இறுதியாக இணைக்கப்பட்டவை

மரண அறிவித்தல் திருமதி லோகநாயகி தயானந்தா

திருமதி லோகநாயகி தயானந்தா பிறப்பு : 12 செப்ரெம்பர் 1950 — இறப்பு : 12 மே 2017 யாழ். அராலி வடக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை போரூரை ...

மேலும் வாசிக்க

வட்டு- விளையாட்டுக் கழகம் பிரித்தானியாவின் சித்திரைத் திருவிழா..

வட்டுக்கோட்டை விளையாட்டு கழகமும் (பிரித்தானியா ) வட்டூர் உறவுகளும் இணைந்து நடாத்தும் சித்திரை திருநாள் விளையாட்டு விழா எதிர்வரும் 23.04.2017 அன்று நடைபெறவுள்ளது. எம் மண்ணின் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் ...

மேலும் வாசிக்க

பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு வணக்கம்.

12ம் ஆண்டு நினைவு வணக்கம் வண்ணமிலா உன் எண்ணங்களையும் வஞ்சமிலா உன் பேச்சுகளையும் திண்ணம் கொண்ட உன் சிந்தனைகளையும் தீங்கிலா உன் செய்கைகளையும் கன்னம் வைத்து கடலலைகள் கவர்ந்தெடுத்து பசியாறியதோ கலையில் ...

மேலும் வாசிக்க

உண்மையை தட்டுத்தடுமாறி ஒத்துக்கொண்டார் விளையாட்டுக் கழக முன்னாள் தலைவர்..!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தின் காணி உரிம மாற்றம் தொடர்பாக எழுந்த பிரச்சனை கழகத்தை தடைவிதிக்கும் வரை கொண்டு சென்றதும், அதன் மூலம் பலவிடயங்கள் தெளிவானதும் பலரது விசனத்துக்குள்ளானதும் ...

மேலும் வாசிக்க

மரண அறிவித்தல் - திரு . செல்லத்துரை லிங்ககுரு.

திரு. செல்லத்துரை லிங்ககுரு தோற்றம்: 15 /07/ 1938                               ...

மேலும் வாசிக்க

நடப்பது என்ன..? நாம் கதைப்பது என்ன..? தீர்வு என்ன..? இதனால் லாபம் யார் அடைகிறார்கள்..?

நமது சமுகம் எவ்வளவு அறிவில் வளர்ச்சி பெற்றாலும் நமது சமுகத்தை  சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை விளங்கி விழிப்படையும் சக்தியை பெறவில்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனையின் நீதியான ...

மேலும் வாசிக்க

V.S.C கழக பதிவும்,காணி கையகப்படுத்தும் சதித் திட்டமும் அம்பலம்...!!

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்தை பதிவு செய்ததற்கான ஆவணம் எமக்கு கிடைத்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிட்ட கழகம், வலிகாமம் – மேற்கு என்பதாகவே பதியப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கதாகும் பாராளுமன்ற விவகார விளையாட்டுத்துறை ...

மேலும் வாசிக்க

பிரச்சனையை உருவாக்கியது யார்..? V.S.C தலைவருடனான சந்திப்பு

வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகத்தின் செயற்பாடுகள் பிரதேச செயலகத்தால் இடைநிறுத்தி வைக்கப்பட்டது அதன் விசுவாசிகள் மட்டத்தில் பல்வேறுபட்ட வாதப்பிரதி வாதங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் தலைவரை தொடர்பு கொண்டது சிந்துபுரம் ...

மேலும் வாசிக்க

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு. வேலையைக் காட்டினார் அரசியல் பிரமுகர்

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகத்திற்கு தடை உத்தரவு  ஒன்றை பிறப்பித்துள்ளதாக  சங்கனை பிரதேச செயலக செயலாளர் ஒப்பமிட்ட கடிதம் ஒன்று விளையாட்டுக் கழகத்திற்கு  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ...

மேலும் வாசிக்க

உறுதியான நிலையில் வட்டுக்கோட்டை விழையாட்டுக் கழகத்திற்க்கு எதுவும் இல்லை

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை கழக நிர்வாகத்திற்கு எதிராக கையெழுத்து துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. 2013 ஆண்டுக்கு பின்னர் கழகத்தின் எத்தனை நிர்வாகம் மாற்றப்பட்டாலும் ...

மேலும் வாசிக்க

அநியாயங்களிடையே பிறக்கிறான் ‘சே-குவேரா’ ! – கட்டுரை

“கோழையே, சுடு! நீ சுடுவது ‘சே’வை அல்ல; ஒரு சாதாரண மனிதனைத்தான்!” தன் கால்தடம் பதியும் நிலபரப்பு எல்லாம் என் தேசமே என்று முழங்கிய ‘சே’வின் இறப்பில் பிறந்த செவ்வரிகள் இவை. ‘சிரிக்கும் கண்கள், புகைக்கும் உதடுகள், சீவி முடியாத தலைமயிர்,பயணித்து கொண்டேயிருக்கும் கால்கள், ஓயாத போராட்டங்கள்’ இதுவே எர்னெஸ்டோ ‘சே’குவேராவின் முத்திரைகள். உலக வரலாற்றில் ‘சே’வின் போராட்ட பேச்சுகள் அழுத்தமானவை,அவையாவும் ஏகாதிபத்தியத்தை துரத்தி அடிக்கக்கூடியவை. இப்படியிருந்தது அவரின் பேச்சுகள் “ரஷ்ய ஏவுகணைகள் கியூபாவில் இறங்கினால் அது முதலில் அமெரிக்க நகரங்களையே குறிவைக்கும்.

.

அமெரிக்கா ஒரு கழுதைப்புலி, இதனின் கொடிய ஏகாதிபத்தியத்தை வேரறுப்பேன்”என சவாலிட்டார்.’ அமெரிக்காவால் பாதிக்கப்படும் சிறிய நாடுகளுக்கு உதவுவது ரஷ்யாவின் கடமை’என ரஷ்யாவுக்கும் அறிவுரைத்தார். சே’வின் கால்தடங்கள் லத்தீன் அமெரிக்க பகுதிகள், ஆப்பிரிக்க நாடுகள்,ஆசிய நாடுகள் என அநியாயங்களின் பிறப்பிடத்தில் எல்லாம் பதிந்தது. கியூபா விடுதலையை கண்டதே ‘சே’வின் புரட்சியால் தான். “சாவை எண்ணி ஒருபோதும் நான் கவலை கொள்வதில்லை, என் பின்னால் வரும் தோழர்கள் என் துப்பாக்கியை தூக்கிக் கொள்வார்கள்.

.

தோட்டாக்கள் தொடர்ந்து சீறும் !” என்ற ‘சே’மரணத்தை கண்ட அஞ்சிடாத மனிதராகவே வாழ்ந்து வந்தார். இப்படியான ‘சே’ஒரு மருத்துவர்.ஆஸ்துமாவின் பாதிப்போடே அடர்ந்த காடுகளில் போராடியவர். ‘மனிதனுக்கு மனிதன் எவனும் இங்கு அடிமையில்லை’ என்பதே ‘சே’வின் கோட்பாடு. இவ்வுலகத்தை குலுக்கிய பெருந்தலைவர்களின் ஆயுட்காலம் மிகக்குறைவே, அவர்களது மரணமும் மர்மமானதே.ஆனால் அவர்களது சித்தாந்தத்திலேயே அநியாயங்களின் உலகம் தோற்கடிக்கப்படுகின்றது.

.

இவ்வுலகத்தை குலுக்கும் எந்தவொரு தேசப்போராட்டமும் வர்கப்போராட்டமும் இவர்களை மறப்பதில்லை.மாவீரம் என்பது வீரத்தால் முடிசூடப்படுவதல்ல, எண்ணத்தால் – செயல்பாட்டால் – மனிதத்தால் முடிசூடப்படுவது. இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.’சே’வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையே சிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது.

.

மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை, விதைக்கிறது ! இன்றும் கியூபா பள்ளி மாணவர்கள் பள்ளிகளில் தினந்தோறும் சொல்வது என்ன தெரியுமா ? ‘எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தார்கள்,நாங்கள் ‘சே’வை போல் இருப்போம்’ என்பதுவே ! .நாமும் ‘சே’வைப் போல் இருப்போம் மனிதனாக…நல்ல தோழனாக.

.

நன்றி – கு.விபுலன்

கொடிகாமம்

பிந்திய 5 செய்திகள்

சிந்துபுரக்கலைகள்-சூரனாட்டம்.(விழியம் இணைப்பு)... சூரனாட்டம். முதன்முதலில் சிந்துபுரம் வீயோடை இலுப்பையடி முத்துமாரியம்மன் கோவில்களில் பல தலைமுறைக்கு முன்பாகவே தொன்றுதொன்று ஆடப்பட்டு வந்தது.இதே போன்...
சிந்துபுர கூத்தரங்கின் வெளிப்பாடும் வரலாறும் (பகுதி 3).... கலைகள் மிளிர்ந்தோங்கும் சிந்துபுரத்தின் தனித்துவக்கலையான நாட்டுக்கூத்து எம் இணையத்தில் கடந்த காலங்களில் இரண்டு பகுதிகளாக வெளிவந்திருந்தது. அதன் தொடர்ச...
சமுக,பொருளாதார அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் விளையாட்டுக்கழகம்.... வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் தனது மைதானம் தொடர்பான பிரச்சனைகளை இன்று வரை முடிவுகாணத நிலையில் தனது காணி வழக்கை வைத்து புதியதொரு பிரச்சனையை சமுகத்தில...
சிந்துபுர கூத்தரங்கின் வெளிப்பாடும் வரலாறும் (பகுதி 2).... சிந்துபுரத்தில் நிலவிய விலாசக்கூத்து. வட்டுக்கோட்டைச் சிந்துபுரக்கூத்து மரபில் முன்பு வழக்கில் இருந்த விலாசக்கூத்து சிறப்பானதாக வரலாற்றுப் பக்கங்களில...
பெயர்ப்பலகைக்கு எதிரான வழக்கின் இரண்டாம் ஆண்டு.... சிந்துபுரம் எனும் பெயர் பதித்திருந்த வட்டுக்கோட்டை பொதுச் சந்தைக்குரிய பெயர்ப்பலகையை நீக்கச்சொல்லி இலங்கையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இன்றுடன் இரண...