Sinthupuram.com

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மழுவைராயர் வீதி, வட்டுவடக்கு சிந்துபுரப் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த திருமண நிகழ்வின் திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்வு வட்டு முத்துமாரியம்மன் Continue reading

 

‘அப்பச்சி மாமி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஆத்மா இன்று நம்முடன் இல்லை.

.

அன்னாரின் திடீர் இழப்பு எம் சமூகத்தின் ஓர் உறுதியான, துணிவாக ஒரு பெண் அடையாளத்தின் இழப்பாகும்.

.
பெண்ணியல்  சரி, சமூக முன்னேற்றத்திலும் சரி தன்னிகரற்ற ஓர் தையலாக விளங்கி வந்தார்.

.
2004ல் இலங்கையில் சுனாமி தாக்கியிருந்த வேளை அது. எம் கிராமத்து இளையோரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப்பணிகள் செய்யப்பட்டுருந்தது.அந்த நிவாரணப்பணிக்காக ஒரு தொகை பணத்தை தந்தது மட்டுமல்லாது,சமைக்கப்பட்ட உணவுகளை விநியோகிக்க தனி ஒரு பெண்ணாய் பார ஊர்தியில் ஏறி வந்து சமைத்த உணவுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்து ,தன் பங்கிற்கும் சேவை செய்து கடமையாற்றிய தாயுள்ளம் கொண்டவர்.

.

Arumuthurai kulakathevi 21-09-2014
தான் சார்ந்த குடும்பக்கோவிலின் சர்ச்சைகளை எல்லாம் பொருட்படுத்தாது ‘ஞான வைரவருக்கு’ நித்திய பூசை செய்து தன் ஆன்மீக ஈடு பாட்டையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாது ஓர் பெண் பூசகராய் துணிந்து நின்றார்.

.
ஓர் சாதாரண ஆணே செய்யத் தயங்கும் பூசை சம்பந்தப்பட்ட காரியத்தை, ஓர் பெண்ணாக நின்று செய்து வந்தார்.இந்து மதத்தின் சாத்திர சம்பிரதாயங்களை எல்லாம் உடைத்து ,பெண்களும் பூசாரி ஆகலாம் என்பதை எம் கண்முன்னெயே துணிச்சலுடன் நிகழ்த்திக்காட்டியவர்.
.
சமூக விடுதலை என்பது பெண் விடுதலையும்,சமத்துவமும் தான் என்பதை கோவில் கருவறையில் நின்றபடி செவிட்டில் அறைந்தாற் போல் செய்து காட்டியவர்.எம் சமூகத்தின் வரலாற்றில் முதல் பெண் பூசாரியாய் இவருக்கு என்றும் வரலாற்றில் தனித்துவமான இடம் உண்டு.
.
அத்தோடு ஓர் சிறப்பு தேர்ச்சி பெற்ற வயலின் கலைஞராகவும் அறியப்பட்டவர்.
.
சிந்துபுரம் எனும் கருத்தியலில் அசையாத பற்றை அன்னார் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வந்தார்.ஞான வைரவர் கோவில் ஒலிபெருக்கியில் சிந்துபுரம் எனும் பெயரை ஒளிக்கவிட்டு தன் சமூக விடுதலைக்கான பற்றுதலையும் வெளிப்படுத்தினார்.
.
2005 ல் சிந்துபுர இளையோர் சிந்துபுர பெயர் மீள் சூட்டளுக்கு ஆதரவு கேட்டு அப்பச்சி மாமியின் முற்றம் சென்று நின்ற வேளை, இன்முகம் கொண்டு வர வேற்று, தன் கணவரின் படத்தை காட்டி அதன் கீழ் தான் சிந்துபுரம் என்ற முகவரியையே இட்டிருப்பதாய் கூறி இளையோரின் கையை இறுகப்பற்றி ஆதரவு தெரிவித்தார்.

.

தன் கணவரின் நினைவாக சிந்துபுரம் காந்திஜீ சனசமூக நிலைய நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்களையும் வழங்கியிருந்தார்.

.
அன்னாரின் துணிச்சல்மிகு செய்ற்பாடுகள் எம் கிராமத்து மற்றைய பெண்களுக்கு ஓர் பாடம்.அவர் வழி நின்று விடுதலை பெறுவோம்.
.
சமூக விடுதலைக்கும், பெண்ணியல் சுதந்திரத்திற்கும் அடையாளம் மிக்க ஓர் பெண்மணியாக எம் கிராமத்தில் வலம் வந்தவர் இன்று ஆராத்துயிலில்…… !
.
அன்னாரின் ஆன்மீக, கலை,சமூக, பெண்ணியல் செயற்பாடுகளை நினைவு கூறுவதில் எம் இணையம் பெருமை கொள்கிறது,சிரம் சாய்த்து வணங்கவும் செய்கிறது.
.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்………!!!
.
ஓம்….சாந்தி…. ! சாந்தி….. ! சாந்தி…… !

 

 

 

சிந்துபுரக் கலைஞர்களின் பின்னணி கலைவடிவில் உருவான பத்திப்பாடல் காணொளி. வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு சந்நிதி முருகன் ஆலய 2014ம் ஆண்டிற்கான மகோற்சவத்தை முன்னிட்டு DDTV தொலைக்காட்சியினால் Continue reading

வட்டு மேற்கு, வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருமைத்துரை குழகசோதி அவர்கள் 21.09.2014 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.  ஈமைச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும், இவ்வறிவித்தலை Continue reading

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாசினி சிவசிங்கராசா அவர்கள் 16-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.  இவ் அறிவித்தலை Continue reading

 

நேற்று முன்தினம் இரவு சிந்துபுரம் பிரதான வீதியும் தெல்லிப்பளை வீதியும் சந்திக்கும் சந்தியில் பெரும் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு இளஞர்களும் Continue reading

 

வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலய பரியாலன சபை உரிமை தொடர்பாக மறைமுகமாக சிறு பிரச்சனைகள் கடந்த காலங்களாக நடைபெற்று வந்த போதும் கோவில் திருவிழா அமைதியான முறையில் வருடாவருடம் நடைபெற்று Continue reading

யாழ். வட்டுக்கோட்டை வட்டுக்கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நேசம்மா தில்லையம்பலம் இளையதம்பி அவர்கள் 07-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். இவ் அறிவித்தலை Continue reading

 

யாழில் இருந்து ஒளிபரப்பாகும் DDTV தொலைக்காட்சியின் அணுசரணையில், எம் சிந்துபுர மண்ணின் கலைகளின் நிகழ்ச்சி ஒன்று இன்று இரவு செல்வச்சந்நிதி கோவிலில் நடை பெற ஏற்பாட்டாகி உள்ளது.

.
எம் மண்ணின் Continue reading

 

கோவில் உரிமையாளர்களிடையே ஏற்பட்டிருந்த பல்வேறுபட்ட பிரச்சனைகளை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பின்கள  மோதகமாமரப்பிள்ளையார் கோவில் திறக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

.
பூசைகளோ,வருடாந்த உற்சவமோ Continue reading

யாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், மழவைராயர் வீதி , வட்டு வடக்கு, சிந்துபுரம், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மாசிவசிங்கராசா அவர்கள் 30-08-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.

.

திருமதி Continue reading

 

எம் இளைய சமுதாயம் பற்றி ஆராயப்படும் போது புலம்பெயர் இளைய சமூதாயத்தை பற்றியும் பார்ப்பது அவசியமானது.குடும்ப சூழ்நிலையாலோ அல்லது போர்ச்சுழலாலோ எம் இளையோர் எம் மண்ணில் இருந்து பெரும் பொருட்செலவில் Continue reading

 

வட்டுக்கோட்டை இலுப்பையடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிலவிவரும் பிரச்சனைகள் தொடர்பாக ஆலய பரிபாலனசபையினருடன் ஒரு விசேட கலந்துரையாடலை திரு.வீ.கே.ஜெகன் அவர்கள் ஒழுங்கு செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் Continue reading

 

எமது சிந்துபுர மண்ணில் வாழ்ந்து எமது சமுகத்திற்கு அழியாத சேவை வழங்கிய கலைஞர்கள், சமுக சேவையாளர்கள், சமுகமுன்னேற்றவாதிகள், சமுகசேவைக் கல்வியளாளர்கள் என பலதரப்பட்ட நம்மூர் பெரியார்கள் தொடர்பான Continue reading

