இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

“நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்கள்” – **சிந்துபுர இரகசியம்** பகுதி – 05

 

Trian

மேலே உள்ள சித்திரப் படம் என்ன சொல்கிறது என்பதை பலர் பலவாறு சிந்தித்திருப்பீர்கள். நீங்கள் எவ்வாறு சிந்தித்திருந்தாலும், அந்தப்படத்திற்காக நாம் சொல்லப்போகும் விளக்கம் இதுதான், ஒரு சமுகத்தை வழிநடத்தும் முறைறையே அப்படம்

காட்டுகிறது. சரி நாம் நம்முடைய கதைக்கு வருவோம், எமது கிராமத்திற்கும் இந்தப் படத்திற்கும் மிகம்பெரிய ஒற்றுமை உண்டு. அதை நீங்கள் பார்த்தவுடனே புரிந்து கொண்டிருப்பிர்கள்.

எமது கிராமத்தின் பெரும் தளமாக இருக்கும் மூன்று அமைப்புகளும் காந்தீஜீ சனசமுக நிலையம், வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கமும் ஆகும். அவையே எமது கிராமத்தினை வழி நடத்தவேண்டிய மிகப்பெரும் பொறுப்பைக் கொண்டவை. அவைகளின் சரியான நீர்வாகமே எமது சமுகத்தின் மலர்ச்சியும் வளர்ச்சியுமாகும்.

ஆனால், இந்த கோவிலடிகள் அந்தக் காலம் முதல் இம்மூன்று அமைப்புகளையும் திட்டமிட்டு தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டன. அவற்றின் சொத்துக்களை வஞ்சகமான முறையில் திட்டங்களை தீட்டி ”ஒப்பந்த அடிப்படை என்ற பெயரில்” கையகப்படுத்திக் கொண்டன. அந்த காலங்களில்அந்த அமைப்புகளை நிர்வகித்தவர்களும் விழிப்புணர்வு குறைவாக இருந்ததும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது.

கிராமத்தின் சொத்துக்களை நிர்வகிக்கும் கடமை  பெயரளவில் பொது அமைப்புகளிடம் இருந்தது, அவை கோவிலடிகளின் நீர்வாகத்தின் கீழ்க் கொண்டுவர ,அந்த அமைப்புகளின் நீர்வாகம் கோவிலடிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.  அவை தனியே கோவிலடியை சார்ந்தவர் நீர்வகிப்பதால் சமுகத்தின் பார்வையில் இருந்து ஏமாற்ற  அந்த நிர்வாகங்களில் பொது மக்களின் பிரதிநிதிகளை  பெயரளவில் இணைக்கப்பட்டார்கள்.  ஆனால் அவர்களும் தலையாட்டும் பொம்மையாக்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டார்கள்.

நீண்டகால அதிகார தீட்டங்களை முறையாக வகுத்து சரியான பொறிகளை அமைத்து பொது அமைப்புகளின் சொத்துகள் காலமெடுத்து பொறியில் சிக்கவைக்கப்பட்டன. அந்த காலங்களில் அமைப்புகளில் இருந்த மக்கள் பிரநிதிகள் தூரநோக்குடன் சிந்திக்க முடியாதவர்களாகவும்  மக்களின் கல்வியறிவு குறைவாகவும் இருந்தது அவர்களுக்கு பெரும் சாதகமாக இருந்தது. ஆதிகாரத்தில் உள்ளவர்களின் முடிவுகளை அலசி ஆராய முடியாமல் ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமே நிர்வாகிகள் இருந்தனர்.

அவர்கள் கல்வியறிவைப் பெயமுடியாததற்கு, 1960 கள் முதல் கல்வியைப் மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக செய்ப்பட்ட பல சூழ்ச்சிகளும்,சதியும் அன்று மட்டுமல்லாது இன்றும்  நமது சமுகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவ்வாறு சிறப்பாக தீட்டப்பட்ட நீண்டகால தீட்டப் பொறியில் சிக்கிய பொதுமக்கள் சொத்துக்களும்,கல்வியும் இன்னும் நிறையவே இருக்கின்றன.

அது என்ன பொறி..?

இதுவரை அதைப்பற்றி சிந்திருக்கிறோமா..?

