இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல்-திரு.ஐயாத்துரை சிறீஞானநாதன்.

அமரர்.ஐயாத்துரை சிறீஞானநாதன்                                       ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

கந்தசஸ்டி சூரன் போர்களும் களமிறங்கும் சூழ்ச்சி போர்களும் – Mr. எவிடன்ஸ் ஏழுமலை

 

வணக்கம் மகா சனங்களே.. என்னடா ஓருத்தன் புதுசா வந்து வணக்கம் சொல்லுறானே என்டு யோசிக்காதிங்கோ, நானும் உங்கட ஊரான்தான், கனக்க கதைச்சா மாரடைப்பு வருமாம் என்று வெளியில கதைக்கிறாங்கள் அதான் பாருங்கோ நான் அதிகம் கதைக்கிறதில்ல. என்னடான்னா இந்த ஊருல நடக்கிறத பாத்தா சும்மாவே மாரடைப்பு வந்து செத்துடுவம்போல இருக்குங்க. அதுதான் றோட்டுல நிண்டு புலும்பிட்டு இருந்தன், .

.

 

இந்த பெடியள் இழுத்துக் கொண்டந்து, அண்ணே என்ன றோட்டில புலம்பிறியள் ஏதோ நெட்டில புலம்புங்கோ எல்லாருக்கும் கேக்கும் எண்டாங்கள். அதான் இங்க வந்தன், என்ன பற்றி சொல்லுறண்டா என்ட பேரு எவிடன்ஸ் எழுமலை. என்னாட பேரு இப்படி ஒரு மாதிரியா இருக்கு எண்டு நினைக்காதிங்க, இந்த ஊருல நடக்கிறத நான் யாருக்கும் சொன்னா அதுக்கு எவிடன்ஸ் இருக்கானு கேக்கிறாங்க பாருங்கோ. அதான் என்ற பெரிலையே எவிடன்ஸ்ச வச்சுடன். . எலே இப்ப களவெடுக்கிறவனும் , தப்புபண்ணுறவனும் எவிடன்ஸ் வச்சுடா பண்ணுறான்.

.

 

நவின உலகமெல அவன் அவன் நசுக்கிடாமா பண்ணிடுபோயுடுறான். அப்புடியே எவிடன்ஸ் காட்டினாலும் நாங்க என்னத்தான் பண்ணிக் கிழிக்க போறம் சொல்லுங்க. ஒ அப்புடியா  எண்டு அடுத்தவேலையைப் பாக்க போயிடுவம். இங்க பாருங்க நான் யாரை குத்திக்காட்டலைகோ, பிறகு எனக்கு போன் எடுத்து சுடுவன் கொல்லுவன் எண்டு பயப்பிடுத்தாதிங்கோ பிறகு நான் இந்த நாட்டவிட்டே ஒடனும் பாருங்கோ. .

.

அய்யோ என்ற கதையில நான் சொல்ல வந்த விசயத்தே மறந்துட்டன் பாருங்கோ. என்னண்டா பாருங்கோ… இந்த கந்த சஸ்டி வந்தாலே முந்தி பெரும் கொண்டாட்டம் பாருங்கோ. அதிலையும் சூரன்போர் எண்டா எங்கட பொடியள் எல்லாம் சால்வை ஒண்டை கட்டிட்டு சும்மா அப்புடியே கம்பிரமா ஒரு நடையில வருவாங்கள் பாருங்கோ. பாக்கவே நல்லா இருக்குமங்கோ அப்ப நிறை பொடியள் இருந்தாங்கள் ஊருல இப்ப எங்க, எல்லாரும் வெளிநாடு எண்டு ஒடிட்டாங்கள்.

.

இருக்கிறதுகள் தான் இப்ப என்ன செய்தாலும். . ஆனா பாருங்கோ என்னதான் பொடியள எதிர்த்தாலும், பேசினாலும் இப்படி சில விசயங்களுக்கு அவங்கண்ட கால்ல போய் விழத்தான் வேண்டி இருக்கு இந்த கோவில் காரங்கள். சும்மாவா சொன்னாங்க இளஞர்கள் தான் நாட்டின் துண்கள் எண்டு. சூரன் போருனா சூரன தூக்க பொடியளும், முருகனைத்துக்க கொஞ்சம் என்னைமாதிரி வயசானதுகளும் அங்க வந்து நிப்பினம் பாருங்கோ. . ஆனா பாருங்கோ எங்கட ஊருல இரண்டு முருகன் கோவில் பாருங்கோ. அதால பெடியளத் தேடி இரண்டு கோவில் காரங்களும் போய்டுவாங்க பாருங்கோ.

.

அந்த காலத்தில பாருங்கோ எல்லாரும் ஒற்றுமையா இருந்ததால ஒரு நேரத்த குறிச்சு முதல் ஒரு கோவில் அடுத்தது மற்ற கோவில் என்று சூரன் ஆட்டுவினம். பெடியள் சொல்லுற நேரத்துக்கு ஏற்றமாதிரிப் பாருங்கோ இந்த ஜயர் மாரும் பூஜையை அந்த நேரத்துக்கே பண்ணிடுவாங்க. . அப்ப சூரன் கொம்பு பிடிக்க எண்டு என்னமாதிரி கொஞ்சம் கட்டுமஸ்தா இருக்கிற, கொஞ்சம் பெடியள அதட்டி கிதட்டி கட்டுப்படுத்துற ஆக்கள விடுவாங்க பாருங்கோ. அதுக்கு எண்டு சில எழுதப்படாத விதிகளை வச்சு இருக்கினம் பாருங்கோ, கொம்பு பிடிக்கிறவங்க பெடியள் மத்தியில கொஞ்சம் மரியாதைக்குரியவங்களா இருப்பாங்க பாருங்கோ, செல்லமா இவயளை “அண்ணா” எண்டு அடை மொழி போட்டுத்தான் பெடியள் குப்பிடுவாங்கள். பாருங்கோ. .

.

அப்ப எங்கட ஊருக்காரங்களுக்கு ஆனுமானட்டம், குதிரையாட்டம் மாதிரி சூரனாட்டமும் பாருங்கோ ஒரு கலை. இவங்கட்ட சூரண் ஆட்டத்தப்பாக்கவே பெரும் படையா சனங்க வரும். அப்ப எல்லாம் நல்லாத்தான் போய்கொண்டு இருந்திது பாருங்கோ. ஆனாப் பாருங்கோ அந்த நேரம் இந்த கொம்பு பிடிக்கிறவங்கள் தான் பாருங்கோ பெடியள வழி நடத்திறவங்களா மதிக்கப்படுவினம். ஆனாப் பாருங்கோ அந்த பதவிக்கு எல்லாரும் இருக்க முடியாது. ஒரு முண்டு நாலு பேருதான் அப்புடி இருப்பாங்க.  உண்மையாப் பாருங்கோ இது ஒரு நல்ல வழிநடத்து முறை. .

.

ஆனா பாருங்கோ எல்லாம் அப்பவே பிழைக்க ஆரம்பிச்சுட்டுது பாருங்கோ. இந்த கொம்பு பிடிக்கிறதிலையும் பெடியள வழி நடத்துறதிலையும் இருக்கிறவங்கள்ள “சித்தர் அண்ணர்” எண்டு ஒருத்தர் இருந்தார் பாருங்கோ. அவர்ல பெடியள் நல்ல மரியாதை வச்சு இருந்தாங்கள் பாருங்கோ. பெடியளுக்கு ஒரு பிரச்சனை எண்டாலோ ஊருக்கு ஒரு பிரச்சனை எண்டாலோ பாருங்கோ முதல்ல வந்து நிக்கிற ஆள் அவருதானுங்கோ. அவர் சொன்னா அடுத்த பேச்சு பெடியள் பேச மாட்டங்கள்.  இதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லத்தானே உங்களுக்கு. .

.

அந்த நேரம் பாருங்கோ. அவரு பெடியள் வச்சு இருந்த மரியாதையை அவர் தன்ட சொத்த வேலைக்கு பயன்படுத்திட்டார்பாருங்கோ. அதானுங்கோ… அவருக்கும் அந்த முருகையா கோவில் கார முதலாளிக்கும் இருந்த சொந்த பகையில பாருங்கோ அந்த கோவில்லை சூரன் பெடியள் இனி தூக்க கூடாது எண்டு சொல்லி நிப்பாட்டிட்டார் பாருங்க. இந்த மனிசன் கதையக்கேட்டு பாருங்கோ பெடியளும் அந்த நேரம் ஒரு துடிப்பில சூரன் துக்காம விட்டுட்டம் பாருங்கோ. . அதால பாருங்கோ பெடியளுக்கும் அந்த கோவிலுக்கும் ஒரு விரிசல் விழுந்துட்டுது பாருங்கோ. அந்த நேரத்தில மற்ற முருகன் கோவில் சூரன் போர பெரிசா செய்து கலக்கிடாங்கள் பாருங்கோ. இந்த கீரைக் கடைக்கு எதிரா இருந்த கீரைக் கடையை முடிட்டா யாவாரம் மற்றகடையில தானே சூடு பிடிக்கும். இது அந்த நேரக் கதையுங்கோ.

.

சரி அத விடுங்கோ அதுக்கு பிறகு இவருக்கு என் நடந்தது எண்டு தெரியல பாருங்கோ ஊர் பிரச்சனையில பொடியள பகைச்சுக்கிட்டார்பாருங்கோ. . அதால பாருங்கோ பெடியள் வச்சு இருந்த மரியாதை எல்லாம் இவரே மூட்டை கட்டி கொழுத்திப்போட்டுட்டார் பாருங்கோ. இந்த ஊர் பிரச்சனையில நம்ட ஊர் பெடியளுண்ட உயிரை எடுக்கிற ஒரு கேவலமான வேலையும் பாத்தது எல்லாருக்கும் தெரியும் தானேங்கோ. இப்படி இவரு மோசமா பெடியள  பகை்க வைச்சு அவர இப்படி கைப்பொம்மையா ஆட்டுறது எல்லாம் யாரு எண்டு எல்லாருக்கும் தெரியும் தானே. ஆனா அந்ததாள் பாவமுங்கோ மனிசன் விசயம் தெரியாம போய் விழுந்துட்டுதுங்கோ. .

.

சரிங்கோ இப்ப நம்மட விசயத்துக்கு வருவோம். இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க போற சூரன் போருக்கு முன்னுக்கு பெரும் பகிடிகள் நடக்குது பாருங்கோ. முந்தி முருகையா கோவில்ல சூரன் தூக்காதீங்க என்று பெடியள சொன்ன மனுசன் இப்ப என்னடான்னா அந்த கோவில் சூரன் துக்கிற பொறுப்பை எடுத்து இருக்காரு பாருங்கோ. அதால பாருங்கோ பெடியள வாங்க எண்டு கூப்பிட்டா பெடியள் இத எங்க கேட்டுடுவாங்களோ எண்டு பயந்து மனுசன் வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திக்கு அந்த கோவில் சார்பா கடிதம் ஒண்டு கொண்ட குடுத்து இருக்கு பாருங்கோ. .

.

ஒருவேளை அந்த கோவில்ல மனுசனுக்கும் உரிமை எடுக்க பிளான் இருக்கோ தெரியல. மனிசனும் புத்திசாலிதான் பாருங்கோ. காலம் எப்புடி மாறி இருக்கு பாருங்கோ. ஆனா பாருங்கோ பெடியல ஒட்டுமொத்தமா முருகன் கோவில்லதான் இப்பவரைக்கும் சூரன் ஆட்டிட்டு வாருயினம்பாருங்கோ. இந்த முறை என்ன செய்யினம் எண்டு தெரியல பாருங்கோ….

.

இது என்னமோ ஓஞ்சு இருக்கிற பிரச்சனையை மறுபடி கிண்டி விடுற விளையாட்டு மாதிரி இருக்குதுங்க. இந்த பெடியள் இப்ப புத்திசாலியள் பாருங்க. இப்பத்த பெடியள் சும்மா இல்ல கெட்டிக்காரங்கள் ம்ம். . ஆனா பாருங்கோ இந்த ஊர் பிரச்சனையில பாருங்கோ முருகன் கோவில்  ஊர் மக்கள் பக்கம் நிண்டுது பாருங்கோ. அதால பெடியள் எல்லாம் அந்த கோவிலுக்கு நல்லா உதவி செய்யிறாங்க. ஆனால் இந்த முருகையா கோவில் பாருங்கோ பெடியள ஏமாத்தினாமாதரி சில வேலையை செஞ்சுட்ட்டதால அதால பெடியள் பெரிசா அந்த கோவிலை கண்டுகிறதில்ல. .

.

ஆனா இன்னொரு விசையம் பாருங்கோ. நேற்று அந்த முருகன் கோவில் றோட்டால போய்க்கொண்டு இருந்தன் அப்ப அந்த சிவன்கோவில் பாட்டையும். தங்கட கோவில் பாட்டையும் கலந்து போட்டத கேட்டனான். அப்பதான் யோசிச்சன் பாருங்க இந்த ஊரில வாழுறண்டா இரண்டு பக்கமும் கோல் போட்டுத்தான் ஆகணும் பாருங்க. இரண்டு பக்கமும் சலாம் போட்டாத்தான் பாருங்க நம்ம பிழைப்பு நல்லா ஓடும் போல. இந்த ஒரே கொள்கை, ஒரே செயல் எல்லாம் வேலைக்காது போல. .

.

கொள்ளையை உருவாக்கின கோவில் காரங்களே கொள்கையில நிக்க பயப்பிடேக்கே நாங்கள் எல்லாம்  எந்த முலைக்கு பாருங்கோ. அதான் நான் என்ன பண்ணபோறன் என்டா பாருங்க. இரண்டு கோயிலுக்குமே போப்போறன் பாருங்க. நமக்கு வெட்கம், மானம் சொரணையை விட இந்த சுண்டல், கடலை, வடை தான் முக்கியம் பாருங்க. அங்க என்ன நடந்தா நமக்கு என்னங்க. இப்ப என்ன நடந்த நமக்கு என்னங்க. நமக்கு இரண்டு இடத்தையும் சாப்பாடு தானே முக்கியம். .

.

றோட்டில நிண்டு இத தாங்க உளறிட்டு இருந்தன். றொட்டில உளறினாலும் பாக்கிறவன் என்ன பயித்தியம் எண்டுட்டு பேசாம போவானுக. இந்த நெட்டில வந்து உளறிட்டன். எவன் எவன் கல்லெறியிறானோ…. எவன் எவன் கோல் பண்ணி மிரட்டுறானோ…. கந்தா நீதான் காப்பாத்தணும்…. அதவிட பாருங்கோ இதுக்கும் எவிடன்ஸ் இருக்கானு கேட்டு குடைவினம் பாருங்கோ இவயலை விட அவங்கள் பரவாயில்லைங்கோ. எதையும் சொல்லி நமக்கு வம்ப விலைக்கு வாங்கிறதே வேலையா போச்சு…. .

.

சரி நான் கிளம்பபோறங்க…. மிண்டும் இன்னொரு உளறலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து “வடை” பெறும் “சே” அந்த ஓசி வடையை ஞாபகப்படுத்தி அது வாய்யில வந்துட்டுது சாறி.. விடை பெறும் நான் உங்கள் Mr. எவிடன்ஸ் எழுமலை….