இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

அண்ணாவியார் அமரர் வே.நாகலிங்கம்.

அண்ணாவியார் அமரர் வே.நாகலிங்கம் அவர்கள் நாட்டுக்கூத்துக்கு ஆற்றிய கலைச்சேவையை பண்டிதர் ம.கடம்பேசுவரன் அவர்கள் வழிவழி வந்த வைரங்கள் எனும் தலைப்பில் கல்யாணி சஞ்சிகைக்காக எழுதியிருந்தார்.அக்கட்டுரையின் மீள் பதிப்பு இங்கே.
.
முத்தமிழ் ஆசான், சிவஞான சாகரம், அறிஞர் கிருட்டினர் துரைசுவாமி 90 வயதுடையவராயினும் தனது ஞாபக சக்தியை சிறிதேனும் இழக்காதிருப்பவர்.அவரது உறவும்,நட்பும்,இக்கட்டுரையை எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந்தது.அண்ணாவியார் வே.நாகலிங்கத்துடன் பின்னலாக பிணைந்திருப்பவர்கள் சிலரையும் தொட்டுக்காட்டி செல்கின்றது இக்கட்டுரை.
.
வழிவழி வந்த கலைமரபே வட்டுகோட்டை மக்களால ஆடப்பட்டு வரும் தனித்தன்மை வாய்ந்த வடமோடி நாட்டுக்கூத்து.அந்த வழியில் வந்தவர்களே நாட்டார் கலைகளுக்கு மூலாதாரமாக இருந்து இன்றைய தலைமுறையினருக்கு கையளித்துள்ளனர்.
.
மத்தள அண்ணாவியார், ஆட்டப்பயிற்சி அண்ணாவியர் இருவருமே அண்ணாவியர் என்ற அந்தஸ்துக்குரியோர்.அந்த இருவர்களுடன் பாடல்களை பயிற்றுவிப்பவர் பிற்பாட்டுக்காரர் இவர்களும் இணைந்து நாட்டுக்கூத்து பயில வரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பவர் பயிலுபவர்களையும் உடன் சேர்க்க ஐந்து பிரிவாகும்.இந்த ஐந்து பிரிவுக்குள் அடங்குபவர்களின் கூட்டு முயற்சிக்கு ஒப்பனை கலைஞரும் துணை நிற்பர்.எனவே நாட்டுக்கூத்தானது ஒர் கூட்டுக்கலை வடிவமாகும்.ஆதலாலே தனித்த ஒருவர் எல்லாவற்றிக்கும் உரிமை கொண்டாட முடியாது.தனித்து ஒருவருக்கு உரிமை கொடுப்பதே தவறானதே.
.

Scan_Pic0018
கூத்துக்கலைகளும் ஏனைய நாட்டார் கலைகளும் சிந்துபுரத்தினில் நிலவுவதற்கு அமரர் வே.நாகலிங்கம் தொழில்பட்டதே காரணமாகும்.அந்த வேளையில் மத்தள அண்ணாவியார்களாக அமரர்கள் எ.செல்லப்பாவும்,ம.வல்லிபுரமும் இருந்தனர்.பாடகராக பிற்காலத்தில் உடனிருந்தவர் அமரர் சு.அமிர்தலிங்கமாவர்.இவர் சிறந்த குரல்வளமிக்கவர் என்பதை கூத்துலகம் அறிந்ததொன்றாகும்.

.
அமரர் வே.நாகலிங்கம் அவர்கள் சிந்தூரிலே 1902 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பத்தாம் நாள் பிறந்தார்.தந்தையார் வேலுப்பிள்ளை, தாயார் வள்ளியம்மை இவர்களது தோன்றமும் சிந்துபுரமே. மண்வாசனைக்கேற்பவும் கலைமரபுகள் இவர்களின் உள்ளத்தில் குடிகொண்டன.
.
காலச்சுழற்சிகேற்ப அந்தக்காலத்து இந்தியக்கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை இலங்கையில் நடத்தினர்.கலை நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் பெற்றோருக்கு தெரியாமலே அவ்விடத்திற்கு போய்விடும் குணம் இவருக்கு இருந்தது.இந்தப்பழக்கமே இவரை கலைக்கு அடிமைப்படுத்தியது.கலைகளை பார்த்து இரசிப்பதோடு நில்லாது ஆட்டங்களுக்கும், கலைகளுக்கும் மூலமான அமிசங்களை தன்னகத்தே திரட்டிக்கொண்டார்.தன் ஊரிலே நடந்து வந்த நாட்டுக்கூத்துக்களையும் தானறிந்த கலைநுட்பங்களையும் எடுத்துக்கூறுவதுடன் ‘’இப்படிச்செய்தாலென்ன அப்படிச்செய்தாலென்ன ‘’ என்று ஆர்வத்தோடு கேட்பார்.மூத்தக்கலைஞர்களின் ஏவற்படி தொட்டாட்டி வேலைகளை செய்பவர்.ஆதலினால் மூத்தக்கலைஞர்கள் இவரை இகழ்வதில்லை.உற்சாகம் ஊட்டி வழிகாட்டினர்,வரவேற்றனர்.நாளாக நாளாக இவரிலே மூத்த கலைஞர்களுக்கு பற்றும் பரிவும் ஏற்பட்டது.

