இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

“செவிடன் காதில் ஊதிய சங்கு” – **சிந்துபுர இரகசியம்** பகுதி – 03

வெளிநாட்டு உறவுகளாக இருந்தாலும் சரி, உள்நாட்டு உறவுகளாக இருந்தாலும் சரி, அன்று தொட்டு இன்று வரை  நாம் அனைத்து நல்லது கெட்டதும் அறிந்திருந்தபோதும் ஏதோ ஒரு காரணத்திற்காக வாயடைந்து மட்டுமே நிற்கின்றோம்.

இது இன்று நேற்று அல்ல, 1960 காலம் தொட்டு எமது கலாச்சாரமாகிவிட்டது. “ஊரில் ஒரு பிரச்சனை” வெளிநாட்டு உறவுகளுக்கு அது ஒரு செய்தியாகிவிடுகிறது, உள்நாட்டு உறவுகளுக்கு அதுவே நியதியாகிவிட்டது. யாராலும் எதையும் இங்கே செய்து விடமுடியாது. வெறும் விமர்சனங்களுடன் அவை மறந்து போய்விடும், இல்லையெனில் மறைக்கப்பட்டுவிடும்.

யாரும் எதையும் கேட்க துணிவற்று போய்விட்டோம். என் இப்படி..? எதற்காக..? என்ற கேள்விகளை எழுப்ப பயந்திருக்கின்றோம். இது தனியே ஒரு சார்பாக மட்டும் அல்ல, பொதுவாக எல்லோரையும் கேட்கப்படவேண்டிய கேள்வி. சமுகத்தின் ஒரு அங்கத்தவராகிய நமக்கு அது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட.

வெளிநாட்டில் இருந்து காசு கொட்டுகிறது, அள்ளுறவன் அள்ளிக் கொள்கிறான். ஆண்டியாய் இருப்பவன் இன்னும் ஆண்டியாகவே இருக்கிறான். இது தான் இன்றைய காலம். தவறு வெளிநாட்டு உறவுகள் மீதா.? இல்லை அள்ளுறவன் மீதா..? இல்லை ஆண்டியாய் போகிறவன் மீதா.?

கொடுப்பவன் காரணமோ, கணக்கோ, நீதியோ கேட்பதும் இல்லை. ஏமாந்து போவான். கவலைப்படுவதை தவிர எதுவும் செய்வதும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்பது தான் உண்மை.

அன்பான.., வெளிநாட்டு உறவுகளே..!

இங்கே உங்களை தவறு சொல்லவில்லை. நிங்கள் பிறந்த மண்ணின் மேல் வைத்திருக்கும் பாசம், “என் கிராமத்தை நான் சிறப்புற செய்யவேண்டும்” என்ற அந்த மேலான உங்கள் எண்ணம் ஆகியவற்றை யாராலும் ஈடுகட்ட முடியாது. மனத் தூய்மையுடன் இரு கைகளால், மனதில் ஊரின் எதிர்காலக் கனவுகளை சுமந்து, உங்கள் உடலை வருத்திய வேர்வைத் துளிகளை விறைக்கும் குளிரில் பணமாக்கி ஊருக்கு வழங்கி மகிழ்வடைகிறீர்கள். அந்த நன்றிகடன் எப்போதும் மறுக்க முடியாதது,மறைக்கவும் முடியாதது.

ஆனால் நிங்கள் கொடுத்த உதவி, அங்கே நிங்கள் காணும் கனவை நினைவாக்குகிறதா என்பதை சற்று சிந்தித்தலும் அவசியம் என்பதையே நாம் கூற முற்படுகிறோம்.

பக்தியின் காரணம், கோவில்களுக்காய் பணத்தைக் குவிக்கிறோம். அதைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால் அந்த பக்தியின் விளைவு கிராமத்தின் எதிர்காலத்தை ஈடேற்றுவதாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதை நாம் சிந்தித்ததுண்டா.?

ஒரு நாள் தனியே அமர்ந்து கணக்கிட்டுப் பாருங்கள், நிங்கள் கொடுத்து எவ்வளவு? அதனால் வாழ்க்கையில் பெற்றுக்கொண்டது உங்களுக்கே புரியும், நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று. கோவில்களுக்கு பணம் கொடுப்பது தவறு என்று வாதிட நாம் முற்படவில்லை. மாறாக கோவில்களின் பெயரால் கிராமத்தின் எதிர்காலத்திற்காக செயல்படுங்கள் என்பதையே நாம் மன்றாடுகிறோம்.

கோவில்களில் திருவிழாக்கள் பூசைகள் தேவைதான். அப்போது தான் ஒரு கிராமத்தில் மலர்ச்சியொன்று குடிகொள்வதாய் உணர முடியும். அதை ஒரு அளவோடு நிறுத்திகொண்டு அடுத்த விடயங்களை சிந்திக்கவேண்டும். ஆனால் நாம் செய்வது அளவுக்கு அதிகமானதும், அநாவசியமானதுமாகும் என்பதையும் உணரவேண்டும்.

கோடிக்கணக்கில் கோவில்கள் மீதுகொட்டும் பணத்தின் ஒரு சிறுபகுதியை உணவற்றவருக்கு கோவிலின் பெயரால் உணவளித்து பாருங்கள். அதுதான் கடவுள் மீது நீங்கள் கொண்ட உண்மையான பக்திக்கு உதாணரமாகும். கடவுளும் உங்களுக்கான சந்தோசத்தை கொடுப்பதாய் உணரமுடியும்.

அதை நாம் சிந்திக்காதவரை, நமது பக்தியை யாரோ ஒருவர் தவறாக பயன்படுத்திக் கொள்வே முற்படுவார். அப்போது அதைத் தடுக்கவும் சிலர் முற்படுபவர்கள், கிராமதில் கடவுளுக்கு எதிரானவர்கள் என்ற பட்டத்தையே அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். காரணம் நமது சிந்தனைப்போக்கு அவ்வாறு எம்மை வளர்த்துவிட்டது.

இது செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் இருக்கும் பலருக்கு… ஆனாலும் இது சிலரது வாழ்வாதாரத்துக்கும் வருமானத்துக்கும் ஊதும் சங்காகவும் போய்விடலாம்…

இரகசியம் பரகசியமாகும்…..

**உத்திரபுத்திரன்**

 

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெள...
நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?... நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒர...
V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்…!!... வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்ப...
பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்...