண்களின் எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கதாகவே காணப்படுகிறது.எனினும் சில உயர் தரம் படிக்கும் மாணவிகள் நூலகத்தை ஓரளவு தமது உசாத்துணைக்காக பயன்படுத்தி வந்தனர்.ஆனால் இந்த நிலை இன்று அருகிவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

தனிப்பட்ட ரீதியில் பெண்கள் படித்து ஆகக்கூடியது ஓர் ஆசிரியையாகவே வரமுடிந்தது.சிலர் அரச பணிகளில் இருந்தாலும் உயர் பதவிகள் வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்களின் கலை,கலாசார பங்களிப்பும் சொல்லும்படியாக இருந்ததில்லை.தம் ஆண்பிள்ளைகளை கலைக்காக ஊக்குவிக்கும் வரையிலேயே அவர்களின் செயற்பாடுகள் மட்டுப்பட்டிருந்தது.

பெண்களின் நிலை பற்றி ஆராயும் போது சீதனம் பற்றி விவாதிக்காமல் செல்ல முடியாது.
ஒருகாலத்தில் எம் கிராமப்பெண்களுக்கு வழங்கப்படும் சீதனம் யாழ் குடாநாட்டில் ஏனைய கிராமத்திலும் விட உச்சநிலையை தொட்டிருந்ததும் எமக்கு வரலாற்றுப்பெருமை. பெண்களை போகப்பொருளாக பார்க்கும் கொடுமையின் குறியீடே சீதனம் என்பதை விளங்கிக்கொள்ள முடியாத சமூகமாக எம் சமூகம் இன்று வரை இருப்பது பெரும் சாபக்கேடு.வெளிநாட்டுப்பணத்திமிரும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் சீதன முறமையை எம் சமூகத்தில் இருந்து அகற்ற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

poltics_small

இன்றும் திருமணமான பல வருடங்களின் பின் சீதனம் வாங்கிவர சொல்லி தம் மனைவியர்களை தாய்வீடு அனுப்பிவைக்கும் நிலை பெரும் பணக்கார வீடுகளிலேயே காணப்படுவதை செய்திகளாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்.

புலம்பெயர் மண்ணில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எம் கிராமம் சார்ந்த நிர்வாகக்கட்டமைப்புகளிலும் பெண்களின் பங்கு பூச்சியம் என்றே சொல்ல வேண்டும்.

புலம் பெயர் நாடுகளில் தம் பொருளாதார தேவைக்காக ஓடுவதிலும்,வீட்டுவேலைகளில் மூழ்கியிருப்பதும்,தம்பிள்ளைகளுக்காக கல்விக்கு சரீர உதவி செய்வதிலும் அவர்கள் நேரம் கழிந்துவிடுகிறது.தம் பிள்ளைகளின் கல்விசார் நடவடிக்கைகளில் உதவும் நிலையிலும் பெண்கள் இல்லை.இதற்கு அந்தந்த நாடுகளின் மொழியறிவும்,பாடத்திட்டங்கள் பற்றிய அறிவின்மையுமே முதன்மை காரணமாகிறது. எனினும் ஆண்களுக்கும் இந்த நிலையே தொடர்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு சமூகத்தின் கட்டமைப்பில் பெண்கள் ஓர் அசைக்கமுடியாத அங்கம்.ஓர் பெண் படித்தவளாய் இருக்கும் பட்சத்தில் அவள் சார்ந்த குடும்பமும் படித்த குடும்பமாய் இருக்கும்.பிள்ளைகளின் கருத்தியல் மாற்றங்களில் அவர்களின் தாயின் பங்கு பாரிய அளவில் செல்வாக்கு செலுத்தும்.

பெண்களின் கருத்தியல் மாற்றம் என்பது ஓர் சமூகத்தின் அடிப்படை மாற்றத்திற்கு வழிசமைக்கும் என்பது நிறுவப்பட்ட அறிவியல் சமன்பாடாகும்.

mother-love_3

எம் சமூகத்தில் பெண்களின் சுதந்திரமும்,பெண்களின் சிந்தனை மாற்றமும் ஏற்படும் வரை முழுமையான சமூக மாற்றம் நிகழப்போவதில்லை.நிலத்திலும் சரி புலத்திலும் சரி பெண்கள் சார்ந்த கட்டமைப்புகள் நிர்வாக ரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் மீளமைக்கப்படவேண்டிய தேவை உருவாகிவருகிறது.ஏனெனில் இந்த இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார,விஞ்ஞான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பெண்கள் தயாராவது எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...