.
மூத்தகலைஞர்களால ஆடப்பட்டு வந்த தர்ம புத்திர நாடகத்தில் சுபக்கணை,காந்தாரி,என்னும் பாத்திரங்களை ஆடியவர்களை முதுமை காரணமாக ஒதுங்கவே கலைஞர்களோடு தொடர்புகொண்டிருந்த இவர் அந்தப்பாத்திரங்களை ஏற்றுகொள்ள முதிய கலைஞர்கள் இடம்கொடுத்தனர்.
.
கூத்துக்கலை ஒரு கூட்டுக்கலை என்பதை உணர்ந்து கொண்டதாலும் இவருக்கிருந்த ஆர்வத்தாலும் மிகக்குறுகிய காலத்துள் ஆட்டங்களை பயின்றுகொண்டார்.குரல் வளம் தாளவமைதி ஆட்டத்திறன் ஆகியன இவருக்கு இருந்தமையாலும் பெரியவர்கள் இவரை புகழ்ந்தனர்.
.
மத்தள கணபதியார் – இவர்காலம் 1819 ற்கும் முன்பின்னாக அமைந்தது.இவரது காலத்திற்கு முன்பிருந்தே ஆட்டப்பட்டு வந்த கலைவடிவம் மத்தள கணபதியாரால் தொடரப்பட்டது.
.
பிற்காலத்திலே செல்லமாக மத்தளச்சுப்பர் என அழைக்கப்பட்ட கணபதியார் சுப்பிரமணியம் (மத்தள பயிற்றுனர்) க.எல்லிபொல்லர்,(இவர் காலம் 1820 ற்கு முன்பின்னாக அமைந்தது).எல்லிபொல்லரின் மகன் மத்தளச்செல்லப்பர் ,செல்லப்பாவின் மகன் நடராசா போன்றோரும் ம.வல்லிபுரம் இவரது சீடன் செல்லமாக பிள்ளையார் என அழைக்கப்படுபவராகிய கலை வாரிசு மு.விக்னேஸ்வரநாதன் போன்றோரும் வேறு சிலரும் அவ ரரவர் திறைமைகளைக்கருதி பாத்திரப்பெயர்களாலேயே அழைக்கப்பட்டனர்.அவ்வாறு அழைக்கபெற்றோர் அநுமன் இராமலிங்கம் வேலுப்பிள்ளை,கீசகன் வே. கந்தையா,அருச்சுனர் சின்னப்பு செல்லையா, வீமன் வைத்திலிங்கம் கந்தையா ,பாடகர் சுப்பிரமணியம் அமிர்தலிங்கம் இவர்கள் கூத்துக்கலையுள் இருந்த காலத்தில் வே.நாகலிங்கமும் கலைசெயற்பாட்டுடனே விளங்கியவர்.இன்னும் சிலர் சிறுசிறு பாத்திரங்களை ஏற்றனர்.

.
முதியவர்கள் இறந்தனாலும்,புதியவர்கள் நுழையாததினாலும் கூத்துக்கலை கைவிடப்படலாயிற்று.இந்த இடைவெளி நீண்டு கொண்டிருக்கையில் காந்திஜி கிராம முன்னேற்றச்சங்க செயலாளராக இருந்தவரும் முதலாம் தர அரச உத்தியோகத்தராகவும் இருந்த செ.பரராசசேகரம் அவர்கள் கூடத்துக்கலைக்குப் புத்துயிர் அளிக்க தலைக்கப்பட்டனர்.சங்க உறுபினரை வேண்டினார் அவர்களும் இசையவே அண்ணாவியார் வே.நாகலிங்கம் பயிற்றுனர் ஆனார்.தருமபுத்திர நாடகம் மீண்டும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து வேறுபல நாட்டுக்கூத்துக்களும் இடம்பெறலாயின. பிரதம் பாடகராக சுப்பிரமணியம் அமிர்தலிங்கம் இருந்து வந்தார்.
.
வே.நாகலிங்கம் அண்ணாவியாராக தொழில்பட்டந்தனால் திருவாளர்கள் க.நாகப்பு,கி.சிவலிங்கம்,முருகுப்பிள்ளை பழனிமலைச்சாமி,ச.நா. தணிகாசலம்பிள்ளை, பொ.பஞ்சாட்சரசிவம், வே.பரமநாதபிள்ளை, வீ.கோபாலசண்முகம்பிள்ளை,மா.வ.கானமயில்நாதன், வே.பேரின்பசிவம், கை,நாகராசா,நா.இராசரத்தினம்,இரா சத்தியவான் ,பொ.குலவீரசிங்கம், சி.குணவீரசிங்கி,வே.தவநிருபசிங்கம்,வே,நச்சினாக்கினியசிவம் என்போர் ஆட்டங்களை கற்றுகொண்டனர்.
.
இ.இராசரத்தினம்,வி.சிவலோகநாதன்,மு.புஸ்பராசா,சி.ஆறுமுகம்.க.சிவநாதன்,தி.லோகேஸ்வரன்,ந.லோசபேசன் இவ்வாறு பலர் தொடர்ந்தும் நாட்டுக்கூத்தை ஆடி வந்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் பெரும்பதவிகளில் இருக்கின்றனர்.எவ்வாறு நோக்கினும் இவரது சீடர்கள்,சீடர்களுக்கு சீடர்கள் என ஒர் வரலாறோ நீள்கின்றது.

.
நாட்டுக்கூத்து சிறப்பாக அமைந்தபடியால் பலரது பாராட்டுக்களை பெற்றமையாலும் கிராம முன்னேற்ற சனசமூக நிலையங்களில் சமாச விழாவிலே பங்கு கொண்ட ஒரே ஒரு நாட்டுக்கூத்து ஆனமையாலும் காந்திஜீ கிராம முன்னேற்றச்சங்கமும் பொதுமக்களும் இணைந்து பாராட்டு விழா ஒன்றை ஒழுங்கு செய்தனர்.விழா சிறப்பாக நடந்தேறியது.விழாவிலே நான்கு பெரியார் கௌரம் பெற்றனர்.இவர்களிடத்து பல்வேறு சிறப்புக்கள் இருந்த போதும் மூவரை கலைக்காகவும் ஒருவரை சமூகத்தொண்டிற்காகவும் பாராட்டி விழாவெடுத்தனர் மக்கள்.

.
அமரர்களான
01.வே.நாகலிங்கம் அண்ணாவியார்
02.வேலுப்பிள்ளை –பழம்பெரும் அநுமன் ஆட்டக்காரர்.
03.சி.செல்லையா –பழம்பெரும் அருச்சுனன் ஆட்டக்காரர்.
04.வைத்திய கலாநிதி (இரணவைத்தியம்) க.குமாரசாமி – பொதுத் தொண்டு.

.
நாகலிங்கம் அவர்கள் அண்ணாவியாராக இருந்து குருக்கேத்திர நாடகம் இந்திரகுமார நாடகம் முதலியவற்றை பயிற்றுவித்ததுடன் கிராமியக்கலைவடிவங்களையும் பேணிவந்துள்ளார்.அவை.
.
01.புரவி ஆட்டம் – தாளக்கட்டுடன் சேர்ந்த ஆட்டம் (இது வேறு பொய்க்கால் ஆட்டம் வேறு)புரவி ஆட்டத்திலே இணைப்புரவியாட்டம்,தனிப்புரவியாட்டம் எனவும் பகுப்பு உண்டு.
02.கரகாட்டம்.
03.பூத ஆட்டம்
04.கும்பச்சூரன் ஆட்டம்.
05.காவடி ஆட்டம்.
06.தயிர் முட்டி அடித்தல் ஆட்டம்.
இவற்றோடு ஊஞ்சற்பாட்டு (சிவனும் உமாதேவியுமாக இருவர் அலங்காரம் செய்து பலகையில் அமர்ந்திருப்பர். சிவனாக இருந்து வந்தவர் கதிரேசு குழந்தைவேலு.தேவியாக இருந்தவர் பெயர் தெரியவில்லை.)