இவையனைத்தும் சாட்சிகள் இன்றி தடயங்கள் இன்றி கையகப்படுத்தபட்டவை என்பதால் இன்றுவரை எம்மால்  மீட்கமுடியாது இருக்கிறது.

அந்த பொறி  இது தான், கோவிலடிகளுக்கு சொந்தமான காணிகளில் தான் பொது சொத்துக்கள்  குத்தகையடிப்படையில் கட்டப்பட்டது . சமுகத்தின் அபிவிருத்திக்காக வரும் பணங்கள் சொத்துக்களை கோவிலடிகளின் ஆதிகாரங்களின் கீழ் இருக்கவேண்டும் என்றால் அமைப்புகளின் நீர்வாகம் மட்டும் அல்ல அதன் சொத்து இருப்பு  நிலங்களும் அவர்கள் அதிகாரத்தின் கீழ் இருக்கவேண்டும் என்பது நம்சிந்தனையை மீறிய மிகப்பெரிய இரகசியம்.

அக்கால பொது அமைப்புகளின் அபிவிருத்திச் சொத்துக்களை நிர்மானிப்பதற்கு காணிகள் அவசியமாக தேவைப்பட்டது. அந்த தேவையை கோவிலடிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டன. குத்தகையடிப்படையில் கிராமத்தின் சொத்துக்களை தமது காணிகளில் நீர்மானிக்கும் ஒப்பந்தங்களை பொது அமைப்புகளுடன் செய்துகாெண்டது. அந்த அமைப்புகளின் பிரதான நீர்வாகம் அவர்கள் கையில் இருந்ததும். ஏனையவர்களை இலகுவாக ஏமாற்றும் வல்லமையும் அவர்களிடம் இருந்தது இத்திட்டத்திற்கு பெரும் உதவியாக அமைந்தது.

அதனால் நீண்டகால குத்தகை என்ற அடிப்படையில் தமது காணிகளில் பொதுச்சொத்துக்களை நிர்மாணிக்க வைத்தது. இவ் ஒப்பந்தங்களுக்கு ஆவணங்கள் எதையும் அவை முறையாக பேணாது தவர்த்தது அவர்களின் மிகப்பெரும் சாமர்த்தியம். இவ்வாறு அமைந்த சொத்துக்கள் காலப்போக்கில் தானகவே கைமாறிப்போனது. கேட்பதற்கோ அல்லது எதிர்பதற்கோ எந்த சாட்சிகளோ ஆதாரங்களோ ஆவணங்களாக இல்லை. சாட்சியாக இருப்பவர்களும் வாயடைத்து காலபோக வானையடைந்தனர்.

இப்போது அவற்றை மீட்பது என்பது இயலாத ஒன்று என்பதான் உண்மை. எப்படி இருக்கிறது இந்த நீண்டகால சதித்திட்டம். இப்படி ஒரு நிலைமையை அந்தகாலத்தில் ஒப்பந்தங்களுக்கு இணங்கியவர்கள் எதிர்பாத்திருக்க மாட்டார்கள். காலப்போக்கில் எல்லாம் மாறும் என்பதை கோவிலடிக்காரர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

இந்த திட்டங்களின் வஞ்சக இரகசியங்களை என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா… இல்லை எனில் சிந்தியுங்கள்.. உங்களுக்கே புரியும் இதுபோன்ற திட்டங்கள் தற்போதும் சில பொது அமைப்புகளின் சொத்துகள் மீது தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை. இவ்வாறு மக்கள் சொத்துக்கள் மீது இருந்து சமுகத்தின் மேல் உடகார்ந்து ஒரு எஜமான் போன்று கிராமத்தை வழிநடத்தவே இந்த கோவிலடிகள் விருப்புகின்றன. அதற்கான திட்டங்களையே இன்றும் தீட்டிக்கொண்டு இருக்கின்றன.

ஆனால் சிந்துபுரம் என்ற கொள்கை கோட்பாடுகள். மக்களுடன் மக்களாக சமுகத்தை அபிவிருத்தி நோக்கி இழுத்துச் செல்வதையே விரும்புகின்றன். இப்போது புரிகிறதா படம் சொல்லும் கதை என்னவென்று..??

இரகசியம் பரகசியமாகும்…..

**உத்திரபுத்திரன்**

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...