இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

“மக்களின் நம்பிக்கையை தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள்” – **சிந்துபுர இரகசியம்** பகுதி – 06

கோவிலடிகளின் அதிகாரங்களின் கிழ் தனது பொதுச்சொத்துக்களை பறிகொடுத்து, அன்று முதல் இன்று வரை அதை மீட்க முடியாத தூர்ப்பாக்கிய நிலையில் நமது சமுகம் இருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய விடயமாக இருக்கிறது. கோவிலடிகள் தம் ஆதிகாரங்களை பொது அமைப்புகள் மீதும் பொதுச் சொத்துக்கள் மீதும் பரவலாக செலுத்தி வந்த காலங்களில் அதற்கு எதிராக போராடியவர்கள் இன்றும் நம் சமூகத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் இன்று தம்மை மௌனப்படுத்தி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

1950 களிலும், 1960 களிலும், 1988 களிலும் இந்தக் கோவிலடிகளின் அதிகாரங்களை பலர் எதிர்த்தபோதும் அந்த காலத்தில்  மக்களிடையே நிலவிய மூட நம்பிக்கைகள் எதிர்த்தவர்களுக்கு  பெரும் தடையாகவே அமைந்தது. மக்களை விழிப்படையச் செய்யவேண்டும் என்ற முயற்சியை பலர் பலவருடங்கள் முன்னெடுத்தார்கள். முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியிலும் பாரியளவு வெற்றி என்பது கிடைக்காமலே போனது.

அதற்கு மூலகாரணமாக அமைந்தது மக்கள் கொண்டு இருந்த மூடநம்பிக்கைகள். அந்த காலங்களில் மக்கள் இராச வைத்தியர்களை கடவுளாக பார்க்கவேண்டிய நிலை இருந்தது. வரும் வருத்தங்கள், துன்பங்கள் என்பனவற்றைப் போக்க மக்கள் அவர்களையே நம்பவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அதற்கு கைமாறாக அவர்களுக்காக உழைத்துக்கொடுத்தும் வாழ்வேண்டிய கட்டாயமும் இருந்தது.

மக்களின் இந்த மூட  நம்பிக்கையை அந்தக் காலம் முதல் அவர்கள்  தவறாகவே பயன்படுத்தி வந்தார்கள். தம் இச்சைக்கு ஏற்ப அவர்களை ஆட்டிப்படைக்கவும் செய்தார்கள். நமது விருப்பு வெறுப்புகளையும் ஆசாபாசங்களையும் நிறைவேற்ற மக்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஆனாலும் இந்த ஆதிகாரவர்கத்தின் மூலம் மூத்தவரகள் சிலர் மக்களுக்கு நல் சேவையை ஆற்றினார்கள் என்பது மறுக்கமுடியாத ஒன்று. ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் சிந்தனைகள் மாறிப்போய்விட்டதால் அவர்கள் மக்களை தம் அடிமை பொருளாக பாவிக்க முனைந்தார்கள்.

இதில் சிலர் தம்மை சற்று உயர்தவர்களாக காட்டிக் கொள்ள அந்த ஆதிகாரவர்கத்திகருக்கு துணையாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை பூர்த்தி செய்யும் பொறுப்பை இவர்கள் மேற்கொண்டார்கள். இவர்கள் அதிகார வல்லுனர்களின் சேவையாளர்களாக இருந்தார்கள்.

மக்கள் நம்புவதும் அவர்களை கடவுளாய்க் காண்பதும் தாம் வருந்தும் துன்பங்களை துடைக்க வல்ல சக்தி அவர்களிடத்தில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் அவர்கள் தமது வருத்த துன்பங்களை துடைக்க செய்யும் அத்தனையும் உண்மையானது என்ற மூடத்தனமான நம்பிக்கையும் தான்.

இது நீண்டகாலம் நீடிக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதற்காக அவர்கள் என்றும் மாறத நீண்ட கால திட்டங்களை தீட்டவேண்டிய தேவையை உணர்ந்தார்கள். அதற்காக அவர்கள் மக்கள் என்றும் சுயமாக சிந்திக்கும் திறனைப் பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக  இருந்தார்கள்.

அவர்களின் நீண்டகால திட்டத்தின் நோக்கங்களாக….

  • மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் பயம் என்றும் குறைந்து விடக்கூடாது.
  • மக்கள் எப்படி வாழ்ந்தாலும் தம் ஆதிகார வட்டத்திற்குள் இருக்கவேண்டும்.
  • எந்த காலத்திலும்  சாதரண மக்களுக்கு நிகராக தம் பரம்பரையினர் வாழக் கூடாது.
  • ஒட்டுமொத்த சமூகமும் ஏதோ ஒரு வழியில் தமக்கு கிழ் இருக்கவேண்டும்.

என்பனவற்றை கருத்தில் கொண்டு பெரும் திட்டங்களை தீட்டிக்கொண்டே இருந்தனர். அந்தக் காலம் முதலே மக்கள் அடிப்படை கல்வியைப் பெறும் வழிகள் அனைத்தும் திட்டமிட்டு தடுக்கப்பட்டு இருந்ததால் மக்கள் தூரநோக்குடன் சிந்திக்கும் திறனைப் பெற்று இருக்கவில்லை, இது அவர்களின் வெற்றிக்கு  பெரும் உதவியாக அமைந்தது.

அதன்படி இன்றுவரை கலைந்துவிடாத பாரிய திட்டங்களை சரியாக தீட்டி முடித்தார்கள். அதற்கு பெரும் துணையாக தமது சேவையாளர்களையும் பயன்படுத்தினார்கள். அவர்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் அவர்கள் நோக்கத்தை இன்று வரை பூர்த்தி செய்துவருகிறது என்பது அவர்களின் தந்திர திட்டங்களைக் கண்டு வியக்கவைப்பதுடன் நமது மூட்டாள் தனத்தையும் நினைத்து வருந்தச் செய்கிறது. சரி… அது என்ன தீட்டங்கள்..???

இரகசியம் பரகசியமாகும்…..

**உத்திரபுத்திரன்**

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...