இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

நாடு கடத்தல்களும் பரவிவரும் வதந்திக்கான மூலங்களும்…..

பிரான்ஸில் இருந்து பாரிய அளவில் தமிழர்கள் நாடுகடத்தப்படுவதாக அண்மைக்காலமாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அவற்றில் எந்த வித அடிப்படையும் இல்லை என்பதே உண்மை. சிலர் தமது தனிப்பட்ட விருப்பின் பெயரில் குடிவரவு அமைச்சின் உதவியோடு நாடு திரும்பி இருக்கிறார்கள். அவர்களே நாடுகடத்தப்பட்டதாக வதந்திகள் கட்டவிழ்த்தப்பட்டிருப்பதும் உண்மை.

.
பாரிய அளவில் எந்த வித நாடுகடத்தப்பட்டதற்கான ஆதரங்களும் இதுவரை எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை.ஏனெனில் ஊடகங்கள் அரசின் சகல நடவைக்கைகளையும்  கழுகுக்கண்களுடன் அவதானித்துக்கொண்டுருக்கின்றன. அத்தோடு அரசிடமிருந்து அவ்வாறான எச்சரிக்கைகளே ,அறிவிப்புக்களோ வெளியிடப்பட்டதற்கான செய்திகளும் இல்லை.

.
பிரான்ஸ் அரசை பொறுத்தமட்டில் அதன் வரலாற்றுப்போக்கில் பாரிய எண்ணிக்கையில் நாடுகடத்தும் சம்பவங்களை நிகழ்த்தியது இரண்டே இரண்டு தடவை தான்.

.
ஒன்று இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னர் நாசிகள் நாடுகடத்தல்.மற்றையது அண்மையில் 2011ல் ருமேரியர்களை நாடுகடத்தியது.அதிலும் ருமேனியர்களின் நாடு கடத்தல் என்பது அந்த நாட்டினுடனான ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் நடைபெற்ற ஒன்று .குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ருமேனியர்கள் 10 மாதத்தில் நாடுகடத்தப்பட்டிருந்தனர்

.

deportation_18

 

இரண்டாம் உலகப்போரில் நாசிகளின் நாடுகடத்தப்படும் படம்

 

ருமேனியரின் நாடுகடத்தலுக்கான  காரணம் அவர்களின் சட்ட விரோத,மற்றும் திருட்டு நடவடிக்கையாகும்.ருமேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் எல்லைக்கட்டுப்பாடு கிடையாது. எனவே அவர்கள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் பிரான்சிற்குள் ஊடுருவியிருந்தனர்.அத்தோடு பிரான்சில் 10 திருட்டுச்சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் அதில் 6 ல் அவர்களின் கைவரிசை இருந்தது.

ஆனால் தமிழர்கள் அவ்வாறான நடவடிக்கைகள்  எதிலும் ஈடுபடவில்லை என்பது யாவரும் அறிந்ததே.

.
1400316_3_1abb_le-texte-du-5-aout-2010-stipule-que-300

   2011 ல் ருமேரியர்கள்(ROM )நாடுகடத்தப்படும் படம்

 

அரசியல் தஞ்சம் கோரி பிரான்சிற்கு (alise politique)  வந்தவர்கள் அவர்களின் அரசியல் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னும் தொடர்ந்து வசிக்கக்கூடிய சட்ட நெகிழ்வுகளும், நிர்வாக நடைமுறைகளும் பிரான்சில் ஏராளமாக இருக்கிறது.தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் மீள் தஞ்சக்கோரிக்கை(réexamen) கோருவதற்கான சட்ட வழிவகைகள் காணப்படுகிறது.அத்தோடு தஞ்சக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டவர்கள் மருத்துவ வசதிகளை பெறக்கூடிய வசதிகளும் அவர்களுக்காக இலவச மருத்துவக்காப்புறுதியும் (Aide Médical Etat) பிரான்ஸ் நாட்டில் நடைமுறையில் இருப்பதை மறுக்க முடியாது.

.

உண்மையில் தஞ்சக்கோரியை நிராகரிக்கப்பட்டவர்களை வெளியேற்ற வேண்டுமாயின்  இவ்வாறான நடைமுறைகளில் அரசு  முதலில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறான கட்டுப்படுகளை அரசு மேற்கொள்ளவில்லை.அவை தொடர்ந்து எந்த வித கட்டுப்பாடுகளும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டு  வருவது யாவரும் அறிந்ததே.

.
இவ்வாறான மனிதாபிமான நடவடிக்கைகள்  தொடர்ந்து கொண்டு இருக்கும் போது நாடுகடத்தல் என்பது முரணான செய்தியே.

.
பிரான்சை பொருத்தவரை மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் நாடு. எனவே” எடுத்தேன் கவிழ்த்தேன்” என்று இவ்வாறான விடயங்களில் நடவடிக்கை எடுக்க முடியாது.

.
இவ்வாறான நடவடிக்கை எடுப்பதாயின் பாராளுமன்றின் அனுமதி பெற வேண்டும்.இதற்கு முதல் நடந்த இரண்டு நாடுகடத்தல்களும் பாரளமன்றத்தில் பாரியளவில் விவாதிக்கப்பட்டது.அத்தோடு இவ்வாறான நாடுகடத்தல்கள் பற்றிய செய்திகள் உண்மையாக இருந்தால் ஊடகங்கள் அரசை ஒரு வாங்கு வாங்கியிருக்கும்.ஏனெனில்  பிரஞ்சு  அரசின் ருமேனியர்களின் நாடுகடத்தலை ஊடகங்கள் சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தது.இது பிரஞ்சு அரசின் மனிதாபிமான பெறுமானங்களை காயப்படுத்தியும் இருந்தது.

.
அண்மையில் ஓர் இணையம் சில படங்களையும் இந்தச்செய்தியோடு வெளியிட்டிருந்தது.அந்தப்படங்கள் கலே (calais) எனும் இடத்தில் பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையவிருந்த குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டதற்கான பழைய  படங்களே.

.
எனவே தமிழர்கள் பிரான்சில் இருந்து நாடுகடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை.
ஆனால் குற்றச்செயல்கள் செய்யும் வதிவிட அனுமதியற்றவர்களை பிரான்ஸ் நாடுகடத்திய சம்பவங்கள் சில நடைபெற்றிருப்பது உண்மை.அதில் சில தமிழர்களும் அடங்குவர் அவ்வளவே.

.
ஐ.எஸ்.ஐ.எஸ் வன்மைவாதிகளிக்கு எதிரான நடடிக்கைகளில் பிரான்ஸ் பெரும் பங்கு வகிப்பதால், அவர்களால் ஏற்படும் ஆபத்துக்களை சமாளிப்பதற்காக பிரான்சின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.எனவே தான் பொது இடங்களில் பாரியளவில் சோதனை நடவடிக்கைகள் நிகழ்த்தப்படுகிறது.இந்த சோதனை  நடவடிக்கைகளை  முடிச்சு போட்டு தமிழர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என வதந்திகள் பரப்பப்படுகிறது.

.

இது இவ்வாறிருக்க முன்னாள் உள்துறை அமைச்சரும் இன்றைய பிரதமருமான மானுவல் வாஸ்(manuel valls) அவர்கள், பிரான்சில் வதிவிட அனுமதி இல்லாமல் இருக்கும் குடும்பங்களையும்,தனி நபர்களையும் ஆராய்ந்து அவர்களுக்கு முறையான வதிவிட அனுமதி (régularisions de sans papier) அளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று பாரளுமன்றில்  கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.அதனடிப்படையில் கடந்த ஆண்டுகளை விட 50% மான அதிகரிப்போடு வதிவிட அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக உள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

. 7771100420_les-regularisations-des-sans-papiers-en-2013

 

(2012 ல் 23294 பேருக்கும் 2013 ல் 35204 பேருக்கும் வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருகிறது. 2012 ஐ விட 2013ல் 11910 பேருக்கு மேலதிகமாக வதிவிட அனுமதி வழங்கப்படிருக்கிறது இது 51% அதிகரிப்பாகும்)

.

 

 

எனினும்…. ஐரோப்பிய நாடுகள் குடியேற்ற வாசிகளை கட்டுப்படுத்த முழு அளவிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.28.10.2014 அன்று பிரேசிலில் இதற்கான முக்கிய மாநாடொன்று நடைபெற்றும் உள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எல்லைகளை பலப்படுத்தி உள் வரும் குடியேற்ற வாசிகளை கட்டுப்படுத்த பாரியளவில் செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளன.எனவே  எதிர்காலங்களில் குடியேற்ற வாசிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் வருவது பாரியளவில் தடுத்து நிறுத்தப்படும்.

.

immigration-illegale-europe_lacroix_moyen

 

சட்ட விரோத குடியேறிகள் ஐரோப்பாவிற்குள் ஊடுருவும் வழிகளை மேற்படி படம் காட்டுகிறது.

.

இது சம்பந்தப்பட்ட செய்தி ஒன்று குறிப்பிட்ட கூட்டம் நடைபெறுவதற்கு முன்பே எமது சிந்துபுரம் இணையத்தில் வெளி வந்திருந்தது வாசகர்கள் அறிந்ததே..

பிந்திய 5 செய்திகள்

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..... வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடை...
வ.வி.க கலைவிழா ஐந்தாவது ஆண்டாக பிரான்சில்.... பிரான்சு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும், பொது மக்களும் இணைந்து நடாத்தும் கலைவிழா வரும் ஞாயிறு 31.07.2016 அன்று நடைபெற இருக்கிறது. எமது சமூக இளை...
பிரான்ஸ் VSC வருடாந்த விளையாட்டு விழா. பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொது மக்களும் இணைந்து நடாத்தும் வருடாந்த விளையாட்டு விழா வரும் ஞாயிறு 15.05.2016 அன்று நடைபெறவுள்ளது. ஆ...
VSC பிரான்சின் வருடாந்த பொதுக்கூட்டம் 2015.... பிரான்ஸ் வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27 திகதி நடைபெறும் என கழகம் அறிவித்துள்ளது. . அக வணக்கத்துடன் காலை ...
சிந்துபுரக்கலைகள்-சூரனாட்டம்.(விழியம் இணைப்பு)... சூரனாட்டம். முதன்முதலில் சிந்துபுரம் வீயோடை இலுப்பையடி முத்துமாரியம்மன் கோவில்களில் பல தலைமுறைக்கு முன்பாகவே தொன்றுதொன்று ஆடப்பட்டு வந்தது.இதே போன்...