இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

பூந்தி லட்டு

கடலை மாவு

தேவையானப் பொருள்கள்:

 1. கடலை மாவு – 2 கோப்பை,
 2. சர்க்கரை – 3 கோப்பை,
 3. நெய் – கால் கோப்பை,
 4. முந்திரி(உடைத்தது) – கால் கோப்பை,
 5. திராட்சை – கால் கோப்பை,
 6. தண்ணீர்- 2 கோப்பை,
 7. ஏலப்பொடி – அரைத் தேக்கரண்டி,
 8. லட்டு கலர் – 2 சிட்டிக்கை.

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • கடலை மாவுடன் நீரை ஊற்றி அதில் கலர் பொடியை சேர்த்து நன்கு கரைக்க வேண்டும்.
 • கரைத்த மாவின் பதம் தோசை மாவின் பதம் போன்று இருக்க வேண்டும்.
 • பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • எண்ணெய் நன்கு காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை லட்டுக் கரண்டி அல்லது சல்லடைக் கரண்டியால் எடுத்து  நன்கு காய்ந்த எண்ணெயில் ஊற்ற வேண்டும்.
 • பூந்தி நன்கு முத்து முத்தாக விழ வேண்டும்.அடுப்பின் அனலை மிதமாக எரிய விட வேண்டும்.
 • பூந்தி நன்கு வெந்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அனைத்து மாவையும் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • மற்றும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகுவை அதாவது சர்க்கரையுடன் நீ்ரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
 • கொதித்ததும் மிதமான சூட்டில் பத்து நிமிடம் சர்க்கரை பாகுவை வைக்க வேண்டும்.
 • இதில் தனியே எடுத்து வைத்துள்ள பூந்தி, ஏலப்பொடி மற்றும் நெய்யில் வறுத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
 • கைகளில் சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு கைப் பொறுக்கும் சூட்டில்  சிறு சிறு உருண்டையாகப் பிடிக்க வேண்டும்.
 • இப்போது அனைவரும் விழாக்காலங்களில் விரும்பி உண்ணும் லட்டு தயார்.

குறிப்பு:

 •   லட்டு பிடிக்க சரியாக வராவிட்டால் அதனுடன் சிறிது சூடான நீர் சேர்த்து லட்டு உருண்டை பிடிக்கலாம்.

மருத்துவக் குணங்கள்:

 • கடலை மாவில் இயற்கையாகவே புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
 • உதாரணமாக ஒரு கப் கடலை மாவில் 178 கலோரிகள் மற்றும் 3 கிராம் கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது.
 • கடலை  மாவை பலவிதமான உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.
 • கடலை மாவில் உள்ள வைட்டமின் ”பி-6” சத்து உடலில் உள்ள சிவப்பணுக்களை சீராக இயங்க வைக்கிறது.
 • மேலும் முகத்தில் உள்ள பரு, சரும வறட்சி, அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருப்புப் புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்றவற்றை இவைக் குணப்படுத்த வல்லது.
 • இத்தகைய நன்மை நிறைந்த பொருள் பூந்தி லட்டில் இருப்பதால் நாம் இவற்றை ருசித்து சாப்பிடலாம்.

“விழாக்காலம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டுதான் அத்தகைய சிறந்த இனிப்பு வகையான “லட்டுவை” நாம் அனைவரும் விரும்பி உண்போம்; மகிழ்ந்து வாழ்வோம்”.

 

பிந்திய 5 செய்திகள்

தொட்டாற்சிணுங்கி சூப் தொட்டாற்சிணுங்கி தேவையான பொருள்கள்: தொட்டாற்சிணுங்கி வேர் நீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய...
“சமையல் குறிப்புகள் “ -குழம்பில் தேங்காய் பயன்படுத்தும்போது.. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை ...