இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

“கோவில்கள் என்றாலே பகட்டு மைதானம் என்றாகிவிட்டதா.?”- **சிந்துபுர இரகசியம்** பகுதி – 04

அத்தனை விடயங்களையும் மனது ஏற்றுக் கொண்டாலும் நேராக நாம் ஏற்க மறுக்கின்றோம். இத்தகைய மனநிலையில் தான் நமது வாழ்க்கை நீண்ட காலங்களாக ஓடிக் கொண்டு இருக்கிறது. சரி, பிரச்சனைகள் என்ன..? ஏன்..? என்று ஆராய முன்னராக சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  • கோவில்கள் – ஒரு கிராமத்திற்கு முக்கியமானவை. சமய நன்நெறி வழி மக்களை வழி நடத்தும் மிகப்பெரும் கடமை அவைக்குண்டு.
  • சமூக அமைப்புகள் – இவை ஒரு சமூகத்தை கட்டுக்கோப்புடன் அபிவிருத்தி நோக்கி வழிநடத்தும் வல்லமையுடனான கடமையைக் கொண்டவை.

ஒரு மனிதனைக் கோவில்கள் அவன் உளரீதியான அமைதியை பேணவைத்து நல்வழி நடத்தவேண்டும். ஆனால்  சமுகம், அது சார்ந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரு சமூகத்தின் கட்டமைப்பு.

ஆனால் நமது கிராமத்தைப் பொறுத்தவரை எல்லாம் தலைகிழாக உள்ளது என்பதை நாங்கள் நிச்சயம் எற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். கோவில்கள் ஒன்றுக்கொன்று போட்டி, கோவில் திருவிழாக்காரர்கள் என்று பிரிந்து நின்று அதற்க்கிடையில் ஒரு போட்டி, அந்த வம்சம் இந்த வம்சம் என்று போட்டி. இந்த போட்டிகளின் கோரமே இன்று எமது கிராமத்தின் இந்த நிலைக்கு காரணமாகிறது.

இங்கே கோவில்கள் தம்மை அபிவிருத்தி செய்துகொள்ளும் அளவுக்கு தான் சார்ந்த சமூகத்தை ஏன் அபிவிருத்தி செய்ய முற்படவில்லை.? என்ன காரணம்.? கோவில்களின் கடமை என்ன..? சைவநெறி என்றால்  என்ன..? சைவசமயத்தின் கோட்பாடுகள் தான் என்ன..? அனைத்தும்  நாகரிகம்  போல மாற்றிவிட்டதா..? கோவில்கள் என்றாலே நாகரிகப் போட்டி மைதானம் என்றாகிவிட்டதா..? கடவுளை வைத்து பணபல விளையாட்டா..?

நாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று ஒருகணம் சிந்திக்கின்றோமா..? இல்லையே.. அவரவர்க்கு ஒரு கோவில்,  அவரவர்களுக்கு ஒரு வம்சம்அவரவர்க்கு ஒரு திருவிழா, .. பணம் முழுக்க கொட்டித் பெரும் கொண்டாட்டம். இதுதான் கடந்த 100 வருடங்களாக நமக்கு தெரிந்த நாகரிக வாழ்கை.

கோவில்களை நன்றாக வைத்திருப்பதும், திருவிழாக்களை நடாத்தி கூடி வழிபடுவதும் சற்றும் தவறே இல்லை. ஆனால் நாம் அதற்கும் மேலே சென்று நம்மை நாமே மறந்து என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து ஒருபிரமையான மாயையில் வாழ்கிறோம் என்பது தான் உண்மை.

இந்த பக்தி மயக்கத்தில் நீங்கள் உங்களையே மறந்து இருக்கும் சந்தர்ப்பம் பலருக்கு பலவகையில் உதவியாக இருக்கிறது. இந்த சந்தர்ப்பங்களை பலர் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் பக்தியைக் கொண்டு பலர் தமது வாழ்க்கையை கொண்டு செழுமைப்படுத்துகிறார்கள். இவை உங்களுக்கு தெரிந்தும், அனைத்தும் அறிந்தும் உங்கள் மாயையே இதிலிருந்து விடுபடாதற்கான காரணம் தான் இன்னமும் புரியவில்லை. இந்த மயக்கம் தான் இன்றைய பெரும் பிரச்சனைக்கும் அத்திவாரம்.

நமது கிராமத்தை கோவில்கள் சரியாக வழிநடத்தாதது ஒருப்பக்கம் இருக்கட்டும் , ஆனால்  கிராமத்தின் சொத்துக்கள் மீது கோவில்களின் பெயரில் அதன் முதலாளிகள் அமர்ந்து அதிகாரம் செலுத்தியபோதும், சமூகத்தின் அமைப்புகளை தவறான அடிமையான வழிக்கு செலுத்திச் சென்றபோதும் தான் அங்கே அத்தனைக்கும் சிம்மசொப்பனமாக சிந்துபுரம் என்ற ஒன்று உருவாகிப்போனது.

அது எந்தக் கோவில்களையும் அழிக்க உருவாகவில்லை, அது யாரையும் தவறாக வழிநடத்த உருவாகவில்லை, அது யார் சொத்தையும் எந்தக் குடும்பத்தையும் பழிவாங்க உருவாகவில்லை, அதன் நோக்கம், அதன் காரணம், அதன் கொள்கை, அனைத்தும் பொது நலம் சார்ந்ததாகவே அமையவேண்டும் என்பதே அதன் கொள்கைரீதியான கட்டுப்பாடு.

இந்த சிந்துபுரம் என்பது, கோவில்களின் பெயரால் கிராமத்தில் ஆதிகாரம் செலுத்தியவர்களுக்கு இடையூறாகிப்போனதன் விளைவுதான். விருட்சமாய் வளர்ந்து நிற்கும் இந்த போராட்டத்தின் மூல காரணமாகும்.

Trian

இந்த படம் சொல்லும் கதையை சிந்தியுங்கள். அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்வார். மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க விரைவில்..

இரகசியம் பரகசியமாகும்…..

**உத்திரபுத்திரன்**

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...