.
கப்பற்பாட்டு கிராமியப்பாட்டு முதலியவற்றையும் அண்ணாவியார் பேணி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1979.11.30 அமரத்துவம் அடைந்தார்.பின்னர் கலைஞர்களான க.நாகப்பு செ.நடராசா, வே.தவநிருபசிங்கம் ,வ.யோகானந்தசிவம் போன்ற பலரும் ஊர்பெரியவர்களின் அனுசரணையோடு நாட்டுக்கூத்து நூற்பிரதிகளை பேணி வந்த ஓய்வு பெற்ற அதிபர் திரு.அ.முருகவேள் அவர்களை தலைவராக ஏற்றுக்கொண்டு ஒரு குழுவாக தொழிற்பட்டனர்.
.
நாகலிங்கம் அண்ணாவியார் காலத்திற்கு பின்னர் அண்ணாவியாரின் சீடனான எழுத்தாளர்,கலைஞர் க.நாகப்பு ஆட்டப்பயிற்சி அண்ணாவியாக இருந்து வந்தார்.கலைக்குழுவான ‘’நாட்டுக்கூத்து அபிவிருத்திக்குழு ‘’1995 இல் இடம்பெற்ற இடப்பெயர்வாலே சிதறுண்டு போக ஊர்வந்து சேர்ந்த தலைவரும் புதிய இளைஞர்களும் ஒன்று சேர்ந்து இயங்குகின்றனர்.
.

இதனால் உற்சாகம் அடைந்த இளஞர்கள் பல்வேறு கலைகளையயும் பயின்று வருகின்றனர்.குடும்பச்சொத்துக்களாக இருந்த கலைவடிவங்கள் பலருக்கு அறிமுகமாகின்றன.
அண்ணாவியார் மகன் இதுவரைகாலமும் என்னைபோன்றோர் மட்டும் மாற்றுக்கலை வடிவங்களை தெளிந்து, தேர்ந்து ,பயின்று கொள்ள வழிகாட்டியாக இலைமறைகாயாக முற்றிப்பதமான நிலையில் இருந்தவர்.கோதறப்பழுத்த மதுரமே கனிந்து இன்று பலரும் அறிய இத்துறையை வளர்க்கும் எண்ணத்துடன் வெளிவந்தமை கலைப்பெரும்பயனேயாகும்.
.
‘’கலைத்தாய் அலங்காரம் பெறுவாளா..’’
.
.
.

பிந்திய 5 செய்திகள்

அமரர் காலாபூசணம் நாகப்பு அவர்களின் கலையுலக வாழ்க்கை.... சிறந்ததொரு எழுத்தாளனாக நாட்டுக்கூத்தின் நடிபாகமான வீமன் பாத்திரத்திற்கென்றே உரித்தானவராக திகழ்ந்தார். . 1960களின் நாட்டுக்கூத்தில் ஈடுபாடுகொண்டு வ...
முதுதமிழ்ப் புலவர்.மு.நல்லதம்பி. முதுதமிழ்ப்புலவர் அவர்கள் 13.09.1896 ல் யாழ்ப்பாணம் சிந்துபுரத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார்  பெயர் முருகுப்பிள்ளை தாயார் பெயர் தங்கம்மை .இவர் தனது...
பன்முகக்கலைஞர் பஞ்சாட்சரம் அவர்களுடனான செவ்வி(தொடர்ச்சி…)... சிந்துபுரத்தின் முன்னைய தலைமுறையின் கூத்துக்கலைஞர்களில் தற்போது வாழும் கலைஞர்கள் சிலரில் இவரும் ஒருவர்.சிந்துபுரம் எனும் கொள்கையில் கடும் பற்றுக்கொண்ட...
பன்முகக்கலைஞன் பஞ்சாட்சரசிவம் அவர்களுடனான செவ்வி.... நாட்டுக்கூத்து,இசை,ஓவியம்,சிற்பம் என தற்புதுமையான பன்முகக்கலைஞர் திரு.பஞ்சாட்சரசிவம்.புலம்பெயர் மண்ணில் வசித்து வரும் எம் கிராமத்து மூத்த கலைஞர்.எம் க...
மத்தள பூபதி நடராசா அவர்களது கலைச்சுவட்டிலிருந்து….....   1960 பின் நாட்டுக்கூத்தில் அரங்குப்பிரவேசம் செய்தார்.1975,1976 களில் முறையே குருக்கேத்திர நாடகம்,இந்திரகுமார நாடகம் ஆகிய நாட்டுக்கூத்துக்களை...