 

எம் மண்ணின் தனித்துவக்கலைஞனான மா.பாஸ்கருடைய  முழு நீளத்திரைப்படம் வஞ்சகம்.புலம்பெயர்  வாழ்வியலின் வலிகளை சுமந்த திரைக்காவியமாக வெகு விரைவில் திரையில் ஒளிர இருக்கிறது. ராணி படைப்பகத்தின் இரண்டாவது Continue reading

சத்தி FM இனால் வருடாந்தம் நடாத்தப்படும் மாபெரும் கலை நிகழ்வுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந் நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணம் முழுவதுக்குமான  மாபெரும் நிகழ்வுகளில்

ஒன்றாகும். 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருக்கும் கலைவடிவங்களை அழிய விடாது உலகமெங்கும் வாழும் மக்களுக்கு எடுத்துச் செல்லும் பாரிய நிகழ்வாகும்.

.

இந்த நிகழ்வு வருடாவருடம் நடைபெறுவதுடன், பங்குபெறும் கலைஞர்களுக்கு கௌரவமும் வழங்கப்படுகிறது. இக் கலை நிகழ்வுகளில் எமது கிராமத்தின் கலை நிகழ்வுகளான குதிரையாட்டம், மயிலாட்டம், அனுமனாட்டம், காவடியாட்டம் போன்றவை முன்னிலைவகித்து வருகின்றன .  அத்தோடு கட்ந்த ஆண்டு அதற்கான பரிசில்களையும் எமது கலைக்குழுக்கள் பெற்றுள்ளன என்பதும் இங்கு  குறிப்பிடதக்க விடயமாகும். மேலும் இவ்வருடம் இவ் விழாவில் எமது கலைவடிவங்கள் முதன்மை நிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

.

இக் கலை வடிவங்களை வழங்குவதற்காக திரு.நா. மீனேஸ் அவர்களின் வழிநடத்தலில் இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டு இன்றிலிருந்து  5 நாட்கள் நமது சொந்த வேலைகளை ஒதுக்கி நமது கலையை உலகமெங்கும் எடுத்துச் செல்லும் உன்னதமான செயற்பாட்டில் பங்கு கொண்டுள்ளனர். எமது கலைவடிவங்களை அழிய விடாது உலகறியச் செய்யும் செயற்பாட்டில் பங்கு கொண்டுள்ள எமது அனைத்துக் கலைஞர்களுக்கும் எமது கிராமம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகிறது.

 

சென்ற ஆண்டை போன்றே அனேக பரிசில்களை பெற்று வர எம் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

புகைப்படங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்>>>>> புகைப்படங்கள் <<<<<<<

 

எமது கிராமத்தின் முதன்மை பிள்ளாயார் கோவிலான பின்களமோதக மாமரப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உட்சவம் இந்த வருடம் இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. வருடாவருடம் ஆவணித்திங்களில் இங்கு அலங்காரத்திருவிழா Continue reading

 

நமது இளைய சமுதாயத்திற்குள் நடப்பது என்ன..என்ற ஆய்வறிக்கையில் இப்பகுதியில்  , கல்வி நிலையை தவிர்க்கும் நிலையில் வெளிநாட்டில் சொந்தங்களோ பந்தங்களோ கைகொடுக்கும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் சென்று Continue reading

 

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக மைதானத்தை செப்பனிடும் நோக்குடன் மண் நிரவி மட்டப்படுத்தும் வேலைத்திட்டம் கடந்த 13-08-2014 அன்று ஆரம்பமாகியிருந்தது. இம்மண் நிரவும் பணிக்காக பொதுமக்களிடமும் வீரர்களிடம் Continue reading

 

2013 ஆண்டு  வட்டுக்கோட்டை விளையாட்டுக்கழகம் மைதானத்தை பூனரமைக்கும் திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது. அதன் படி மைதானம் அகலிப்பதற்காக இலுப்பை மரங்கள் அகற்றப்பட்டு மைதானத்தை விஸ்திரணம் செய்யப்பட்டிருந்தது Continue reading

1 2 3 8