இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

விதியை நம்பி வீண்போவோர்!- தந்தை பெரியார்

மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகிறதே ஒழிய, சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்காக குடிஅரசு பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சி பத்திரிகை ஜாமீன் கேட்கப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினந்தோறும், நிமிடந்தோறும் அடைந்து வரும் தொல்லையும், நசுக்குச்சேட்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது.

பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர் களாகக் கொண்ட போலீஸ் இலாகா, போஸ்டல் இலாகா, ரயில்வே இலாகா, நிதி இலாகா, நிருவாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து அய்கோர்ட் நிருவாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக் கொப்பாகவே இருந்து வருகின்றது.

– தந்தை பெரியார்

 


விதியை நம்பி வீண்போவோர்!

மக்கள் மூடநம்பிக்கையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பகுத்தறிவைக் கொண்டு சிந்திக்கமுடியவில்லை. இதற்கு மதமும் துணை போகிறது. இந்த மக்களின் மத நம்பிக்கைகள் முழுக்க முழுக்க மூடநம்பிக்கை நிரம்பி யவை. ஆனால், மேலை நாடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டன.

 

சமூக பொருளாதார நிலைகளும், மதக் கட்டுப்பாட்டின் அடிப்படையிலேயே உள்ளன. இந்த மத நம்பிக்கைகள் புதிய திட்டமிடுதலுக்கும், வளர்ச்சிக்கும் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்களும் இவைகளை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

கடவுள் விட்ட விதி இது என்று விதியை நம்பி காலத்தைக் கழிக்கின்றனர். இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில்களுக்குள் நுழைய முடியாமலும், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமலும் உள்ள நிலை இருக்கின்றது.

– இந்திய நிலை குறித்து ஏசியன் டிராமா என்ற நூலில் குன்னர் மிர்டல். பக்கம் 41


ஈ.எம்.எஸ். பார்வையில் மதம்

புராதன பொதுவுடைமையின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கிரீஸிலும் ரோமிலும் தோன்றியது போன்ற அடிமை அமைப்பு முறையிலிருந்து மாறுபட்ட ஒரு வர்க்க வேற்றுமையும், சுரண்டல் முறையும்தான் இங்கு உருவாகியது.

 

சிந்து சமவெளி தடயங்களை பரிசீலிக்கும் போது அன்றைய சமூக வாழ்க்கையின் பகுதியாக, கிரீஸிலும் ரோமிலும் இருந்தது போன்ற அடிமைமுறை சிந்து சமூகத்தில் இருந்திருக்கவில்லையா என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

ஆனால் சிந்து சமவெளி நாகரிகத்தையே அழித்து ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்கிய ஆரியர்கள் அடிமைகள் – எஜமானர்கள் என்ற வர்க்க வேறுபாட்டுக்குப் பதிலாக ஆரம்பத்தில் நான்கு வர்ணங்களும் பிறகு எண்ணற்ற ஜாதிகளும் உபஜாதிகளுமடங்கிய ஓரமைப்பை உருவாக்கினர்.

இது நமது சமூக வாழ்க்கையில் இந்தியாவுக்கு உரித்தான ஒரு விசேஷ தன்மையை அளித்தது. அடிமை முறையிலுள்ளதுபோல தெளிவானதும் மறுக்க முடியாதது மான சுரண்டல் முறைக்கு பதிலாக வருணாசிரம தர்மத்தினுடையவும் ஜாதி ஆசாரங்களுடையவும், இவைகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற மத நம்பிக்கை களுடையவும் திரைக்குப் பின்னால் வளர்ந்த மேல்ஜாதி ஆதிக்கம் மேலோங்கி வந்தது. இதற்குப் பாரதீய நாகரிகம், ஹர்ஷ நாகரிகம் என்பது போன்ற செல்லப் பெயர்களும் கிடைத்துள்ளன.

– ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய இந்திய வரலாறு என்னும் புத்தகத்தின் 36ஆம் பக்கத்தி லிருந்து

குறிப்பு: இந்திய சமூகத்தில் வர்க்க பேதத்தை விட ஜாதி பேதமே மேலோங்கியுள்ளது என்ற தந்தை பெரியாரின் கருத்தை ஈ.எம்.எஸ். இங்கு ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

 


முதல்தரமான விரோதி!

எல்லா மதங்களுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் முதல்தரமான விரோதியாக இருப்பது எது தெரியுமா? பகுத்தறிவு என்று இருக்கிறதே ஒரு பொருள் – அது தான்! வேறு எது?

 

– வால்டே

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/78153-2014-04-04-10-59-25.html#ixzz2ytdqk2FO

பிந்திய 5 செய்திகள்

சிந்துவெளி குறியீடுகள் தமிழ் மொழிக்குறியீடுகளே” பிந்திய ஆய்வின் முடிவுகள்.... சிந்துசமவெளியின் முத்திரைகளைத் தொடர்ந்து ஆராய்ந்து அடையாளம் கண்டதில் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய, தமிழ் மொழியின் துவக்க காலசொற்குறியீடுகள் என்கிற முட...
நம்மூரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள் பற்றிய ஆவண விபரங்கள் கோரப்படுகின்றன....   எமது சிந்துபுர மண்ணில் வாழ்ந்து எமது சமுகத்திற்கு அழியாத சேவை வழங்கிய கலைஞர்கள், சமுக சேவையாளர்கள், சமுகமுன்னேற்றவாதிகள், சமுகசேவைக் கல்வியள...
அநியாயங்களிடையே பிறக்கிறான் ‘சே-குவேரா’ ! – கட்டுரை... "கோழையே, சுடு! நீ சுடுவது 'சே'வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!" தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய 'சே'வின் இறப்பில் பிற...
கடலுக்கடியில் உறங்கும் சிந்துபுர மூதாதையின் தொன்மை-சிந்துவெளி நாகரீகம்....   தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையி...
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தஞ்சைப் பெருவுடையார் கோயில் பிரகதீசுவரர் ஆலயம்* ...